LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்!!

1990-களில் குழந்தைகளின் சூப்பர் ஹீரோ என்றால், சந்தேகமே வேண்டாம் அது சக்திமானாகத்தான் இருக்க முடியும். அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சியின் தாக்கம் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்திருந்தது.

கேபிள்களில் புதுப்புது சேனல்கள், புதுப்புது நிகழ்ச்சிகள் என அணிவகுத்து வந்தாலும், வாரக்கடைசியில் சக்திமானை பார்ப்பதற்கு என இளசுகள் முதல் பெரியவர்கள் வரை காத்துக்கிடந்த காலம் அது. சக்திமான் கேரக்டரும், அதன் வெளிப்படையான இன்னொரு வெகுளித்தனமான கேரக்டரான பண்டிட் கங்காதர் என இருவேடங்களில் கலக்கிய முகேஷ் கண்ணாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளம் அதிகம்.

ஒவ்வொரு எபிசோடின் முடிவில் முகேஷ் கண்ணா கொடுக்கும் யோகா ரகசியங்கள், காய்கறிகள் சாப்பிட வேண்டும் போன்ற டிப்ஸ்களும் சீரியலின் சிறப்பு அம்சங்கள். பண்டிதர் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்காரனாத் சாஸ்தியாக வரும் முகேஷ் கண்ணா, பின் அநீதியைக் கண்டு பொங்கி எழும் சக்திமானாக உருப்பெற்று தீயவற்றை எதிர்த்து சண்டையிடும் காட்சிகளால் பெரும் வரவேற்பை பெற்றது அத் தொடர்.

இந்நிலையில் சக்திமான் சீரியல் மீண்டும் புதிய பொலிவுடன் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த புதிய பாகத்தில், சிறு வயது சக்திமான் பற்றியும் அவருக்கு சக்திகள் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது பற்றியும் அதே சமயம் பழைய தொடர் எங்கே நிறுத்தப்பட்டதோ அங்கே இருந்து புது சீரியல் துவங்கப்படும் எனவும். இதற்காக டிடி சேனலில் மாலை 6 மணி முதல் 6.30 வரை ஒளிபரப்பு செய்ய பேசி வருவதாக இந்த சீரியலின் ஹீரோ முகேஷ் கண்ணா கூறியுள்ளார். இப்போது மீண்டும் சக்திமான் வருகிறார்.  இப்போதைய குழந்தைகள் மட்டுமின்றி, 90களில் குழந்தைகளாக இருந்த பெரும்பாலானவர்களுக்குத் தான் இதில் ஆதீத ஆர்வம் இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை.

by CinemaNews   on 22 Jun 2016  2 Comments
Tags: Shaktimaan   Shaktimaan Seerial   Super Hero   சக்தி மான்   சக்தி மான் சீரியல்        
 தொடர்புடையவை-Related Articles
மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்!! மீண்டும் புதுப்பொலிவுடன் கலக்க வருகிறார் சக்திமான்!!
கருத்துகள்
08-Nov-2016 10:22:33 KARTHICK said : Report Abuse
நான் என் சிறிய வயதில் சக்திமான் பார்ப்பேன் மிகவும் ஆர்வமாக ...... எப்போது வரும் என்று காத்துகொண்டு இருக்கிறேன் ...... உங்களை மீண்டும் வரவேற்கிறேன் சக்திமான் ......கமிங் பாஸ்ட் ......... நோட்: தயவு செய்து மீண்டும் நிறுத்தி விடாதீர்கள் ...... . .. மிகவும் நன்றி ...
 
03-Aug-2016 02:35:52 Sathish said : Report Abuse
SuperSuper!!! I am waiting...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.