LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

மேஜிக்

மேஜிக்

            என்னமா இருந்துச்சு தெரியுமா? சும்மா கையை ஆட்டிகிட்டே இருந்தாரு, “டுபுக்குனு” கையில பார்த்தா புறா நிக்குது, அது பட படன்னு சிறகை விரிச்சுகிட்டு நின்னுச்சு பாரு அசந்துட்டேண்டா. பெஞ்சில் உட்கார்ந்திருந்த தன் சகாக்களிட்ம சொல்லி கொண்டிருந்தான் குமாரு

         அங்க என்னடா சத்தம்?

         டேய் வாயை மூடுங்க, வாத்தியாரு வந்துடப்போறாரு, இவர்கள் வரிசையாய் உட்கார்ந்திருந்த பெஞ்சில் மூணாவதாய் வாத்தியாரின் பார்வை படும் இடத்தில் உட்கார்ந்திருந்த மணி எச்சரித்தான்

       குமாரு மூக்கில் வெள்ளையாய் வெளி வந்து கொண்டிருந்த சளியை புறங்கையில் துடைத்து கொண்டவன் அப்படியே சுவரில் தேய்த்து விட்டான். பெஞ்சில் சுவற்றை ஒட்டி கடைசியில் உட்கார்ந்திருப்பதில் இது ஒரு வசதி.

        வாத்தியார் இவர்கள் முன்னால் உட்கார்ந்து தலையை குனிந்தபடி இந்த மாசம் எவ்வளவு செலவு செய்திருக்கிறோம் என்று மன கணக்கு போட்டு கொண்டிருந்தார்.

       நாலாம் வகுப்பு டீச்சர் இன்று லீவு போட்டு விட்டதால், நாலு, அஞ்சு இரண்டு வகுப்பையும் ஒண்ணா பாத்துக்க வேண்டியிருந்தது. அதனால் அடிக்கடி இவரின் அஞ்சாம் கிளாஸ் வகுப்பை விட்டு பக்கத்து நாலாம் கிளாசுக்கு போய் பசங்களை மிரட்டி விட்டு மீண்டும் வந்து தன்னுடைய சம்பள கணக்கை போட்டு கொண்டிருந்தார். நானூறு ரூபாய் எங்கேயோ இந்த மாச செலவில் உதைத்தது. என்ன பண்ணுனோம்? என்று இரண்டு மூன்று நாட்களாக மனதுக்குள் போட்டு பார்த்து கொண்டிருக்கிறார், எப்படி செலவாச்சு? என்பதே அவருக்கு ஞாபகம் வரவில்லை. சரி தொலையுது என்று கணக்கை விட்டு விடவும் மனமில்லை.

       வாத்தியாரின் மிரட்டல் ஐந்து நிமிடம் மட்டுமே பயன்பட்டது., மீண்டும் வகுப்பில் சல சலப்பு தொடங்கி விட்டது. இந்த வகுப்பில் வாத்தியார் இருக்கும் போதே இப்படி சத்தமாய் இருந்தது, நாலாம் வகுப்பில் டீச்சரே இல்லாமல் எப்படி இருக்கும்? அங்கு ஒரே காட்டிரைச்சலாய் கேட்டது.

     சே…நிம்மதியாய் கணக்கு போட்டு பார்க்க விடறானுங்களா? எரிச்சலாய் நாற்காலிக்கு அருகிலேயே சாய்த்து வைத்திருந்த குச்சியை எடுத்துக்கொண்டு பக்கத்து கிளாசுக்குள் நுழைந்தார்.

    எலே..எந்திரிங்கடா? என்ண்டா ஒரே கரச்சலா இருக்குது, கையில் வைத்திருந்த குச்சியை முன்னால் போட்டிருந்த மேசையில் ஓங்கி அடித்தார். அடியின் சத்தம் வகுப்பை அப்படியே மெளனத்துக்கு கொண்டு போனது. அந்த மெளனத்தை தொடரவதற்கு ஏதுவாக டீச்சர் உட்காரும் நாற்காலியிலேயே உட்கார்ந்து அவ்வப்பொழுது குச்சியால் மேசையை தட்டி கொண்டிருந்தார். மனம் மீண்டும் அவர் கணக்குக்கு போயிருந்தது.

        வாத்தியார் பக்கத்து கிளாசுக்கு எழுந்து போன ஐந்து நிமிடத்தில் குமாரு மீண்டும் தன் ஊருக்கு வந்திருக்கும் மேஜிக்காரனை பற்றி சொல்ல ஆரம்பித்து விட்டான்.

