LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF

இன்னா செய்தாரை

“இன்னா செய்தாரை’

    அன்று அரசு பொது மருத்துவமனையில் மாதவனுக்கு விடுமுறை, சரி அவனுடைய பால்ய தோழியும், மருத்துவமனையில் உடன் பணி புரிந்து வரும் காயத்ரிக்கும் விடுமுறை என்று கேள்விப்பட்டவன் சரி அவள் வீட்டுக்கு போகலாம் என்று அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான்.

    உள்ளே நுழைந்த மாதவனுக்கு காயத்ரி உட்கார்ந்திருந்த தோரணை யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது போல் இருந்தது. பக்கத்தில் சிறிய மேசையில் பத்திரிக்கைகள் சிதறிக்கிடந்தது. உள்ளே நுழைந்தவன் சிதறிக்

கிடந்த பத்திரிக்கைகளைத்தான் முதலில் பார்த்தான். இவள் சற்று முன் படித்து விட்டு போட்டிருக்க வேண்டும், விட்டேற்றியாய் பத்திரிக்கை கிடப்பதில் அதில் ஏதொவொரு விரும்பத்தகாத செய்தி இருக்கவேண்டும் என்று யூகித்துக்கொண்டான்.

    உன்னைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறேன், காயத்ரி சொன்னாள். அதுதான் பார்த்த உடன் தெரிகிறது, நீ யாரையோ எதிர்பார்த்து உட்கார்ந்திருக்கிறாய் என்று. ஆனால் உன் முகமும், சிதறிக் கிடக்கும் பத்திரிக்கைகளையும் பார்த்தால் நீ என்னிடம் எதிர்பார்த்து பேசும் விஷயம் உன் மனதுக்கு அவ்வளவு பிடித்தமில்ல என்று நினைக்கிறேன் சரியா?

    இதுதான் உன்னிடம் பிடித்த விசயம் மாதவன், நீ யூகிப்பதிலும், சொல்ல வேண்டியதை தெளிவாகவும் சொல்லுவதிலும் கெட்டிக்காரன் என்பதால் உன்னை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியிருக்கிறது.

    போதும் உன் புகழ்ச்சி, விசயம் என்ன்வென்று சொல், மாதவன் அவளை உசுப்ப,

     பத்திரிக்கைகளை கையில் எடுத்து முன் பக்கத்தில் வந்த செய்தியை காட்டினாள். பார் இந்த செய்தியை “ முன்னாள் மந்திரியும், கா.மு.மு. கட்சியின் பொது செயலாளருமான அலமுராஜனின் உயிர் அபாய கட்டத்தில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு சிறு நீரக பாதிப்பு ஏற்பட்டு மிக மோசமான நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார். உடனடியாக அவருக்கு சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யா விட்டால் உயிர் பிழைப்பது சிரம்ம்”மருத்துவர்கள் அவருடைய உடல் ஏற்றுக் கொள்ளக்கூடிய சிறு நீரகத்தை பெறுவதில் பெரும் முயற்சி செய்து வருகிறார்கள். தற்பொழுது அவரது குடும்பத்தாரின் சிறு நீரகம் எதுவும் அவருக்கு ஒத்து வரவில்லை என்றும் தெரிவித்தார்கள்.

   இன்னொரு பத்திரிக்கையை எடுத்து காட்டினாள் அலமுராஜன் மாநிலத்தின் மிக சிறைந்த அமைச்சராக இருந்திருக்கிறார். நல்ல அரசியல்வாதி, மேலும் மேலும் பல புகழ்ச்சிகளை வர்ணித்து ஒரு பத்திரிக்கை “ஆஹா ஓஹோ” என்று புகழந்து எழுதியிருந்தது.

   சரி இதற்கு நீ ஏன் கோபப் படவேண்டும், இல்லை வருத்தப்பட வேண்டும். மாதவன் கேட்டவுடன் அவனை முறைத்த காயத்ரி, உனக்கு புரியாதா? இல்லை வேண்டுமென்றே கேட்கிறாய் அப்படித்தானே?

   மாதவன் சிரித்தான், அவசரப்படாதே, ஒரு செய்தி நம் மனதுக்குள் புகுந்து இம்சை செய்கிறதென்றால், அந்த செய்தி நம் மனதுக்குள் ஆழமாய் பதிந்து விட்ட்து என்று அர்த்தம். இப்பொழுது அலமுராஜனுக்கு நீ ஏதாவது செய்யவேண்டும் என்று விரும்புகிறாயா? எனக்கு விஷய்ம் தெரியும் என்பது அடுத்த விஷயம்.

