LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மகளிர் அழகுக்குறிப்புகள் Print Friendly and PDF

சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை விரட்ட 10 பயனுள்ள ஆலோசனைகள் !!

இன்றைய இளசுகளில் பலபேர் எண்ணெய் பசை சருமத்தால் அவதி பட்டு வருகின்றனர். சருமத்தில் எண்ணெய் பசை இருப்பதால் ஏற்படும் நன்மை என்னவென்றால், சருமத்தில் வறட்சி இருக்காது. ஆனால், அதுவே அதிகமானால், நிறைய பிரச்சனைகளை உண்டாக்கும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணையை போக்குவதற்கு பத்து பயனுள்ள ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இந்த ஆலோசனைகளை படித்து, முயற்சி செய்து, கருத்துக்களை பகிருங்களேன்...

 

வெள்ளரி 

 

தினமும் காலையில் வெள்ளரிக்காயை, முகத்தில் தேய்த்து வர முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதை தவிர்க்கலாம். வெள்ளரிக்காயை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து, முகத்தில் தடவினால், எண்ணெய் பசை நீங்குவதோடு, சரும அழகு கூடும். 

 

தயிர் 

 

தயிருடன், எலுமிச்சை சாற்றை கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் இருக்கும் அதிகமான எண்ணெய் பசையானது நீங்கும். 

 

தக்காளி

 

நான்கு கனிந்த தக்காளி பழத்தை பிழிந்து சாறாக எடுத்து முகத்தில் தடவி காய்ந்த பின், கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். மேலும் தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்தும் கழுவலாம்.

 

கற்றாழை 

 

கற்றாழையின் ஜெல்லை சருமத்தில் தடவினால், முகத்தில் உள்ள பருக்கள் நீங்குவதோடு, அதிகமான எண்ணெய் பசையையும் நீங்கும். 

 

ஆரஞ்சு 

 

காய்ந்த அரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பொடி செய்து, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் காய வைத்து கழுவ வேண்டும். 

 

முகத்தை கழுவுங்கள் 

 

அடிக்கடி குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்பிற்கு பதில் கடலைமாவை பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு மட்டுமல்லாமல், முகமும் பளபளப்பாக இருக்கும்.

 

பப்பாளி 

 

பப்பாளி பழத்தை கூழ் செய்து, அதனுடன் முல்தானி மெட்டி, வேப்பிலை பொடி ஆகியவற்றை கலந்து நன்றாக பசை போல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறையும்.

 

சந்தனப் பொடி 

 

சந்தனப் பொடியை, மூல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டரில் கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி கால் மணி நேரம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, பருக்களும் குறையும். 

 

ஆவி பிடித்தல் 

 

வாரத்திற்கு ஒரு முறை ஆவிப் பிடித்து, பின் ஒரு ஈரமான துணியைக் கொண்டு, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்தால், சருமத்துளைகள் விரிவடைந்து, எண்ணெய் பசை நீங்கி, கரும்புள்ளிகள் வெளியேறிவிடும். 

 

எண்ணெய் உணவுகளை தவிருங்கள்

 

எண்ணெயில் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக பானங்கள், காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடலாம். 

by Swathi   on 31 Oct 2013  14 Comments
Tags: Oily Skin   எண்ணெய் பசை   எண்ணெய் பசை சருமம்   முகத்தில் எண்ணெய் வலிகிறதா           

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை விரட்ட 10 பயனுள்ள ஆலோசனைகள் !! சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை விரட்ட 10 பயனுள்ள ஆலோசனைகள் !!
கருத்துகள்
04-Jul-2018 10:40:28 msundar said : Report Abuse
உண்மையா சொல்லுங்க உஸ் பண்ற
 
20-Apr-2018 14:22:14 பாலமணிகண்டன் said : Report Abuse
எண்ணெய் பசை நீங்க எளிமையான வழி
 
12-Feb-2017 18:39:38 ஒமேகா said : Report Abuse
முகம் அழகு peruvatharkaana vali முராய்கள்
 
11-Feb-2016 01:40:46 Preethapoorani said : Report Abuse
Hai.I have black lines on my nose.please say some tips for that
 
