LOGO
  முதல் பக்கம்    சிறுவர்    சுட்டிக்கதைகள் - Kids Stories Print Friendly and PDF

விலங்குகளின் அன்பு

விலங்குகளின் அன்பு

 

    சிலம்பனூர் என்னும் ஊரில் சென்னியப்பன் என்னும் சிறுவன், தன் அம்மாவுடன்  ஒரு குடிசையில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்.

  . அவனின் அப்பா சிறுவயதிலேயே இறந்து விட்டதால் இவனும், இவன் அம்மாவும் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வந்தனர்.

      சென்னியப்பனும், அவன் அம்மாவும் சிரமத்தில் வாழ்ந்து வந்தாலும் அன்பாக இருப்பார்கள், அவைகளை நேசித்தும் வாழ்ந்து வந்தனர். விலங்குகளும் கூட அவர்களை மிகவும் நேசித்தன. 

   சிலம்பனூரின் அருகில் அடர்ந்த காடு ஒன்றிருக்கிறது. இந்த காட்டுக்குள் வந்து இந்த ஊர் மக்கள் சமையல் செய்ய விறகுகள் பொறுக்கி எடுத்து செல்வர்.

   ஒரு நாள் அந்த அடர்த்தியான காட்டில் சென்னியப்பன் தனியாக சுள்ளி விறகுகள் பொறுக்கி கொண்டிருந்தான். அவன் அம்மாவுக்கு அன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இவன் மட்டும் தனியாக சுள்ளி விறகுகள் எடுத்து செல்ல இந்த காட்டுக்கு வந்திருந்தான்.

   தனியாக வந்திருந்ததால் அந்த அடர்த்தியான காடு இவனை பயமுறுத்தியது. நண்பர்களை அழைத்தும் அவர்கள் காட்டுக்கு வர மறுத்து விட்டதால் இன்று தனியாக வந்து விட்டான்.

   நேரம் போக போக அந்த காட்டில் சூரிய வெளிச்சம் குறைந்து இருள் சூழ்ந்து வந்தது.

   சீக்கிரம் சீக்கிரமாக சுள்ளிகளை சேர்த்து கட்டாக கட்டி தலையில் சுமந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

    வழியில் திடீரென குரங்கு ஒன்று வழி மறித்து தம்பி தம்பி எங்கே வேகமாய் போகிறாய்? என்று கேட்டது.

    குரங்கு ஒன்று தன்னை வழி மறிக்கவும் பயந்து போன சென்னியப்பன், பயத்துடன் நான் வீட்டுக்கு போகிறேன், வழியை விடு என்று சொன்னான்.

   எனக்கு இரண்டு சுள்ளி கொடுத்து போ, என்றது குரங்கு.

   முடியாது என் அம்மாவுக்கு சுடுநீர் காய்ச்ச எடுத்து போகிறேன், அவர்களுக்கு உடல் சுகமில்லை, அதனால் வழியை விடு, நான் போக வேண்டும் என்றான்.

   இரண்டு குச்சியை கொடுத்தால் உனக்கு ஒன்றும் குறையாது, அதனால் இரண்டு குச்சியை கொடுத்து போ என்றது.

   சரி சரி இந்தா என்று இரண்டு குச்சியை கொடுத்தான் சென்னியப்பன்.

   குரங்கும் தன் கையில் வைத்திருந்த இரண்டு கொய்யா பழங்களை கொடுத்து குச்சிக்கு பதிலாய் இதை எடுத்து போ என்று சென்னியப்பன் கையில் கொடுத்தது.

      கொய்யா பழத்தை சட்டை பையில் சொருகி கொண்டு விரைவாய் நடந்தான் சென்னியப்பன்.

     யானை குட்டி ஒன்று அவன் வழியை மறித்து நின்றது.

     சென்னியப்பன் பயந்து நின்றான். தம்பி தம்பி எங்கே செல்கின்றாய்?

     நான் என் வீட்டிற்கு போகிறேன். அங்கே அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை, இந்த சுள்ளி விறகுகள் கொண்டு போய் சுடு நீர் காய்ச்சி தரவேண்டும். அதனால் வழியை விடு நான் போக வேண்டும் என்றது.

    உன் சுள்ளி கட்டில் இருந்து இரண்டு சுள்ளிகள் கொடுத்து போ என்று கேட்டது யானை குட்டி.

   என்னிடம் உள்ளது கொஞ்சம்தான் அதனால் உனக்கு தர முடியாது, மறுத்து சொன்னான் சென்னியப்பன்.