   எனக்கும் அதுதான் மிகப்பெரிய குழப்பம், அந்த் ஆளுக்கா போய் உதவி செய்வது என்று தோன்றுகிறது. ஒரு சில நேரம் ஒரு உயிர், உன்னால் அதை காப்பாற்ற முடியும் என்றால் அதை செய்வதற்கு என்ன தயக்கம்? அவன் வேண்டாதவனாய் இருந்தாலும், மருத்துவம் படித்து மருத்துவராய் இருக்கும் எனக்கு இவ்வளவு கேள்விகள் எழத்தான் செய்கிறது. நீ என் நண்பன், உன்னிடம் இருக்கும் தெளிவு என்னிடம் இருப்பதில்லை, அதுதான் உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிருக்கிறேன்.

    நீ தாராளமாக அவரை காப்பாற்ற முயற்சிக்கலாம், அவருக்கு சிறு நீரக தானம் அளிக்க முடிவு செய்திருக்கிறாய், அது புரிகிறது, ஆனால் அவரை பற்றிய பழைய எண்ணங்கள் உன்னை தடுக்கிறது சரிதானே? ஆம் என்பது போல தலை அசைத்தாள். தாராளமாக உனது சிறு நீரகத்தை கொடு, சொன்னவன் இப்பொழுதே அவர்களின் குடும்பத்திற்கு செய்தியை சொல்லி விடட்டுமா?

     இரு இரு அவசரப்படாதே, அதற்கு பிரதியுபகாரமாய் நான் என்ன கேட்கப் போகிறேன் என்பது புரிந்ததா உனக்கு. மாதவன் சிரித்தான், நீ ஒரு டாக்டர், அடுத்து ஒரு நோயாளிக்கு உதவி செய்ய போகிறாய், அது மட்டும் இப்பொழுது போதும்.

     அலமுராஜானின் குடும்பம் காயத்ரியின் கையை பிடித்து அழுதது. அவரின் மனைவி ரொம்ப நன்றிம்மா, இப்பத்தான் டாக்டர்கள் எல்லாம் சொல்ல்லிட்டு போறாங்க, உன்னோட சிறு நீரகம் அவருக்கு பொருத்தமா இருக்காம். இன்னும் பத்து நாள்ல எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சுடலாமுன்னு சொன்னாங்க. நீ எங்கம்மா இருக்கே? உங்க அப்பா அம்மா? இந்த கேள்விக்கு மெல்ல சிரித்து இப்ப எனக்கு அப்பா அம்மா இல்லைங்க, எனக்கு கார்டியனா இதா இங்க நிக்கறானே மாதவன், இவன்தான் என்னோட பெஸ்ட் பிரண்ட், இவனோட அப்பா அம்மா தான் எனக்கும் அப்பா அம்மா, சொன்னவளின் கண்களில் தன்னை அறியாமல் கண்ணீர்.  காயத்ரி அந்தம்மாளின் கையை பிடித்துக்கொண்டு அம்மா ஒரே ஒரு உதவி மட்டும் செய்வீங்களா? சொல்லும்மா, தயவு செய்து நான்தான் கொடுக்கிறேன்னு வெளியில சொல்லாதீங்க, காரணம் விளம்பரத்துக்காக, நான் இதை செய்யலை. ப்ளீஸ் தயவு செய்து…அவளின் முகத்தை பார்த்த அந்தம்மாளுக்கு என்ன பேசுவது என்று புரியவில்லை. 

     வெளியே பத்திரிக்கைகாரர்கள் இவளை பேட்டி எடுக்க காத்திருக்கிறார்கள், காயத்ரி மெல்ல மாதவனிடம் சொன்னாள், நாம் பின் வழியா போயிடலாம், தயவு செய்து இதை எல்லாம் விளம்பர படுத்த வேண்டாம். அவள் மனது புரிந்து சரி என்று அவளை பின் புறம் அழைத்து சென்றான்.

    மறு நாள் பத்திரிக்கைகளில் அலமுராஜனுக்கு சிறு நீரகம் தானம் செய்ய ஒரு பெண் முன் வந்திருக்கிறாள். ஆனால் அவள் யார் எவரென்று அவர்கள் குடும்பத்தார் தெரிவிக்க மறுத்து விட்டார்கள். ஒரு சில பத்திரிக்கைகள் மனித நாகரிகம் கருதி ஒதுங்கி விட்டன. ஒரு சில பத்திரிக்கைகள் மட்டும் இப்படி செய்தி வெளியிட்டன, நமது நிருபர்கள் அதை கண்டு பிடிக்க முயன்று கொண்டிருக்கிறார்கள், இப்படியாக ஒரு குடும்பத்தில் பொதுவில் சொல்ல முடியாத விஷயத்தை இவர்கள் கண்டு பிடித்து அவர்கள் சொல்ல முடியாத விஷயங்களை பகிரங்கப்படுத்தி மற்றவர்கள் இரசித்து படிக்க ஏற்பாடு செய்ய போகிறார்கள்.

     அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டு காயத்ரி உடல்நிலை தேறி பணிக்கு வர ஒரு மாதம் பிடித்து விட்டது. அதுவரை அவளை தினம் தினம் சென்று பார்த்து கவனித்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தான் மாதவன்.

