ஜனவரி
2 : இந்திய அணி தலைவர் தோனிக்கு விளையாட்டு நெறிகளை கடைபிடித்தற்கான
சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது.
8 : சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் -
செர்பியாவின் டிப்சரேவிச் சம்பியன் பட்டம்
28 : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் லியாண்டர் பெயஸ் - செக்குடியரசின்
ஸ்டெபனக் பட்டம் வென்றனர்.
பிப்ரவரி
4 : IPL கிரிக்கெட் போட்டியில் ரவீந்தர ஜடேஜா 9.2 கோடிக்கு ஏலம்.
மார்ச்
4 : பெண்கள் கபடி உலக கோப்பை போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது
9 : சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற போவதாக இந்தியாவின் தடுப்பு
சுவர் திராவிட் அறிவிப்பு.
ஏப்பரல்
9 : அமெரிக்காவில் புற்றுநோய் சிகிச்சை பெற்றுவந்த இந்திய கிரிகெட் வீரர் யுவராஜ்
நாடு திரும்பினார்.
மே
26 : சென்னை ஓபன் ஸ்குவாஷ் சாம்பியன்சிப் போட்டியில் இந்திய வீராங்கனை
ஜோஸ்னா சின்னப்பா வெற்றி
27 : IPL தொடரை வென்றது கோல்கத்த நைட் ரைடர்ஸ்
ஜூன்
6 : உலக செஸ் சாம்பியன் பட்டத்தை விஸ்வநாத ஆனந்த் 5 வது முறையாக
பெற்றார்.
7 : பிரென்ஞ் ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் மகேஷ் பூபதி - சானியா
ஜோடி வெற்றி.
ஜூலை
1 : யூரோ கால்பந்து போட்டியில் ஸ்பெயின் வெற்றிபெற்றது
7 : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 5 வது முறையாக
வெற்றி
28 : லண்டன் ஒலிம்பிக் போட்டி தொடங்கியது
30 : இந்தியாவின் ககன் நரங் லண்டன் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில்
வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆகஸ்ட்
3 : ஒலிம்பிக்கில் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்திய வீரர் விஜய் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார்.
4 :லண்டன் ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் பிரிவில் இந்திய வீராங்கனை சாய்னா
வெண்கலப்பதக்கம் வென்றார்.
8 : ஒலிம்பிக் மகளிர் குத்துசண்டை பிரிவில் மேரி கோம் வெண்கல பதக்கம்
வென்றார்.
10 : ஒலிம்பிக் ஆண்கள் 200 மீட்டார் ஓட்டபந்தயத்தில் தொடர்ந்து இரண்டு முறை
தங்கம் வென்று ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் சாதனை
11 : ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 60 கிலோ பிரிவில் இந்தியாவில் யோகேஷ்வர்
வெண்கலப்பதக்கம் வென்றார்.
12 : ஒலிம்பிக் ஆண்கள் மல்யுத்தம் 66 கிலோ பிரிவில் இந்திய வீரர் சுஷில் குமார்
வெள்ளிப் பதக்கம் வென்றார்.
18 : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வி,வி.எஸ்.லஷ்மன் ஓய்வு.
26 : 19 வயதிற்குட்பட்ட வீரர்களுக்கான உலக கோப்பையில் இந்திய அணி
மூன்றாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றது.
செப்டம்பர்
2 : நேரு கோப்பை கால்பந்து போட்டி இந்தியா வெற்றி.
15 : இந்திய வீரர் விராத் கோலிக்கு ஒரு நாள் போட்டிகளில் சிறந்த வீரருக்கான
விருது.
27 : இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தேர்வுக் குழு தலைவராக சந்தீப் பாட்டில்
நியமனம்
அக்டோபர்
11 : ICC ன் கிரிக்கெட் குழு தலைவராக இந்திய முன்னாள் கேப்டன் அணில்
கும்ளே நியமனம்
21 : டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் இந்திய வீராங்கனை சாய்னா சாம்பியன்.
நவம்பர்
6 : மும்பையில் இந்திய வீரர் சச்சினுக்கு "ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா" விருது
வழங்கப்பட்டது.
25 : பார்முலா 1 கார் பந்தயத்தில் ஜெர்மனி வீரர் செபாஸ்டின் வெட்டல் மீண்டும்
சம்பியன் பட்டன் வென்றார்.
டிசம்பர்
1 : உலக ஸ்குவாஷ் தரவரிசை பட்டியலில் டாப் 10 இடத்தை பிடித்தார் தீபிகா
பாலிகள்.
13 : பார்வையற்றோருக்ககான முதலாவது உலக கோப்பை T-20 போட்டியில்
இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
17 : இங்கிலாந்து அணி 28 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை
வென்றது.
3 : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் பாண்டிங் ஓய்வு.
|