|
|||||
சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா |
|||||
![]() சென்னையில் முனைவர் மு. இளங்கோவனின் இசைத்தமிழ்க் கலைஞர்கள் நூல் வெளியீட்டு விழா
நாள்: 11.03.2023 காரி(சனி)க் கிழமை நேரம்: மாலை 5.30 மணி முதல் 7 மணி வரை இடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் மன்ற அரங்கு
நூல் வெளியீடு, சிறப்புரை: முனைவர் ம. இராசேந்திரன்,
வரவேற்புரை: பொறியாளர் சிங்கை இளங்கோ பங்கேற்போர்: ஏற்புரை: முனைவர் மு. இளங்கோவன் அனைவரும் வருக! அழைப்பின் மகிழ்வில்
நூல் அறிமுகம்: கடந்த ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழை நடுவணாகக் கொண்டு இயங்கிய இசைத்தமிழ்க் கலைஞர்களைப் பற்றி அறியும் ஆர்வத்தில் தேடியபொழுது சற்றொப்ப 5764 பேர் குறித்த பட்டியல் ஒன்றை உருவாக்க முடிந்தது. என்னொருவனிடம் இப்பட்டியல் இருப்பதைவிட, உலகத் தமிழர்களின் கையினுக்குக் கிடைத்தால் பட்டியலில் விடுபட்ட இசைத்தமிழ்க் கலைஞர்களின் பெயரும் இப்பட்டியலில் இணையும் என்பதால் இசைத்தமிழ்க் கலைஞர்கள் – நோக்கீட்டு நூல் என்னும் பெயரில் வெளியிட உள்ளோம். கடந்த ஈராண்டுகளாக இந்த நூலினை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். 304 பக்கம் கொண்ட இந்த நூலின் விலை 350 உருவா ஆகும். ஒற்றை வரியில் இசைத்தமிழ்க் கலைஞர்களின் சிறப்புகளை இந்த நூல் அடையாளப்படுத்துகின்றது. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நோர்வே உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள இசைதமிழ்க் கலைஞர்களின் பணிகளை இந்த நூலின் வழியாக அறிய இயலும். வாய்ப்பாட்டு அறிஞர்கள், கருவியிசை அறிஞர்கள், ஓதுவார்கள், இசையாய்வு அறிஞர்கள், இசைத்தமிழ்ப் புரவலர்கள் குறித்த விவரங்களும் இந்த நூலில் உள்ளன. |
|||||
![]() ![]() |
|||||
by Swathi on 09 Mar 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|