LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் 1250 மொழி பெயர்ப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்து

சிறந்த தமிழ்ப் படைப்புகளை உலக அளவில் கொண்டு செல்லவும், உலக அளவில் சிறந்த படைப்புகளைத் தமிழுக்குக் கொண்டுவரும் நோக்கிலும்  தமிழகப் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பன்னாட்டுப் புத்தகக் காட்சி சென்னையில் 2023-ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த ஜன.16ம் தேதி தொடங்கி 18ம் தேதியுடன் நிறைவு பெற்றது. 

தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இந்தக் காட்சியைத் தொடங்கிவைத்தார். ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி உட்பட 64 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் இதில் பங்கேற்றுள்ளன.

எத்தனை ஒப்பந்தங்கள்?

முதலாவது சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் 24 நாடுகள் பங்கேற்று 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், 2-ஆவது புத்தகக் காட்சியில்  45 நாடுகள் கலந்துகொண்டு 750 ஒப்பந்தங்களும் அமைக்கப்பட்டன. தற்போது நிறைவுற்றுள்ள  மூன்றாவது  புத்தகக் காட்சியில் 64 நாடுகள் பங்கேற்று  1250 மொழி பெயர்ப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.

இதில் தமிழ்மொழியிலிருந்து அயலக மொழிகளுக்கு 1005 ஒப்பந்தங்களும் அயல்மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கு 120 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. குறிப்பாக அரபிக் மொழிக்கு 33 ஒப்பந்தங்களும், பிரெஞ்சு மொழிக்கு 32 ஒப்பந்தங்களும், மலாய் மொழிக்கு 28 ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

இலக்கிய முகவர்களின் பங்களிப்பு

தமிழக அரசு 2023-ல் இலக்கிய முகவர்கள் திட்டத்தை உருவாக்கியது. இந்தத் திட்டத்தின் கீழ் வாசிப்பில் ஆர்வமும் தகவல் தொடர்புத் திறனும் கொண்ட இளைஞர்களைத் தேர்வு செய்து பயிற்சி வழங்கப்பட்டது. இது இந்தியாவில் வேறெந்த நாட்டிலும் எடுக்கப்படாத முன்னெடுப்பு. இதனால் தமிழின் இலக்கியச் செழுமை பிற மொழிகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதோடு இளைஞர்களுக்கு மொழி சார்ந்த பணி வாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன. 


எத்தனை அரங்குகள்? 
இந்தப் பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் பங்கேற்பதற்காக 85 நாடுகளைச் சேர்ந்த 225 பதிப்பகங்கள் விண்ணப்பித்திருந்தன. இதில் ஆஸ்திரேலியா, பெனின், புரூனே, பல்கேரியா, சிலி, சைப்ரஸ், எஸ்தோனியா, எத்தியோப்பியா, கானா, ஐவரி கோஸ்ட், ஜப்பான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், லக்ஸம்பர்க், மடகாஸ்கர், மொரீசியஸ், மெக்சிகோ, மங்கோலியா, மொராக்கோ, மொசாம்பிக், நேபாளம், நைஜீரியா, நார்வே, ROC (தைவான்), ருமேனியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, இலங்கை, டோகோ, உக்ரைன், அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA), உஸ்பெகிஸ்தான், ஜிம்பாப்வே  உள்ளிட்ட  64 நாடுகளைச் சேர்ந்த பதிப்பகங்கள் இறுதி செய்யப்பட்டன. 78 அரங்குகள் அமைக்கப்பட்டன. முதன்முறையாகக் குழந்தை இலக்கியத்துக்கென்று  மூன்று அரங்குகள் அமைக்கப்பட்டன. புகழ்பெற்ற இத்தாலி பொலோனியா குழந்தைகள் புத்தகத் திருவிழா அமைப்பு இந்த பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் மதிப்புறு விருந்தினராகப் பங்கேற்றது. 
தவிர ஆப்பிரிக்கப் பதிப்பாளர் கூட்டமைப்பு. ஆசியான் பதிப்பாளர் சங்கம், ஃபிராங்கோபன் பதிப்பாளர் அமைப்பு போன்ற பன்னாட்டுப் பதிப்பாளர் அமைப்புகள்  இந்தாண்டு புதிதாக இடம்பெற்றன. 