   இரண்டு குச்சிகள் கொடுத்தால் உன் சுள்ளிக்கட்டு குறையாது அன்புடன் கேட்டது குட்டி யானை.

   சரி இந்தா என்று இரண்டு சுள்ளிகள் கொடுத்தான் சென்னியப்பன்.

   நானும் பதிலுக்கு  உனக்கு இரண்டு வாழைப்பழங்கள் தருகிறேன், பெற்றுக்கொள் என்று கொடுத்தது யானை குட்டி.

   வாழைப்பழத்தை வாங்கி தன் சட்டைப்பையில் சொருகியபடி மீண்டும் விரைவாக நடந்தான் சென்னியப்பன்.

   ஆனால் போகும் வழியில் அணில் அவனை மறித்து இரண்டு சுள்ளிகள் வாங்கி கொண்டு பாதாம் பருப்பு இரண்டை கொடுத்து சென்றது.

   இப்படி வழியில் வரிசையாய் நின்றிருந்த விலங்குகள் இவனை வழியை மறித்து இரண்டிரண்டு குச்சிகளை பெற்றுக்கொண்டு ஏதேனும் இரண்டு பழங்கள், கொட்டைகள் இவைகளை கொடுத்து விட்டு சென்றன.

   சென்னியப்பன் வீடு போய் சேரும்பொழுது அவனிடம் நாங்கு சுள்ளிகள் மட்டுமே இருந்தன. அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. என்றாலும் விலங்குகள் கொடுத்த பழங்களும் கொட்டைகளும் அவன் சட்டைப்பையில் நிறைய இருந்தன.

    அம்மா அவனுக்காக காத்திருந்தாள். சென்னியப்பா ஏன் காட்டிலிருந்து வர தாமதம்? என்று கேட்டாள்.

    இவன் இப்படி ஒவ்வொரு மிருகங்களாக வந்து தன்னிடம் இரண்டு சுள்ளிகள் பெற்று பழங்களும் கொட்டைகளும் கொடுத்து சென்றன. இதனால் இப்பொழுது என்னிடம் நான்கு சுள்ளிகள்தான் இருக்கிறது. ஆனால் அவைகள் கொடுத்த பழங்கள், கொட்டைகள் நிறைய இருக்கிறது என்று அம்மாவிடம் கொடுத்தான்.

    அம்மா சிரித்தபடி நம் குடிசையின் பின் புறம் போய் பார் என்று சொல்லவும் இவனும் குடிசையின் பின் புறம் போய் பார்த்தான்.

     அங்கு அவன் விலங்குகளுக்கு கொடுத்த சுள்ளிகள் எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

      திகைத்தபடி அம்மா யார் இதை எல்லாம் இங்கு வந்து கொடுத்தது என்று கேட்டான்.

      அம்மா அவனிடம் குரங்கு ஒன்று வந்து இரண்டு சுள்ளியை என்னிடம் கொடுத்து, ஒரு சிறுவன் கொடுத்தான் என்று சொல்லி சென்றது.  அது போன பின்னால் யானை குட்டி ஒன்று வந்து இரண்டு சுள்ளி கொடுத்து, ஒரு சிறுவன் கொடுத்தான் என்று சொல்லி சென்றது. இப்படி வரிசையாய் எல்லா விலங்குகளும் இரண்டிரண்டு சுள்ளிகளை கொண்டு வந்து கொடுத்து சிறுவன் கொடுத்தான் என்று சொல்லி சென்றது.

    அப்படியானல் அவைகள் எல்லாம் எங்களுக்காகத்தான் சுள்ளிகள் பெற்று சென்றதா?அன்புடன் அவைகளுக்கு மனதுக்குள் நன்றியை சொன்னான் சென்னியப்பன்.

Animals love
by Dhamotharan.S   on 05 Jul 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திரும்பி வந்த பூ செடிகள் திரும்பி வந்த பூ செடிகள்
தானாக வந்த திறமை தானாக வந்த திறமை
செய்த உதவி செய்த உதவி
மறக்க முடியாத நாள் மறக்க முடியாத நாள்
பேராசை பெருநட்டம் பேராசை பெருநட்டம்
அனைவரும் சமம்- என்.குமார் அனைவரும் சமம்- என்.குமார்
அன்பு- என்.குமார் அன்பு- என்.குமார்
குறைகூறல் வேண்டாம்- என்.குமார் குறைகூறல் வேண்டாம்- என்.குமார்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.