|
||||||||
கணினித்தமிழ் ஆய்வாளர் திரு. சு. கார்த்திகேயன் (1983) |
||||||||
![]() கணினித்தமிழ் ஆய்வாளர் திரு. சு. கார்த்திகேயன் (1983)
திரு. சு. கார்த்திகேயன் (1983) ... கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்தொடர்பான பணிகள், ஆய்வுகளில் தமிழறிஞர்கள் மட்டுமல்லாமல், கணினித்துறை சார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். இந்த வளர்ச்சியானது தமிழாய்வு என்பது பல துறைசார்ந்த ஒரு ஆய்வாக மலர்ந்துவருகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
திரு. சு. கார்த்திகேயன் அவர்கள் இத்துறையில் கடந்த 10 ஆண்டுகளுக்குமேலாகத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திவருகிறார். நாமக்கல் பி.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினிச்செயற்பாட்டில் இளங்கலைப்பட்டமும் ( BCA) , பாரதியார் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகத்துறையில் முதுகலை அறிவியல்பட்டமும் ( M.Sc., Electronic media - Education), அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயற்கைமொழி ஆய்வில் ( Natural Language Processing - NLP ) முதுகலைப்பட்டயமும் பெற்றுள்ளார்.
கணினிநிரலாக்கம், இணையதள வடிவமைப்பு, மின்கல்வி போன்ற துறைகளில் சிறந்த பயிற்சிபெற்றுள்ள இவர் , முதலில் மைசூரிலுள்ள இந்தியமொழிகள் நடுவண் நிறுவனத்தில் பழங்குடி மக்கள் வாழ்வுபற்றிய ஆவணப்படம் தயாரிப்பிலும், வங்காளம், மணிப்புரி, கன்னடம் ஆகிய மொழிகளை இணையவழி கற்பித்தலுக்கான நிரலாக்கத்திலும் தன்னை ஈடுபடுத்தினார். பின்னர், சென்னையில் இயங்கும் செம்மொழித்தமிழ் மத்திய
ஆய்வுநிறுவனத்தில் நிரலாக்கராக இணைந்து, கடந்த பத்தாண்டுகளுக்குமேலாக இணையவழிச் செம்மொழித் தமிழ்த் திட்டத்தின்கீழ் சங்க இலக்கியங்களுக்கான இணையவழிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றிவருகிறார்.
செவ்வியல் தமிழ் இலக்கியங்களைக் கற்போருக்குச் செவ்வியல்மொழியில் பயிற்சி தரவும், இலக்கியங்களின் நயம் பாராட்டவும், ஆய்வுநோக்கில் அணுகுவதற்கும் தேவையான பயிற்சியை இணையவழி அளிக்கும் திட்டமே இவர் பங்கு கொண்டுவரும் திட்டமாகும். இத்திட்டதின்கீழ் இணையப் பாடங்கள் ஒழுங்கமைத்துத் தரப்பட்டுள்ளன. இவற்றோடு மாணவர்களுக்குக் கூடுதலாக உதவிசெய்ய இணைய வகுப்பறைகள் , காட்சிக் குறும்படங்கள்
ஆகியவையும் ஆங்காங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அகம், புறம், அறம், காப்பியம், இலக்கணம் என்று இப்பயிற்சி ஐந்து அலகுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதற்படியாக, அகம், புறம் ஆகியவற்றிற்கான பாடங்கள் தயாரிக்கப்பட்டு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுவரை 800 மாணவர்களுக்குமேல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி, செம்மொழித் தமிழ் இலக்கியங்களில் பயிற்சிபெற்றுள்ளனர். இணையவழிக் கல்வியில் செவ்வியல் இலக்கியங்களைக் கற்றுக்கொடுக்கும் பாடங்களைத் தயாரிக்கும் குழுவில் பணிபுரியும் இவர், தமிழிலக்கியங்களை நன்கு கற்றுத் தேர்ந்துள்ளார் என்பது இவரது படைப்புகளில் வெளிப்படுகிறது.
செவ்வியல் தமிழ் இலக்கியங்களுக்கான ஒலி ஒளி தொகுப்பு , படக்காட்சி தொகுப்பு ( Audio / Video / Image Editing) ஆகியவற்றிலும் இவர் தனது திறமையை வெளிப்படுத்திவருகிறார். இவரது கணினித்தமிழ் பணி சிறக்க இவரை வாழ்த்துங்கள்!
|
||||||||
![]() |
||||||||
by Swathi on 21 Dec 2022 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|