         “அக்கா” ஒண்ணை அப்படியே கண்ணை மூடி நிக்க வச்சு கத்தியை வீசுறாரு பாரு ஒவ்வொண்ணும் சும்மா ஜிவ் ஜிவ்வுன்னு பறந்து போய் ஒரு கட்டையில சொருகி நிக்குதுடா. நான் கூட பயந்துட்டேன், அக்காவுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு,

          எத்தனை நாளுடா உங்க ஊருல மேஜிக் காட்டப்போறாங்க? ஒட்டி உட்கார்ந்து சுவாரசியமாய் கேட்டு கொண்டிருந்த வேலப்பன் கேட்டான்.

      தெரியலைடா, நேத்து எங்க அப்பன் கூட்டிட்டு போச்சு, இன்னைக்கும் போடுவான்னு நினைக்கறேன். நேத்து முத நாளுன்னு கூட்டம் நிறைய இருந்துச்சி, ஒரு ஆளுக்கு அஞ்சு ரூபாயுன்னு டிக்கட் எல்லாம் போட்டாங்க, எனக்கும், அப்பனுக்கும், அம்மாவுக்கும் டிக்கட், பாப்பா கை குழந்தைன்னு டிக்கட் வாங்கலை, பெருமையாக சொன்னான்.

     எங்க ஊருக்கு வருமாடா?

    தெரியலை, மேஜிக் நடத்தறதுக்கு முன்னாடி எங்க ஊரு பெரிய ஐயா பேசுனாரு, எல்லாம் காசு கொடுத்து இவங்களுக்கு உதவி பண்ணோனும்னு. அவங்களுக்கு எதுக்கு உதவி? நேத்து கூட ஒரு வெள்ளை பேப்பரை காமிச்சுகிட்டே இருந்தாரு, கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா நூறு ரூபாய் தாளா மாறிடுச்சு. அப்படி நிறைய காசு வச்சிருப்பாங்கல்ல..! அப்புறம் எதுக்குடா நாம உதவி பண்ணோனும்?

      நானும் உங்க ஊருக்கு வரட்டுமாடா? இன்னைக்கும் மேஜிக்கு நடந்தா நாம இரண்டு பேரும் போலாம், மூன்றாவதாய் உட்கார்ந்திருந்த மணி நானும் வாறேண்டா உங்க ஊருக்கு, மூணு பேருமா மேஜிக்கு பாக்க போலாம்.

     குமாருக்கு  அவர்களை வர வேண்டாம் என்று சொல்லவும் விருப்பமில்லை, நேத்தே அப்பன் மேஜிக் பாக்கறதுக்கு அஞ்சு ரூபா கேக்குறான் என்று மூக்கால் அழுதது, இப்ப இவனுகளையும் கூட்டிட்டு மூணு பேத்துக்கும் காசு கொடுன்னா, கை கால முறிச்சுடும், என்ன செய்யலாம்? யோசனையாய் தலையை சொறிந்தான்.

      அப்பன் காசு கொடுக்காதே, ஒண்ணு பண்ணலாம், சாயங்காலம் மணி வூட்டுக்கு போலாம், அவங்கப்பன் கிட்ட மணி காசு கேக்கட்டும், அவனப்பன் காசு கொடுத்துச்சுன்னா மூணு பேரும் எங்க ஊருக்கு வந்து மேஜிக் பாக்கலாம். அவர்கள் செட்டில் மணியின் அப்பன் மட்டும்தான் சீமை ஓட்டு வீட்டில் வசிக்கிறவன், பொட்டி கடை வைத்திருக்கிறவர்கள். குமாரு, வேலப்பன் வீட்டில் அப்பனும் அம்மாளும் கூலிக்கு போகிறவர்கள்.

       மணிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை, தன்னை நொந்து கொண்டான், பேசாமல் இருந்திருக்கலாம், குமாரும் வேலப்பனுமே பேசி முடிவெடுத்திருப்பார்கள். தான் அவசரப்பட்டு அவர்களுடன் வருவதாக கேட்டு தொலைத்து கடைசியில் மூவருக்கும் இவன் காசு புரட்ட வேண்டும். என்ன சொல்வது என்று விழித்தவன், பார்க்கலாம், எங்க அப்பன் கொடுக்குமான்னு தெரியலை, முணுமுணுத்தான். சும்மாவே அம்மா மருக்குச்சியால் விளாசி விடுவாள், இதுல இவனுகளோட போயி மேஜிக் பார்க்க காசு கொடு என்றால்..!

