|
|||||
பறவைகள் சரணாலயம் |
|||||
பறவைகள் சரணாலயம்
அழகு அழகு பறவைகள் வண்ண வண்ண நிறங்களாய் மரத்தை சுற்றி பறக்குது
பெரிய பெரிய உருவமாய் பறவை கூட இருக்குது
நீள நீள மூக்குடன் கழுத்து மட்டும் வெண்மையாய் கோவை பழ விழிகளாய் கொம்பில் அமர்ந்து நோக்குதே
பச்சை வண்ண கிளியொன்று பாங்காய் பக்கம் வருகுது கையில் இருந்த கொய்யாவை கொஞ்சம் கொத்தி பார்க்குது
சின்ன சின்ன சிட்டுகள் கருமை கலந்த மைனாக்கள் கொண்டை வைத்த பறவைகள் நீள வால் குருவிகள் சுற்றி வர எங்குமே பார்த்து இரசித்து மகிழ்ந்திட
“பறவைகள் சரணாலயம்” கூட்டி வந்தார் எங்கள் அப்பா.. |
|||||
Birds Sarayanalayam | |||||
by Dhamotharan.S on 24 Jun 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|