LOGO
  முதல் பக்கம்    அரசியல்    தேர்தல் Print Friendly and PDF

1998ம் ஆண்டு தமிழகத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்

 

பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்: இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி 
மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 30 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
நிலவரம்:1998ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு 
ஒதுக்கப்பட்டிருந்தன. 1996 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணி அரசுகள் இரண்டாடுகளுக்குள் கவிழ்ந்தன. இந்திய தேசிய 
காங்கிரசு ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஐ. கே. குஜரால் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து 
கவிழ்ந்தது.புதிய நாடாளுமன்ற தேர்தல்:புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் 
தமிழகத்தில் இருபெரும் கூட்டணிகள் போட்டியிட்டன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில பாஜக, மதிமுக, பாமக, சுப்பிரமணியன் 
சாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. மற்றொரு கூட்டணியான் ஐக்கிய 
முன்னணியில் திமுக, தமாக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய தேசிய காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 
கட்சியும் தனித்துப் போட்டியிட்டன.தமிழக அமைச்சர்கள்:இத்தேர்தலில் வெற்றி பெற்ற ரங்கராஜன்,குமாரமங்கலம்,தம்பித்துரை,சேடப்பட்டி 
முத்தையா,வாழப்பாடி ராமமூர்த்தி முதலிய தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்.

பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்:

 

     இந்தியக் குடியரசின் பன்னிரெண்டாவது நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டில் 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி 
மாதம் நடை பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 30 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.

 

நிலவரம்:

 

     1998ல் தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. 1996 நாடாளுமன்றத்தேர்தலுக்குப் பின் அமைந்த ஐக்கிய முன்னணி அரசுகள் இரண்டாடுகளுக்குள் கவிழ்ந்தன. இந்திய தேசிய காங்கிரசு ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஐ. கே. குஜரால் தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்து கவிழ்ந்தது.

 

புதிய நாடாளுமன்ற தேர்தல்:

 

     புதிய நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் 1998ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்டன. இத்தேர்தலில் 
தமிழகத்தில் இருபெரும் கூட்டணிகள் போட்டியிட்டன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில பாஜக, மதிமுக, பாமக, சுப்பிரமணியன் சாமியின் ஜனதா கட்சி, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரசு ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. மற்றொரு கூட்டணியான் ஐக்கிய முன்னணியில் திமுக, தமாக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்திய தேசிய காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தனித்துப் போட்டியிட்டன.

 

தமிழக அமைச்சர்கள்:

 

     இத்தேர்தலில் வெற்றி பெற்ற ரங்கராஜன்,குமாரமங்கலம்,தம்பித்துரை,சேடப்பட்டி முத்தையா,வாழப்பாடி ராமமூர்த்தி முதலிய தமிழக உறுப்பினர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றனர்.

by Swathi   on 25 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம் 2016 சட்டசபை தேர்தலில் கலந்துகொண்ட கட்சிகளின் நிலவரம்
2001 Census Population Distrcit Level with SC/ST 2001 Census Population Distrcit Level with SC/ST
2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள் 2016 - சட்டசபை தேர்தல் தொகுதிகள் -மாவட்டங்கள் -வெற்றிபெற்ற வேட்பாளர்கள்- கட்சிகள்
பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல் பெண் வேட்பாளர்கள் -2016 சட்டசபை தேர்தல்
பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election) பட்டப்படிப்பு அல்லது மேல்படிப்பு படித்த வேட்பாளர்கள் (2016 Election)
Tamil Nadu Election Summary (2016) Tamil Nadu Election Summary (2016)
தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN தமிழகத்தின் கிராம நகர வாரியான மக்கள்தொகை விவரம் - population censes by cities and Towns of TN
தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை-  District wise Population of TN தமிழகத்தின் மாவட்டவாரியான மக்கள்தொகை- District wise Population of TN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.