12-Sep-2015 04:17:02 திருச்செல்வன் கி said : Report Abuse
Super
 
16-May-2015 08:08:51 ராஜேஸ்வரி said : Report Abuse
Hai friend ,உங்களுக்கு இன்னும் ஒரு குறிப்பு ,அரிசி மாவுடன் ஆரஞ்சு சார் சேர்ந்து முகம்,கழுத்து பகுதி பேக் போட்டு 1/2 மணி நேரம் கழித்து கழுவி பாருங்கள் ,தொடர்ந்து செய்தால் முகம் பள பள என்று ஜொலிக்கும்
 
20-Dec-2014 23:15:04 S .Sivapriya said : Report Abuse
முகத்துக்கு நிறத்தை கொடுக்கும் கலக்கல் சாறு treatment இது !!!!!!!!!!!!!!!!!!!!!! கேளுங்கள் !!!! carrot சாறு - 1 டீஸ்பூன் , தேங்காய் பால் - 1 டீஸ்பூன்... இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள் . பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள் .இதை தினமும் செய்து வாருங்கள் உங்கள் முகம் ஒரு வாரத்தில் நல்ல நிறம் மாறும் சகோதரிகளே !!!! இதை நீங்கள் whatsapp 'ill உங்கள் friends க்கு ஷேர் பண்ணுங்க !! உங்கள் friends உம் நல்லா இருக்கட்டுமே !!!!
 
20-Dec-2014 22:59:07 R .Saravanan said : Report Abuse
ஹாய் friends நான் உங்கள் சிவப்ரியா !!! உங்களுக்காக இன்னும் ஒரு அழகு குறிப்பு இருக்கிறது!!! தேவையான பொருட்கள் :- 1 தேகரண்டி தேன் , 1 தேகரண்டி எலுமிச்சை சாறு. செய்முறை :- மேற்க்கண்ட பொருட்களை கலந்து அவற்றை முகத்தில் pack போடுங்கள். அதை 1/2 மணி நேரம் கழித்து அலம்பி விடுங்கள். இப்படி தொடர்ந்து வாரம் இரு முறை செய்து வந்தால் உங்கள் முகம் பள பளவென ஜொலிக்கும் !!!
 
20-Dec-2014 22:41:07 R.Saravanan said : Report Abuse
ஹாய் இது என் அப்பா இ-மெயில் ID என் பெயர் சிவப்ரியா ... வாரம் மூன்று முறை , 2 தேகரண்டி பால் , ஒரு தேகரண்டி எலுமிச்சை சாறு மற்றும் கால் தேகரண்டி மஞ்சள் சேர்த்து ஒரு தேகரண்டியுடன் கடலை மாவு கலந்து பேஸ்ட் ஆக்கவும், அதை படுக்க செல்லும் பொது முகத்தில் PACK போட்டு படுக்கவும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் பருக்கள் நீங்கி பொலிவான முகம் கிடைக்கும் சகோதரிகளே !!! இது பொய்யல்ல உண்மை !!! எனக்கும் உங்களை விட அதிகமான பருக்கள் முகம் முழுதாக இருந்தது. இதை தொடர்ந்து போட்டு வந்தேன் என் பருக்கள் சுருங்கி விட்டது. இப்பொழுது என் முகத்தில் பருக்கள் இல்லை சகோதரிகளே !!! நீங்களும் try செய்து பாருங்கள் !!!
 
22-Aug-2014 21:31:45 Ramyapoonthamilan said : Report Abuse
இனிதான் இதை நான் செய்து பாக்க போகிறேன் .........
 
12-Jun-2014 01:35:42 Vinoth said : Report Abuse
ithu unmaiya ela poiya sollunga nan use panni pakka poran
 
29-May-2014 03:49:45 santhu said : Report Abuse
என் முகத்திலும் நிறைய பறுக்கள் உள்ளன. நானும் என்னமோ செய்து விட்டேன். அனாலும் குறைந்த பாடில்லை. எனக்கும் எதாவது டிப்ஸ் தாருங்கள்.
 
19-May-2014 02:22:32 viji said : Report Abuse
எனக்கு முகத்தில் பருக்கள் வந்துள்ளது பச்சைபைறு மாவு போட்டாள் பருகல் இன்னும் அதிகமாகின்றன எனக்கு சில டிப்ஸ் தரவும்
 
10-Apr-2014 05:22:26 PUSHPAVALLI said : Report Abuse
எனக்கு தேவையான குறிப்புகள் அதனால் இனி நான் இந்த குறிப்புகளைய பின்பற்றுவன் மிகவும் தேங்க்ஸ்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.