LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF

குதித்து தாளமிட்ட மழை துளிகள்

குதித்து தாளமிட்ட மழை துளிகள்

 

இரைச்சலாய்

பெய்து கொண்டிருந்த

மழை

 

ஜன்னலில் நின்று

கருமையாய் சென்ற

பாதையை பார்க்க

 

துள்ளி துள்ளி

தவளை குஞ்சுகளாய்

 

பாதையில் குதித்து

கொண்டிருக்கின்றன

இந்த

மழை துளிகள்

 

குதித்த துளிகள்

ஒவ்வொன்றாய்

சட்டென கரைய

பாதையில் வந்த

வாகனம் ஒன்று

வழித்தெடுத்து பாதையோரம்

வீசிவிட்டு பறக்கிறது

 

நிமிட நேரத்து

திகைப்பில்

நின்று போன

துளிகள் மீண்டும்

துள்ளி துள்ளி…..

 

இப்படியே வாகனங்கள்

வரிசையாய் வந்து

வழித்தெடுத்து வீச

 

கால்வாய் ஒன்று

கரையோரம் தோன்றி

நீர் பெருக்கெடுத்து

வளைந்து நெளிந்து

பாம்பாய் ஊர்ந்து

செல்கிறது

 

நீரோட்ட பெருக்கம்

இந்த துளிகளுக்கு

ஆனந்தத்தை கொடுத்ததோ

என்னவோ !

 

மழை இன்னும் வேகம்

பிடிக்க அந்த

கரும் தாரை பாதைகள்

முழுக்க இந்த மழை

துளிகளின் துள்ளாட்டம்தான்

jumping in drop of rain water
by Dhamotharan.S   on 05 May 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வானில் நிலா வானில் நிலா
நீரோடை ஒன்று நீரோடை ஒன்று
காலம் திரும்பி பார்க்கிறது காலம் திரும்பி பார்க்கிறது
நினைவேந்தல் - அருமை அப்பாவிற்கு..... நினைவேந்தல் - அருமை அப்பாவிற்கு.....
அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள்
பூமி பூமி
என் நண்பன் இவன் ! என் நண்பன் இவன் !
மண்ணில் விழுந்த துளி மண்ணில் விழுந்த துளி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.