தேவையானவை :
1. சுண்டைக்காய் வத்தல் – 3 டேபிள்ஸ்பூன்
2. புளிக்கரைசல் - ஒரு கப்
3. மிளகாய்த்தூள்- ஒரு டேபிள்ஸ்பூன்
4. மல்லித்தூள் – 2 ஸ்பூன்
5. கறிவேப்பிலை – சிறிதளவு
6. உப்பு – தேவையான அளவு
7. சின்னவெங்காயம் – 15 (நறுக்கியது)
8. தக்காளி – 2 (பொடித்தது)
9. நல்லெண்ணெய் – 25 மில்லி
10. கடுகு – அரை டீஸ்பூன்
11. வெந்தயம் – அரை டீஸ்பூன்
12. காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயம் – சிறிதளவு
செய்முறை :
1. வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, சுண்டைக்காய் வத்தல் சேர்த்து நன்றாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர் மீண்டும் அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் சின்னவெங்காயம், தக்காளி போட்டு வதக்கி, புளிக்கரைசல் சேர்த்து மிளகாய்த்தூள், மல்லித்தூள், சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடம் கொதிக்க விடவும்.
3. பச்சைவாசனை போனதும் இதில் வறுத்து வைத்திருப்பதைச் சேர்த்து உப்பு, பெருங்காயம், சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான சுண்டைக்காய் வத்தல் குழம்பு ரெடி.!!!
|