LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

நான் சம்பாதிக்கும் பணம்

நான் சம்பாதிக்கும் பணம்

 

    ஒரு அழகிய நகரம், அந்த நகரத்தின் ஒரு பகுதியில் “அன்பு நகர்” என்னும் பத்திருபது வீடுகள் கொண்ட பகுதி. அங்கு தருமன், ராசம்மாள் என்பவர்களுக்கு யதுவன் என்னும் மகன் இருந்தான்.

   தருமனின் குடும்பம், அவனது தந்தையார் சம்பாதித்து வைத்த செல்வத்தால் ஓரளவு நல்ல வசதியாக இருந்தது, என்றாலும் யதுவன் அந்த சிறு வயதிலேயே செலவாளியாக இருந்தான்.

   அவனது தந்தை அடிக்கடி அவனிடம் சொல்லும் வார்த்தை ‘நாம் சம்பாதிக்கும் போதுதான் காசின் அருமை நமக்கு தெரியும்’ என்று சொல்வார்.

     இதை பற்றி எல்லாம், யதுவன் எப்பொழுதும் கவலைப்படமாட்டான், கையில் கிடைக்கும் பணத்திய எடுத்து செலவு செய்து விடுவான்.

     அந்த நகரின் பேருந்து நிலையத்தருகே பிச்சைக்காரன் ஒருவன் வசித்து வந்தான், அவன் யதுவன் பெற்றோருடன் அந்த பக்கம் செல்லும்போது பிச்சை கேட்பான், அதுவும் தருமனிடமோ, அவன் மனைவி ராசமாளிடமோ கேட்க மாட்டான். யதுவனிடமே வந்து கையேந்துவான்.

     யதுவன் அம்மாவின் கைப்பையிலோ, அல்லது அவனது சட்டைப்பையிலோ இருப்பதை எடுத்து அப்படியே கொடுத்து விடுவான், இது பிச்சைக்காரனுக்கு சந்தோசத்தை கொடுத்தது.

     இப்படியாக இரண்டு மூன்று வருடங்கள் ஓடிக்கொண்டிருக்க, யதுவன் கொஞ்சம் பெரிய்வனாகியிருந்தான். வழக்கம் போல பேருந்து நிலையம் செல்லும்போது அவனிடம் கை நீட்டிய பிச்சைக்காரனிடம் ஒரு ‘பத்து ரூபாய்’ தாளை போட்டான். பிச்சைக்காரன் வித்தியாசமாய் அவனை பார்த்து விட்டு சென்றான்.

    இன்னும் சில வருடங்கள் ஓடியிருக்க, வழக்கம்போல யதுவன் பேருந்து நிலையம் அருகில் சென்ற போது அதே பிச்சைக்காரன் அவனிடம் கையேந்தினான். யதுவன் ‘ஐந்து ரூபாய்’ தாள் ஒன்றை போட்டான். இன்றும் ஆச்சர்யமாக பார்த்தான் அந்த பிச்சைக்காரன்.

    அடுத்து இரண்டு மூன்று வருடங்கள் ஓடியிருக்க அன்று பேருந்து நிலையம் அருகில் வந்த யதுவனிடம் பிச்சைக்காரன் கை நீட்டினான். யதுவம் தன் சட்டைப் பையினுள் தேடி ‘மூன்று ரூபாய்’ காசுகளாக போட்டான். பிச்சைக்காரன் எதுவும் பேசவில்லை.

     அடுத்து வந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் பேருந்து நிலையம் அருகில் வந்த யதுவனிடம் பிச்சைக்காரன் கையை நீட்ட ஒரு ரூபாய் மட்டும் போட்டான்.

     பிச்சைக்காரன் யதுவனிடம் “தம்பி இது என்ன அநியாயம்” உங்களை சிறுவயதில் இருந்து பார்த்து வருகிறேன். அப்பொழுதெல்லாம் கைக்கு கிடைத்த பணத்தை அள்ளி கையில் கொடுப்பீர்கள், ஆதன் பின் கொடுப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இன்று வெறும் ‘ஒரு ரூபாய் காசை’ மட்டும் கொடுக்கிறீர்கள்.

     யதுவன் அவரை பார்த்து “ஐயா அன்று ‘கை நிறைய பணம்’ அள்ளி கொடுத்தது என் தாத்தாவின் பணம், அதன் அருமை எனக்கு தெரியவில்லை, அடுத்து நான் ‘பத்து ரூபாய்’ போட்ட பொழுது என் பெற்றோர் சம்பாதித்த பணம், கொஞ்சம் அதன் அருமை தெரிந்தது. அடுத்து ‘ஐந்து ரூபாய்’ போட்டது நான் சம்பாதித்த பணம், இதன் அருமை நன்றாக புரிந்தது. அடுத்த ‘மூன்று ரூபாய்’ போட்டது நான் அளவோடு செலவு செய்யும் பக்குவத்தை எட்டி உள்ளேன் என்பதை காட்டும் பணம், இந்த ‘ஒரு ரூபாய்’ என்பது ஒவ்வொரு ருபாயும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதை காட்டும் பணம்.

     பிச்சைக்காரனுக்கு புரிந்தது யதுவனுக்கு வாழ்க்கையில் எப்படி செல்வத்தை காக்கவேண்டும் என்று கற்று கொண்டுவிட்டான் என்பது.

     உண்மைதானே குட்டீஸ், சம்பாதிக்கும் ஒவ்வொரு பணமும் முக்கியம் என்பது அவரவர்கள் சம்பாதிக்கும் போதுதானே தெரிகிறது.  

Myself earn money
by Dhamotharan.S   on 25 Jun 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
மறக்க முடியாத நாள் மறக்க முடியாத நாள்
பேராசை பெருநட்டம் பேராசை பெருநட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.