தேவையானவை :
1. நீளமான பச்சை மிளகாய் - 6
2. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 3. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
4. மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
5. சிறிய பச்சை மிளகாய் - 2
6. மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
7. கடுகு - 1/2 டீஸ்பூன்
8. உப்பு - தேவையான அளவு
9. எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
10. எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை :
1. முதலில் பச்சை மிளகாயை ஒரு இன்ச் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, பச்சை மிளகாய்களை சேர்த்து, மிதமான தீயில் வதக்க வேண்டும். பின்னர் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, மூன்று நிமிடம் பச்சை மிளகாய் நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.
2. மிளகாயானது நன்கு வதங்கியதும், மிளகாய் தூள், மல்லி தூள், மாங்காய் தூள் சேர்த்து பிரட்டி விட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து, மிளகாயில் அனைத்து பொருட்களும் நன்கு ஒன்று சேரும் வரை வதக்கி இறக்கினால், சுவையான மசாலா மிர்ச்சி ரெடி!!!
|