|
|||||
ஜிகிர்தண்டா (Jigirthanda) |
|||||
![]() தேவையானவை :
பால் - ஒரு லிட்டர் சர்க்கரை - 8 தேக்கரண்டி சைனா கிராஸ் - 4 தேக்கரண்டி ரோஸ் சிரப் - 1 தேக்கரண்டி நன்னாரி ஸிரப் - 1 தேக்கரண்டி ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) - 1 பால் கோவா - 2 தேக்கரண்டி
செய்முறை :
1. ஒரு லிட்டர் பாலை, சர்க்கரை சேர்த்து அடி கனமான வாணலியில் மெல்லிய தீயில் கொதிக்க விட்டு, ரோஸ் கலர் பவுடர் சேர்க்கவும். பாலை அரைலிட்டராக சுண்ட வைத்து ஆறியவுடன் பிரிஜ்ஜில் 6 மணி நேரம் வைக்கவும்.
2. சைனாகிராஸை சூடான நீரில் ஒரு கொதிவிட்டு இறக்கி, 2 மணி நேரம் வைக்கவும். 2 மணி நேரம் கழித்து ஜெல்லி போல உள்ள `சைனா கிராஸை' சிறு துண்டுகளாக வெட்டி, பிரிஜ்ஜில் 6 மணி நேரம் குளிர வைக்கவும்.
3. குளிர்ந்த பாலை முதலில் நீளமான ஒரு கண்ணாடித் தம்ளரில் பாதியளவு ஊற்றவும். இப்போது பாலின் மேல் ஜெல்லிகள் போல உள்ள சைனாகிராஸ் துண்டுகளைப் போடவும். பிறகு ரோஸ் ஸிரப், நன்னாரி ஸிரப் ஊற்றவும்.
4. தொடர்ந்து வெனிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்பை வைத்து அதன் மேல் பரவலாக பால்கோவாவைத் தூவி ஜில்லென்று கொடுக்கவும். |
|||||
Jigirthanda | |||||
Ingredients for Jigirthanda : Milk-1litre Sugar-8tbsp China Grass-4tbsp Rose Syrup-1tbsp Sarsaparilla syrup-1tbsp Ice-cream (vanilla)-1 Milk Cake-2tbsp
Method to make Jigirthanda : 1. Mix the milk with sugar and boil in a deep pan at low flame and add rose power with them. Boil the milk till it reduce to half in volume and let it come to room temperature. Then refrigerate this for 6 hours. 2. Boil the china grass with water and keep aside from stove for 2hours.After 2hours it will look like pieces of jellies. Cut the jellies into small pieces and put them for 6hours in refrigerator. 3. Now take glass. Pour some milk upto half of glass. Put the pieces of china grass with milk. Now pour the rose syrup, sarsaparilla syrup with milk. 4. Finally put a scoop of vanilla ice-cream and put the milk cake on top. Enjoy the drink. |
|||||
by yogitha on 28 Aug 2012 2 Comments | |||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|