     அலமுராஜன் உடல் நலம் தேறி நான்கைந்து முறை அந்த பெண்ணை பற்றி விசாரித்தார். ஆனால் மாதவனிடம் சொல்லிவிட்டாள் “அந்த ஆள் முகத்தில் கூட விழிக்க விரும்பவில்லை” என்னை இப்படியே விட்டுவிடு. இல்லை மாற்றல் வாங்கி வேறோரு ஊருக்கு போய் விடுகிறேன்.

      கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தவள் எதிரில் அலமுராஜனின் மனைவி நின்று கொண்டிருந்தாள். வாங்கம்மா உள்ளே வாங்க காயத்ரி அழைத்தாள். வந்தவள் மெல்ல கதவை சாத்தி விட்டு காயத்ரியை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டாள். எல்லாம் எனக்கு தெரியும்மா, நீ சிறு நீரகம் கொடுக்கும்போதே உன்னைய பத்தி எதுவும் சொல்ல வேண்டாம் அப்படீன்னு சொல்லும் போதே எனக்கு புரிஞ்சு போச்சு. என்ன பண்ணறது, இந்த சமுதாயம் இந்த மாதிரி ஆளுங்களைத்தான் தலையில வச்சு கொண்டாடுவாங்க.. என்னடா புருசனை பத்தி இப்படி சொல்றானேன்னு நினைக்காதே. அந்த ஆள் சின்ன வயசுல உங்கம்மாவை நீ கை குழந்தையா இருக்கும்போதே, அடிச்சு வெளியே அனுப்பி, உங்கம்மாவை தனக்கிருந்த அரசியல் செலவாக்கால வேற விதமாக ஊருக்குள்ள கேவலப்படுத்தி, உங்க பக்கத்து வீட்டுல இருந்த இந்த மாதவனோட அப்பாவும் அம்மாவும் உங்கம்மாவை காப்பாத்தினதும், உன்னைய அவங்களே படிக்க வச்சதும், எல்லாம் விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். அதனால பாவம் மாதவனோட அப்பாவையும் உங்கம்மாவையும் கூட இணைச்சு தப்பா பேச வச்ச ஆளுதான் இவருங்கறதையும் தெரிஞ்சுகிட்டேன். இத்தனை செஞ்சும் நீ ஏம்மா அவரை காப்பாத்த நினைச்சே?

    அம்மா நான் முதல்ல நினைச்சது அந்த ஆள் “பகிரங்கமா எங்கம்மா எந்த தப்பும் செய்யலை, நானே உருவாக்கிய செய்தி அப்படீன்னு பத்திரிக்கைங்க முன்னாடி சொல்ல வைக்கணும்னு நினைச்சேன்.

    ஆனா மாதவனோட அப்பா, அம்மாவும், மாதவனும் தயவு செய்து அப்படி செய்யாதே, ஏன்னா வலுக்கட்டாயமான எந்த செய்லும் மனசுக்கு சந்தோசத்தை தராது, அதுமட்டுமல்ல, இப்ப உங்கம்மாவை ‘நல்லவங்க’ அப்படீன்னு சொல்றதால இந்த சமுதாயம் அப்படியே ஏத்துக்கும்னு நினைக்கறியா? அதைய கூட இந்த சமுதாயம் வேணும்னே அந்த பொண்ணு அப்படி அவரை சொல்ல வச்சுருச்சு” அப்படீன்னு பேசுவாங்க.

    நம்ம மனசுக்கு அவங்க நல்லவங்க இது போதும்.மத்தபடி ஒரு நோயாளியோட உயிரை காப்பாத்த போறே, அவ்வளவுதான்.

     இப்படி சொன்னாங்க. நானும் அதுக்கப்புறம் நினைச்சது

   “இன்னாசெய்  தாரை  ஒறுத்தல்  அவர்நாண்

     நன்னயஞ் செய்து  விடல் ”            

அவ்வளவுதான். மத்தபடி வேறேதுவுமில்லை.

   நான் உன்னைய “மகளேன்னு” கூப்பிடலாமா? அந்தம்மாளின் அன்புக்கு வேறென்ன பதில் சொல்ல முடியும் காயதிரியால், அவளை அணைத்துக் கொண்டு இறந்து போன தாயின் நினைவு வந்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

"Inna saitharai"
by Dhamotharan.S   on 21 Apr 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பழி உணர்ச்சி பழி உணர்ச்சி
சூழல், சூழல் சூழல், சூழல்
இளம் மாங்கன்று இளம் மாங்கன்று
குருவி குஞ்சு குருவி குஞ்சு
என்னோட சீட் என்னோட சீட்
கடல்அலை கடல்அலை
மாங்காய் மாங்காய் மாங்காய் மாங்காய்
உடல்நிலை உடல்நிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.