தேவையானவை :
1. கேழ்வரகு மாவு - 1 கப்
2. கோதுமை ரவை - 1 கப்
3. கெட்டியான தயிர் - 3 கப்
4. துருவிய கேரட் - 1 கப்
5. வேர்க்கடலை - சிறிது
6. கடுகு - 1/2 டீஸ்பூன் 7. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
8. கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
9. முந்திரி - சிறிது 10. கறிவேப்பிலை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, கோதுமை ரவை, துருவிய கேரட், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து, அத்துடன் தயிர் ஊற்றி, வேண்டுமானால் தண்ணீர் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, வேர்க்கடலை சேர்த்து தாளித்து, கலந்து வைத்துள்ள மாவில் ஊற்றி கிளறி, ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
3. பின்பு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கலந்து வைத்துள்ள இட்லி மாவை, இட்லிகளாக ஊற்றி வேக வைத்து எடுத்தால், சுவையான கேழ்வரகு கோதுமை ரவை இட்லி ரெடி!!!
|