LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF

16 என்பது இளமை அல்ல!

அதிகமான முதியோர்களை, கிரிமினல்களை, கோடீஸ்வரர்களை, பெண்களைக் கொண்டதாக மலர்ந்துள்ளது 16-ஆவது மக்களவை


முதிய பாரதம்: 
முதிய வயதுடையவர்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மக்களவை இதுதான். அதிகமான வயதுடையவர் பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி (வயது 86). பிரதமர் நரேந்திர மோடிக்கு 63 வயது. 25-35 வயதுடையோர் 136 பேர். 56-65 வயதுடையோர் 171 பேர். 66-75 வயதுடையோர் 70 பேர். 76-85 வயதுடையோர் 9 பேர். தென்சென்னை எம்.பி. ஜெயவர்த்தன் உட்பட 5 பேர் மட்டுமே 26 வயதுடைய இளைஞர்கள்.


மகளிர் மன்றம்: 
புதிய மக்களவையில் இதுவரை இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் பெண் உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல் நாடாளுமன்றத் தேர்தலில் (1952) 5 சதவிகித (22 பேர்) பெண்களும், 1977 தேர்தலில் 4 சதவிகித (19 பேர்) பெண்களும், 2009 தேர்தலில் 10.7 (59 பேர் ) சதவிகித பெண்களும் இடம் பெற்றனர். தற்போது 11.3 சதவிகிதம் (61 பேர்) இடம் பெற்றுள்ளனர்.


குபேரர்கள் கிளப்: 
இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 எம்.பி.க்களில் 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து மதிப்பை உடையவர்கள். 2009 தேர்தலில் 58 சதவிகிதமாகவும், 2004 தேர்தலில் 30 சதவிகிதமாகவும் இருந்த கோடீஸ்வரர்களின் சதவிகிதம் இப்போது 82 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, ஒஎஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்களில் பலர் 50 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளனர். 16-ஆவது மக்களவையில் மிகப் பெரிய கோடீஸ்வரர் எம்.பி.யாக விளங்குபவர், தெலுங்கு தேசக் கட்சியின் ஜெயதேவ் கல்லா. குண்டூர் தொகுதி எம்.பி.யான இவருடைய சொத்து மதிப்பு 683 கோடி ரூபாய்.

 

எம்.பி.க்கள் ஜாக்கிரதை: 
மொத்த எம்.பி.க்களில் மூன்றில் ஒரு பகுதியினர் (34 சதவிகிதம்) கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள். பாஜகவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். 5-இல் ஒரு பகுதியினர் மிக மோசமான கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்கள். கிரிமினல் வழக்குகளை சந்திப்பவர்களின் எண்ணிக்கை 2004 தேர்தலில் 30 சதவிகிதமாகவும், 2009 தேர்தலில் 24 சதவிகிதமாகவும் இருந்தது.


படிக்காத மேதைகள் பலர்:
உயர்நிலைப்பள்ளி தேர்வைக் கூட முடிக்காதவர்கள் 13 சதவிகிதம் பேர். 75 சதவிகிதம் பேர் பட்டதாரிகள். ஆய்வுப் பட்டம் பெற்றவர்கள் 6 சதவிகிதம் பேர்.

 

இஸ்லாமியர்கள் குறைவு:
இந்த மக்களவையில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. வெறும் 22 பேர் மட்டுமே தற்போது மக்களவைக்கு செல்கின்றனர். 1952 தேர்தலில் 25 பேரும், 1980 தேர்தலில் 49 பேரும், 2004 தேர்தலில் 35 பேரும் மக்களவையில் இடம் பெற்றனர்.

 

விவசாயிகள் அதிகம்:
மொத்த உறுப்பினர்களில் 27 சதவிகிதம் பேர், விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். 20 சதவிகிதம் பேர் தொழிலதிபர்கள்.


நன்றி - புதிய தலைமுறை.

by Swathi   on 28 May 2014  0 Comments
Tags: 16 th Parliament   16th Parliament   India\'s Young Parliament   16 வது பாராளமன்றம்   நாடளமன்றம்   எம்.பி.க்கள்     
 தொடர்புடையவை-Related Articles
16 என்பது இளமை அல்ல! 16 என்பது இளமை அல்ல!
பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் இறுதி சடங்குக்கான நிதியை வழங்க அமெரிக்கா பாராளமன்றம் ஒப்புதல் !! பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களின் இறுதி சடங்குக்கான நிதியை வழங்க அமெரிக்கா பாராளமன்றம் ஒப்புதல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.