LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

ஏதோ ஒரு உதவி

ஏதோ ஒரு உதவி 

 

   அடர்ந்த காடு ஒன்று இருந்தது, அந்த காட்டை ஒட்டி சிறு கிராமம் ஒன்று அமைந்திருந்தது. அந்த கிராமத்தை சுற்றி இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்கள்.

     சுமார் நூறு குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றன. அந்த ஊரின் கடைசி வீட்டில் போகன் என்பவனும், அவன் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு சோமன், சாமன், இரு மகன்கள். இருவருமே பள்ளிக்கு போகாமல் போனுக்கு சொந்தமான விளை நிலத்தில் தந்தையுடன் விவசாயம் செய்து வந்தார்கள்.

    இவர்களுடைய நிலம் காட்டை ஒட்டி இருந்ததால் அதில் எவ்வளவு விளைச்சல் கிடைத்தாலும் பாதிக்கு பாதி காட்டில் வசித்து வந்த மிருகங்களால் மேயப்பட்டோ, அல்லது அழிக்கப்பட்டோ இவர்களுக்கு பெருத்த நஷ்டத்தை உண்டாக்கி விடுகிறது. இவர்களும் பல முறை ஊர் தலைவரிடம் முறையிட்டு விட்டார்கள்.

    அவர் மட்டும் என்ன செய்வார் பாவம்? அவரது நிலத்திலும் யானைகளும் பன்றிகளும் புகுந்து நிறைய சேதத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஊர் தலைவர் வசிக்கும் மக்கள் அனையவரிடமும் கைநாட்டு பெற்று ஒரு மனு எழுதி அதை கொண்டு போய் பக்கத்து டவுனில் இருக்கும் அலுவலகத்தில் கொடுக்க மட்டும் முடிந்தது

     அவர்கள் மட்டும் என்ன செய்ய முடியும்? நான்கைந்து அதிகாரிகளை அனுப்பி அவர்கள் அந்த நிலங்களை எல்லாம் சுற்றி பார்த்து விட்டு “ஆமாம் இவை எல்லாம் மிருகங்களால் பாதிக்கப்படும் பகுதி” என்று எழுதி வைத்து விட்டு, இதற்கான தீர்வை சீக்கிரம் செய்கிறோம் என்று கிளம்பி விடுவார்கள்.

    போகனின் மகன்களான சோமனும், சாமனும் அன்று தனியாக அவர்கள் விளை நிலத்தில் விதைத்து நன்கு வளர்ந்திருந்த தக்காளி செடிகளுக்க்கு நடுவே முளைத் திருந்த தேவையில்லாத செடிகளை பிடுங்கி கொண்டிருந்தார்கள். இருவருக்கும் சுமார் பத்து பனிரெண்டு வயதிருக்கும். தங்களுக்குள் விளையாண்டு கொண்டே நிலத்தில் இருந்த களைச்செடிகளை பிடுங்கி ஓரமாய் போட்டு கொண்டிருந்தனர்.

    அப்பொழுது பெருத்த சத்தத்துடன் கார் ஒன்று பாதையில் இருந்த மரத்தில் மோதி நின்று போனதை கவனித்தனர். இருவரும் வேகமாக ஓடி அந்த காரை அடைந்தனர். உள்ளே இருவர் இருப்பது தெரிந்தது. சட்டென கதவை இழுத்து திறக்க முய₹இ செய்தனர். அது திறக்க முடியாமல் இருந்தது, இருந்தாலும் இருவரும் விடாமல் சேர்ந்து இழுத்து ஒரு வழியாக ஒரு பக்க கதவை திறந்து விட்டனர்.

     உள்ளே அழுது கொண்டிருந்த இரு பெண்களை மெதுவாக கீழே இழுத்தனர்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த சிறுவர்களே அவர்களை வெளியே கொண்டு வந்து தரையில் உட்கார வைத்தனர். சாமன் ஓடிப்போய் தாங்கள் குடிப்பதற்காக வைத்திருந்த மண் பானை தண்ணீரை எடுத்து வந்து ஒரு கிளாசில் ஊஊற்றி அவர்களுக்கு குடிக்க கொடுத்தான்.

    முன்னால் உட்கார்ந்திருந்த டிரைவரும் வெளிவர முடியாமல் சிக்கி கொண்டிருந்தார். சோமன், சாமனிடம் நீ டிரைவரை வெளியே கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணு, நான் பக்கத்து தோட்டத்துக்கு போயி ஆளுங்களை கூட்டி வர்றேன், சொல்லிவிட்டு வேகமாக அந்த பாதையிலேயே ஓடினான்.

