LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !!

தமிழ்க் கணினி அறிவை வளர்க்கும் நோக்கிலும், வேகமாக மாறிவரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் தமிழின் பயன்பாட்டை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையிலும், உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் மற்றும் சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தின் சார்பாக 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் உள்ள சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டில் இந்தியாவில் இருந்து 250 பேரும், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, இலங்கை, சிங்கப்பூர் என உலகம் முழுவதும் இருந்து 200 பேரும் இந்த மாபெரும் விழாவில் கலந்து கொள்கின்றனர். மே மாதம் 30, 31 மற்றும் ஜூன் 1 ஆகிய நாட்களில் இம்மாநாடு நடைபெறுகிறது.

கான வினோதன் குழுவினரின் இன்னிசையுடனும் செம்மொழியான தமிழ் மொழியாம் என்ற பாரத நாட்டியத்துடனும் மாநாடு துவங்கியது. ஏற்பாட்டுக் குழுத் தலைவர் மணியம் தொடக்க உரை ஆற்றினார். சிம் பல்கலைக் கழக பேராசிரியர் ட்சுஇ காய் சாங் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் இணையத் தமிழுக்கு சிறப்பாகப் பங்காற்றிய அனந்த கிருஷ்ணன், பொன்னவைக்கோ, கல்யாண சுந்தரம், வாசு ரங்கநாதன், லீசா அமைப்பின் ராஜ்குமார் சந்திரா, மணியம் முதலியோருக்கு விருதுகள் வழங்கப் பட்டன.


சிங்கப்பூர் அமைச்சர் ஈஸ்வரன் கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்துப் பேசும் போது, உலகளாவிய நிலையில் வளர்ந்து வரும் தமிழ் மொழிக்கு சிங்கப்பூர் அரசு சிறப்பான இடம் அளித்து வருகிறது. சிங்கப்பூர் அரசின் அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி விளங்குகிறது. தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழைக் கட்டிக் காப்பதும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதும் தலையாய கடமை.

இன்று தகவல்களுக்குப் பஞ்சமில்லை. இவற்றைப் பெற்று, உணர்ந்து கவனம் செலுத்தி இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல இணையம் பயன்படுகிறது இன்றைய இளைஞர்கள் இணையத்தை வெகுவாக பயன்படுத்துகின்றனர்.

எதிர்நோக்கும் சவால்களை இளைஞர்கள் சமாளிக்க, உயரிய தமிழ் பண்பாட்டினை, தமிழ் ஆர்வத்தினை வளர்த்திட இம்மாநாடு உதவும். அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் விதத்தில் இக்கண்காட்சியின் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன சமூக ஊடகங்களான முகநூல், டிவிட்டர் போன்றவற்றிலும் மொழி பற்றியும், தமிழ் மொழி பற்றிய ஈடுபாட்டையும் ஏற்படுத்த இம்மாநாடு உதவ வேண்டும். காலத்திற்கேற்ப கருப் பொருளை இம்மாநாடு தேர்ந்தெடுக்கிறது. இம்மாநாட்டில் சிம் பல்கலை கழகமும் இணைந்திருப்பது பாராட்டுக்குரியது என சிங்கப்பூர் அமைச்சர் உரையாற்றினார்.

by Swathi   on 30 May 2015  0 Comments
Tags: INFITT Singapore Conference   Tamil Internet Conference   தமிழ் இணைய மாநாடு   உத்தமம் இணைய மாநாடு   சிங்கப்பூர் இணைய மாநாடு   14வது உலகத் தமிழ் இணைய மாநாடு     
 தொடர்புடையவை-Related Articles
சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !! சிங்கப்பூரில் கோலாகலமாக துவங்கிய 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு !!
சிங்கப்பூரில் பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் பதிநான்காவது உலகத் தமிழ் இணைய மாநாடு
13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு -2014 உத்தமம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.