|
|||||
1996ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் |
|||||
தொகுதிகள்:1996 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித்
தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அரசியல் நிலவரம்:1991 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்-இந்திரா காங்கிரசு கூட்டணி
பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் தலைவி ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில
காலத்திற்குள் அதிமுக-காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில்
மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான வை. கோபால்சாமி கருணாநிதியுடன் ஏற்பட்ட
கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார். அவ்வாண்டே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுக்கட்சியை
தொடங்கினார்.தேர்தல் நெருங்கும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும்
என்று அதன் தேசியத் தலைவரும் இந்தியப் பிரதமருமான நரசிம்ம ராவ் அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவுபட்டு ஜி. கே. மூப்பனார்
தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரசு என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.கூட்டணிகள்:இத்தேர்தலில் நான்கு
முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக இந்திய
பொதுவுடமைக் கட்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா கட்சி
தனித்துப் போட்டியிட்டது. சுப்ரமணியம் சாமியின் ஜனதா கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியுடன் சில தொகுதிகளில் கூட்டணி அமைத்துப்
போட்டியிட்டது. திமுக-தாமக கூட்டணியில் இந்திய தேசிய லீக், அகில இந்திய ஃபார்வார்டு ப்ளாக்கின் ஒரு பிரிவு போன்ற சிறு கட்சிகளும் இடம்
பெற்றிருந்தன.தேர்தல் முடிவுகள்: மொத்தம் 66.95 % பதிவாகின.திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின்
முதல்வரானார்.கட்சிகளுக்குள் விரிசல்:அதிமுகவின் தோல்வியால் அக்கட்சி பிளவுபட்டது. சு. திருநாவுக்கரசர் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து போய்
தனியே கட்சி தொடங்கினர். அதுவே பின்னர் எம். ஜி. ஆர் அதிமுக என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக
ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது.
பாமக தேர்தலில் தனித்து போட்டியிடுவது இதுவே கடைசி முறை. அதன் பின்னர் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அல்லது திமுக கூட்டணிகளில்
அங்கம் வகித்து வந்துள்ளது. திமுக-தாமக கூட்டணி 1996 நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாடு புதுச்சேரியில் அனைத்து இடங்களை வென்றது. இதனால்
மத்தியில் அமைந்த காங்கிரசல்லா ஐக்கிய முன்னணி அரசில் இரு கட்சிகளும் இடம் பெற முடிந்தது.
தொகுதிகள்:
1996 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் 189 பொதுத் தொகுதிகளில் இருந்தும் 45 தனித் தொகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசியல் நிலவரம்:
1991 தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்திரா காங்கிரசு கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. 224 தொகுதிகளில் வென்று, அதிமுகவின் தலைவி ஜெ. ஜெயலலிதா தமிழக முதல்வரானார். ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற சில காலத்திற்குள் அதிமுக,காங்கிரசு உறவில் விரிசல் விழுந்தது. இந்திரா காங்கிரசு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயல்பட்டது. இரண்டே இடங்களில் மட்டும் வென்ற திமுகவிலும் உள் கட்சிப் பூசல் வெடித்தது. திமுகவின் முன்னணி தலைவர்களுள் ஒருவரான வை. கோபால்சாமி கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1993 ஆம் ஆண்டு திமுகவை விட்டு வெளியேறினார். அவ்வாண்டே மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.தேர்தல் நெருங்கும் வரை எதிர்க்கட்சியாக செயல்பட்ட இந்திரா காங்கிரசு, தேர்தல் அறிவிக்கப்பட்டபின் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் என்று அதன் தேசியத் தலைவரும் இந்தியப் பிரதமருமான நரசிம்ம ராவ் அறிவித்தார். இதனால் தமிழக காங்கிரசு பிளவுபட்டு ஜி. கே. மூப்பனார் தலைமையில் ஒரு பிரிவினர் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரசு என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.
கூட்டணிகள்:
இத்தேர்தலில் நான்கு முனை போட்டி காணப்பட்டது. திமுக-தாமக-இந்திய கம்யூனிஸ்ட் ஒரு அணியாகவும், அதிமுக-இந்திரா காங்கிரசு ஓரணியாகவும், மதிமுக இந்திய பொதுவுடமைக் கட்சிமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஓரணியாகவும், திவாரி காங்கிரசு-பாட்டாளி மக்கள் கட்சி ஓரணியாகவும் போட்டியிட்டன. பாரதீய ஜனதா கட்சி
தேர்தல் முடிவுகள்:
மொத்தம் 66.95 % பதிவாகின.திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மு. கருணாநிதி நான்காம் முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
கட்சிகளுக்குள் விரிசல்:
அதிமுகவின் தோல்வியால் அக்கட்சி பிளவுபட்டது. சு. திருநாவுக்கரசர் தலைமையில் ஒரு பிரிவினர் பிரிந்து போய் தனியே கட்சி தொடங்கினர். அதுவே பின்னர் எம். ஜி. ஆர் அதிமுக என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. முதன் முதலில் தேர்தலில் போட்டியிட்ட மதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. இரண்டாவது முறையாக தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி நான்கு தொகுதிகளில் வென்றது. பாமக தேர்தலில் தனித்து போட்டியிடுவது இதுவே கடைசி முறை. அதன் பின்னர் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக அல்லது திமுக கூட்டணிகளில் அங்கம் வகித்து வந்துள்ளது. திமுக-தாமக கூட்டணி 1996 நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழ்நாடு புதுச்சேரியில் அனைத்து இடங்களை வென்றது. இதனால் மத்தியில் அமைந்த காங்கிரசல்லா ஐக்கிய முன்னணி அரசில் இரு கட்சிகளும் இடம் பெற முடிந்தது. |
|||||
by Swathi on 25 Aug 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|