    ஐந்து நிமிடத்துக்குள் இரண்டு மூன்று ஆட்கள் அங்கு வர எல்லோரும் சேர்ந்து டிரைவரை வெளியே கொண்டு வந்தார்கள். மூவருக்குமே காயங்கள் அதிகமாக இருந்தது, உடனே “ஊர் தலைவரை” அழைத்து வந்து, அவர் மூலம் விவரங்களை பக்கத்து டவுன் போலீஸ் ஸ்டேசனில் தெரிவித்தனர்.

   ஒரு மாதம் ஓடியிருந்தது, போகனின் வீட்டு முன் ஒரு கார் வந்து நின்றது, போகன் வேகமாக வெளியே வந்து பார்த்தான்.அதிலிருந்து, இறங்கிய நல்ல உடை அணிந்த பெரிய மனிதர், இங்க இரண்டு பசங்க இருப்பாங்களே என்று கேட்டார், என்னோட பசங்க தான் சார், ஏதாவது தப்பு தண்டா பண்ணிட்டானுங்களா சார் ! பயந்து கொண்டே கேட்டான்.

   அதெல்லாம் இல்லை, என்னோட பொண்ணுங்க இங்க தோட்டம் பார்க்க வந்திருந்தாங்க, அவங்க வந்த கார் மரத்துல மோதி ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு.

   தெரியும்கய்யா, எங்க தோட்டத்துக்கு முன்னாடிதான் நடந்துச்சு, எங்க பசங்க கூட ஓடிப்போய் உதவனதா சொன்னாங்க.

    அதேதான், இப்ப அவங்க நல்லா இருக்காங்க, அவங்க என் கிட்டே சொல்லி அந்த பசங்களுக்கு ஏதாவது செய்யணும்னு சொன்னாங்க, அவங்களை கூப்பிடுங்க

இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே இவர்களை சுற்றி கூட்டம் கூடி விட்டது. அப்பொழுதுதான் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த சோமனும், சாமனும், தூரத்தில் இருந்து பார்த்த போது தன் வீட்டில் கூட்டம் இருப்பதை பார்த்தவுடன் வேகமாக ஓடி வந்தனர்.

    ஐயா இவங்கதான் எங்க பசங்க, அவரிடம் இருவரை அழைத்து போனான், அவர் இவ்ரகள் இருவரையும் அணைத்து, ரொம்ப நன்றி தம்பிங்களா, அவசரத்துக்கு அன்னைக்கு உதவினீங்க, உங்களுக்கு என்ன வேணும்? கேளுங்க, நான் செஞ்சு தர்றேன்.

     இருவரும் திகைத்து நின்றனர்., சட்டென சோமன், ஐயா எங்களுக்கு ஒண்ணும் வேண்டாமய்யா, ஆனா ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணனும்ங்கய்யா என்று கேட்டனர்.

     என்ன உதவிப்பா?

    எங்க ஊர் விவசாய பூமியில மிருகங்க வந்து அடிக்கடி பயிரை எல்லாம் அழிச்சுட்டு போயிடுதுங்க, அதுங்க வராம பண்ணறதுக்கு ஏதாவது வழி செஞ்சு கொடுங்கய்யா..

    இப்பொழுது அந்த பெரியவர் திகைத்தார்? இதற்கு அவர் என்ன செய்ய முடியும்? என்றாலும் அந்த சிறுவர்களின் பண்பை கண்டு வியந்தார். தனக்காக எதுவும் கேட்காமல் ஊர் நன்மைக்காக உதவி கேட்கிறார்களே..!

   இதுக்கு அரசாங்கமே என்ன செய்யறதுன்னு முழிச்சுகிட்டு இருக்கு, இருந்தாலும் உங்க ஊர் நிலத்தை சுற்றி என்னால முடிஞ்ச அளவுக்கு, இல்லையின்னா மத்தவங்ககிட்ட உதவிய கேட்டு சூரிய விளக்கு போட சொல்றேன். அது பகல் முழுக்க சூரிய ஒளிய சேமிச்சு இராத்திரி லைட்டா எரியும். அதனால வெளிச்சம் கிடைக்கும். வெளிச்சம் இருந்தா ஒரளவு மிருகங்க வர்றதுக்கு யோசிக்கும்,

     ரொம்ப நன்றிங்கய்யா, இந்த உதவிய செஞ்சு கொடுத்தா போதுங்கய்யா.

     அந்த சிறுவர்களை பாராட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினார் காரில் வந்தவர்.   

Any help
by Dhamotharan.S   on 24 Jun 2022  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நான் சம்பாதிக்கும் பணம் நான் சம்பாதிக்கும் பணம்
ஆன் லைன் வகுப்பு ஆன் லைன் வகுப்பு
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
விலங்குகளின் அன்பு விலங்குகளின் அன்பு
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
மறக்க முடியாத நாள் மறக்க முடியாத நாள்
பேராசை பெருநட்டம் பேராசை பெருநட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.