|
||||||||||||||||||
வச்ச குறி தப்பாது |
||||||||||||||||||
வச்ச குறி தப்பாது எட்டாத உயரத்தில் ஏறியவர்கள் எல்லாரும் - வாய்ப்பு எப்பத்தான் கிடைக்குமென்று ஏக்கத்தில் இருந்தவர்கள்
சலனமே இல்லாமல் சாதிக் கையில் தெரியலையா சரித்திர நாட்களில் சான்றாக இருக்கலயா
வெட்டிப்பய பேச்செல்லாம் வேதனையை தந்திருக்கும் வேலு கம்பா பாஞ்சிருக்கும் ஊன சங்கை எல்லாம் ஓரங்கட்டி வச்சுவிடு ஓட்ட சட்டிய எல்லாம் ஒரு நாளு ஒதுங்கி விடும்
சோறு உண்டு வாழ்க்கையில சொல்லும்படி ஒன்னு இல்ல வீறுகொண்டு நடக்கையில வீண்பேச்சு என்ன செய்யும்
ஏழையா இருக்கேன்னு ஏளனமா நினைத்தாயோ! பாகற்கொடி போல படர காத்திருக்கேன்! அத்திப்பூ வாட்டம் என் உழைப்பு தெரியாது அர்ஜுனன் வில்லாட்டம் வச்ச குறி தப்பாது! கவிஞர் -வள்ளலார் மாணவன் -நாக
08/08/2020
|
||||||||||||||||||
vacha kuri thappaathu | ||||||||||||||||||
by Vallalar manavan on 18 Aug 2020 0 Comments | ||||||||||||||||||
|
||||||||||||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|
|