      அதற்கு பிறகு மணி வகுப்பில் உட்கார்ந்திருப்பதற்கே வேதனைப்பட்டான், இவனுகளை எப்படி கூட்டிட்டு போறது? வீட்டுக்கு போன உடனே  சாணி பொறுக்கி எடுத்து வர அனுப்பி வைப்பாள்…, இருந்தாலும் மேஜிக் பார்ப்பதற்கும் மனதுக்குள் உள்ளூர ஆசை இருந்தது.

      நாலு மணி அடித்ததும் பைக்கட்டை தூக்கியபடி குமாரும், வேலப்பனும் மணியோடு ஒட்டிகொண்டனர். மூவரும் பள்ளி காம்பவுண்ட் அருகில் வரும்போது ஹெட்மாஸ்டர் அறையின் வாசலில் நின்றவாறு “டேய் பசங்களா இங்க வாங்க”

      மூவருக்கும் தலைமயாசிரியரின் குரல் காதில் விழ “டேய் எச்.எம்” கூப்பிடறாரு, பயத்துடன் சொன்னான் குமாரு. திரும்பி பார்த்த அவர்கள் மூவரையும் அருகில் வருமாறு அழைத்தார். அவர் கையில் பிரம்பு இருந்தது.

     மூவருக்கும் சப்த நாடியும் ஒடுங்கியது, குமாரின் மூக்கில் இருந்து சளி கட்டுப்படுத்த முடியாமல்  வர ஆரம்பித்து விட்டது, துடைக்கவும் முடியாமல் எச். எம் வேற எதிரிலேயே நின்றவாறு கூப்பிடுகிறார், என்ன செய்வது? சட்டென பைக்கட்டை தோள் மீது வைத்து அப்படியே அந்த துணி கைப்பிடியிலேயே துடைத்தான்.

      சார்… பம்மியவாறு அவர் அருகில் சென்றனர் “ஏண்டா உங்க ஊருல மேஜிக் பண்ணறவன் வந்திருக்காங்களாடா?

     என்னமோ ஏதோவென்று பயந்தவாறு வந்த மூவருக்கும், சார் இப்படி கேட்டதும் பயம் காணாமல் போயி உற்சாகம் தொற்றி கொண்டது. குமார் பிரகாசமாக  “ஆமாங்க சார், நேத்து நானும் எங்க அப்பாவும், அம்மாவும் பாப்பாவோட போனோம் சார், ஒரு ஆளுக்கு அஞ்சு ரூபாய்ங்க சார்.

      சரி.. அவரை நாளைக்கு இங்க ஸ்கூல்ல வந்து என்னைய பார்க்க சொல்லு, நம்ம ஸ்கூல்ல மேஜிக் காட்ட சொல்லலாம், மறக்காம போன உடனே அவங்களை பார்த்து சொல்லிடணும் சரியா? சீக்கிரம் போங்க.

       குமார் இவர்கள் இருவரையும் கழட்டி விட பார்த்தான், பின்னே அவன் தானே ஸ்கூலுக்கு “மேஜிக் மேனை” கூட்டி வர போகிறவன், சரிடா மணி, நாங்க உன்ர ஊருக்கு வரலை, எச்.எம், மேஜிக் மேனை  நம்ம ஸ்கூலுக்கு வர சொல்ல சொல்லிட்டாரு, அதனால இன்னொரு நாளைக்கு உங்க ஊருக்கு வாறோம்.

       வேலப்பன் குமார் நம்மளையும் கழட்டி விட்டு விடுவான் என்று தெரிந்தது, தானும் ஒருவனாய் “மேஜிக் மேனிடம்” பேசலாம் இல்லையா? டேய் அதெல்லாம் முடியாது, நானும் உன் கூட வருவேன், நாம இரண்டு பேரும்தான் போய் பேசணும் சரியா?

     குமார் வேறு வழியின்றி தலையசைத்தான், இவனும் கூட இருந்தால் ஒரு தைரியம் இருக்கும் என்று நினைத்து கொண்டு.

     மணி இப்பொழுது நம்மையும் அவர்களுடன் கூப்பிட்டு போக மாட்டார்களா என்று எதிர்பார்த்து நின்றான்.

     டேய்..டேய்..நானும் வர்றேண்டா, அவங்க கிட்ட பேசுன உடனே நான் திரும்ப வந்துடறேன், கெஞ்சினான் நண்பர்களிடம்.

Magic
by Dhamotharan.S   on 16 May 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மந்திரியான காக்கை அண்ணாச்சி மந்திரியான காக்கை அண்ணாச்சி
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஏதோ ஒரு உதவி ஏதோ ஒரு உதவி
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.