மானியம்

தமிழின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளில் கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் பதிப்பாளர்களுக்குத் தமிழக அரசு மொழிபெயர்ப்பு மானிய உதவி வழங்குகிறது. இதன்மூலம் சிறந்த தமிழ்ப் படைப்புகள் உலக தளத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அந்த வகையில், 36 மொழிகளில் 162 நூல்களுக்கு மொழிபெயர்ப்பு மானிய நிதி வழங்கப்பட்டுள்ளது. 


நிறைவு நாளான ஜனவரி 18ம் தேதி  முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பதிப்பித்த 75 நூல்கள், 2023- 24 ஆகிய ஆண்டுகளில் மானியம் வாயிலாக மொழிபெயர்க்கப்பட்ட 30 நூல்களை வெளியிட்டார். அதனை மக்களவை உறுப்பினர்கள் சசிதரூர், டி ஆர் பாலு ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

விருதுகள்

இந்த நிறைவு விழாவில் பன்னாட்டுப் பதிப்பாளர்களுக்கு விருதுகளையும் முதல்வர் வழங்கினார்.  சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா தூதர் விருது,   PWB Global Ambassador, ASEAN Publishing Association, African Publishers Network (APNET), Francophone Ambassador ஆகிய பதிப்பகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.  உலகளாவிய தொலைநோக்கு டிஜிட்டல் புத்தகக் கண்காட்சி சிறப்பு விருதை ரியாத் புத்தகக் கண்காட்சிக்கும், பண்டைய தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருதினை தாமஸ் ஹிடோஷி புருக்ஷிமா (Thomas Hitoshi Pruiksma) மற்றும் பேராசிரியர் மருத்துவர் அருள்சிவன் ராஜு ஆகியோருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


நவீனத் தமிழ் இலக்கிய மேம்பாட்டு விருது கிறிஸ்டியன் வியிஸ் (Christian Weiss) மற்றும் கே.எஸ். வெங்கடாசலம் ஆகியோருக்கும், கூட்டு வெளியீட்டுக் கூட்டாண்மை விருது, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகத்திற்கும், பன்னாட்டு மானியக் குழுவின் சிறப்பு விருது துருக்கி நாட்டின் TEDA-விற்கும், புத்தக ஊக்குவிப்பு விருது மங்கோலியா மேஜிக் பாக்ஸ் மற்றும் இத்தாலி நாட்டின் கியூண்டி ஓடியன் புத்தக விற்பனை நிலையத்திற்கும்  உலகளாவிய இலக்கிய ஆதரவிற்கான விருது பொலானா குழந்தைகள் புத்தகக் கண்காட்சிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 


புத்தகக் காட்சி நடைபெற்ற மூன்று நாள்களும் நூல் வெளியீடுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், சிறப்புச் சொற்பொழிவுகள் எனப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 
 

 

by   on 19 Jan 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 6,626 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல் தமிழகத்தில் புதிதாக 5 விமான நிலையங்கள்- மத்திய அரசு தகவல்
மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது மதுரை பறையிசை கலைஞர் வேலு ஆசானுக்குப் பத்மஸ்ரீ விருது
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் - தவெக தலைவர் விஜய்
மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து, நடராஜனுக்கு திருவுருவச் சிலை
மே 25-ம் தேதி குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு மே 25-ம் தேதி குடிமைப்பணி முதல்நிலைத் தேர்வு
5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் உருக்கு இரும்பு தொழில்நுட்பம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் நிலத்தில் உருக்கு இரும்பு தொழில்நுட்பம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலம் ரத்து - மத்திய அரசு அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலம் ரத்து - மத்திய அரசு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.