பர்மா-(மியான்மார்) நாட்டில் இயங்கி வரும் யாங்கோன்_சமரச_சுத்த_சன்மார்க்க_சங்கம் ( 1951 )ஆம் ஆண்டில் யாங்கோன் மாநகரில் அமைக்கப்பட்டு வள்ளலாரின்_சன்மார்க்க_வழிமுறைகள் ; சன்மார்க்க_கொள்கைகளை இன்றுவரை பரப்புரை செய்து கொண்டிருக்கும் சங்கம் ஆகும். இந்த ஆண்டு ( 2018 ) யாங்கோன் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் திருவருட்_பிரகாச_வள்ளலாரின்196_ம்_ஆண்டு_உலகுக்கு_வருவிக்க_உற்ற_பெருநாள்_விழாவை ( 7.10.2018 )ஆம் நாள் ( ஞாயிற்றுக்கிழமை ) காலை ( 7:30 ) மணி முதல் ஆரம்பிக்கப்பட்டு மாலை ( 5:00 ) மணிவரை யாங்கோன் மாநகர் எண் ( 76/80 ) , பஞ்ஞாடல்லா ( போலேன் ) வீதியில் அமைந்துள்ளஅருள்மிகு_மேட்டு_சிவன்_ஆலய_மண்டபத்தில் நடைபெறும். விழா_நிகழ்ச்சிகள்;
காலை ( 7:30 )மணி முதல் ( 9:00 ) மணி வரை சிறப்புக்_கூட்டுப்பிரார்த்தனை_நடைபெறும் ! தமிழ்நாடு ,வடலூர்_வள்ளலார்_சபையில் இருந்து வருகை தரும் இமயஜோதி_அருட்திரு_ஞானானந்த_சுவாமிகள் அவர்களும்; திருவண்ணாமலையில் இருக்கும் சமரச சுத்த சன்மார்க்க சபையில் இருந்து வருகை தரும் ,அருட்திரு_சாது_ஜானகிராமன் ( சன்மார்க்க போதகர் ) அவர்களும் ; அருட்திரு_சாது_சரவணன்_சுவாமிகள்_அவர்களும் கூட்டுப் பிரார்த்தனை முதல் விழா முடியும் வரை சன்மார்க்கப் போதனை ; சத்சங்கம் ; சன்மார்க்கப் பாடல்களைப் பாடி விழாவில் இருந்து சிறப்பிப்பார்கள் ! காலை ( 9:00 ) மணி முதல் வள்ளல்பெருமான்_உலகுக்கு_வருவிக்க_உற்ற_பெருநாள்_விழா பகல் ( 12:00 ) மணி வரை நடைபெறும். பகல் (12:00 ) மணிமுதல் பிற்பகல் ( 2:00 ) மணிவரை திருவருட்பாவின்_ஆறாம்_திருமுறை_பாடல்கள் ; வள்ளற்பெருமானைப் பற்றிய பாடல்கள் ; தெய்வீக_பாடல்களைப்_பர்மாத்தமிழ்_இசைக்கலைஞர்கள்_பாடி_சிறப்பிப்பார்கள். பிற்பகல் ( 2:00 ) மணிமுதல் ( 3:00 )மணிவரை தியானம்_நிகழ்ச்சி_நடைபெறும். பிற்பகல் ( 3:00 )மணி முதல் மாலை ( 5:00 )மணி வரை முதியோர்களை_வணங்கி_சிறப்பிக்கும்_நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும். காலை ( 7:00 ) மணிமுதல் ( 9:00 )மணி வரை சிற்றுண்டி_தேனீர்உபசரிப்பு நடைபெறும்.பகல் (10:00 ) மணிமுதல் பிற்பகல் ( 1:00 )மணிவரை உணவு_உபசரிப்பு நடைபெறும்.
முதியோர்களை_வணங்கி_சிறப்பிக்கும்_நிகழ்ச்சியில்விழாவிற்கு வருகை வந்த1500_த்துக்கும்_மேற்பட்ட_முதியவர்களை * 🙏வணங்கி🙏 * அவர்களுக்கு பர்மா_பணம் ( Ks.10,000/- ) வீதமும் ; போர்வை துப்பட்டி ( 1 )ம் , ஆண்_முதியோர்களுக்கு லுங்கி ( 1 )ம் ,பெண்_முதியோர்களுக்கு சேலை ( 1 )ம் , கையிலி ( 1 )ம் வழங்கப்படுகிறது.இவைகள்_எல்லாம்_ஆண்டுதோறும்_நடைபெற்று_வருபவைகள்_ஆகும் . வள்ளற்பெருமான் விழாவிற்கு3000_பேர்களுக்கு_மேற்பட்ட_மக்கள்கள்_வருகை_தருகின்றார்கள் ! ( 3000 ) த்துக்கும் மேற்பட்டோர்களுக்குஉணவு_உபசரிப்பு_நடைபெற_இருக்கின்றது. ஆகையால் ; உலகத்தமிழர்கள் பலரும் , பர்மாவில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் வருகைதந்து கலந்து கொண்டு ஆதரவு தரும்படியாங்கோன்_சமரச_சுத்த_சன்மார்க்க_சங்கத்தினர்கள்சார்பாக மிகவும் அன்போடு அழைக்கின்றோம் ! வருக ! வருக ! ஆதரவு தருக ! வள்ளற்பெருமானின்_சன்மார்க்க_நெறி_உலகமெல்லாம்_பரவிட_வேண்டும்! எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ்க . பசித்திரு ! தனித்திரு! விழித்திரு ! " நல்லதை நினை ! நல்லதையே சொல் ! நல்லதையே செய் ! " * அதனால் நல்லதே நடக்கும் * -------------- ------------- -------- ( வள்ளலார் ) ------------------------------------------------------------------------------------------------------------- அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ------------------------------------------------------------------------------------------------------------ உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ வேண்டும் ! என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுகிறோம் ! நன்றி ! வணக்கம் ! வாழ்த்துக்கள்!
|