|
|||||
2013-ல் இந்திய சாதனைகளும், சாதித்தவர்களும் !! |
|||||
![]() ஜனவரி 22 : மும்பை மலாட் பகுதியில் வசித்து வந்த தமிழ் மாணவி பிரேமா சார்ட்டர்ட் அக்கவுண்ட்டட் (சி.ஏ) தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்து தேர்ச்சி.
ஜனவரி 27 : வங்காள விரிகுடா கடலில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவப்பட்ட கே-5 ஏவுகணை சோதனை வெற்றி.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் பிபுசிதா தாஸ் முதல் பெண் கப்பல் அதிகாரி ஆனார்.
பிப்ரவரி 3 : சேலம் வெண்பட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது.
பிப்ரவரி 14 : திரிபுரா சட்ட பேரவைத் தேர்தலில் நாட்டிலேயே முதன் முறையாக 93 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை.
2011 ம் ஆண்டுகான இந்திரா காந்தி அமைதி விருது சமூக சேவகி இலா பட்டுக்கு வழங்கப்பட்டது.
பிப்ரவரி 25 : நிலம், நீர், தட்பவெப்பம், கடல் பாதுகாப்புக்காக ஏவப்பட்ட இந்தியாவின் 101 வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி சி-20 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. மேலும் ஆறு நாடுகளின் 7 செயற்கைக்கோளை 22 வது நிமிடத்தில் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தியது.
பிப்ரவரி 27 : சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 3 வயது குழந்தைக்கு ரத்த குழாய் மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை.
மார்ச் 15 : கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் பிரிவின் தலைவராக இந்திய வம்சாவளி தமிழரான சுந்தர் பிச்சை தேர்வு.
மார்ச் 26 : இந்தியாவிலேயே உள்நாட்டு தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்க் கப்பலான ஐஎன்எஸ் கில்டன் முறைப்படி கடற்படையில் சேர்க்கப்பட்டது.
ஏப்ரல் 6 : வலது புறம் இருதயம் கொண்டவருக்கு ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை, நவீன முறையில் சிகிச்சை அளித்து, அதை நீக்கி மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை.
மே 21 : இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ரோந்து கப்பலான வைபவ் தூத்துக்குடி கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டது.
மே 22 : கோவா கடற்கரை பகுதியில் ஐஎன்எஸ் தர்காஷ் போர் கப்பலில் இருந்து பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாக ஏவி சோதனை.
ஜூன் 28 : ராணுவத்தில் முதல் பெண் துணை கமான்டராக கனேவி லால்ஜி நியமனம்.
ஜூலை 26 : இந்தியாவின் வானிலை ஆய்வு செயற்கைக்கோள் இன்சாட் 3 டி, ஏரியான்-5, ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜூலை 27 : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு பேருக்கு கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் துறைகளில் உயரிய சிமென்ஸ் சாதனையாளர் விருது கண்ணன் சுந்தர்ராஜன், ராஜீவ் அலூர், சலீல்வதான், செந்தில் தோதாத்ரி ஆகியோருக்கு கிடைத்தது.
ஆகஸ்ட் 30 : கடற்படையின் பிரத்யோக உபயோகத்துக்காக ஜிசாட்-7 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோள், ஏரியான்-5 ராக்கெட் மூலம் பிரெஞ்சு கயானா ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
செப்டம்பர் 5 : மத்திய தகவல் ஆணையத்தின் முதல் தலைமை ஆணையராக தீபக் சாந்து பதவியேற்பு.
செப்டம்பர் 27 : அமெரிக்காவின் உயர்ந்த பட்ச அதிகாரம் படைத்த கோர்ட் நீதிபதியாக இந்தியரான சீனிவாசன் பதவியேற்பு.
செப்டம்பர் 29 : மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி அமெரிக்க பல்கலைகழகத்தில் கண்டுபிடித்தார்.
செப்டம்பர் 7 : ஒடிசா மாநிலத்தில் சண்டிப்பூரில் உள்ள சோதனை தளத்திலிருந்து பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நவம்பர் 5 : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்கான இந்தியா ஏவிய மங்கல்யான் விண்கலம் 43 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு பூமியை சுற்றத் தொடங்கியது.
நவம்பர் 18 : ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அணு ஆயுத சோதனை தளத்தில் இருந்து பிரமோஸ் ஏவுகணை இந்திய இராணுவத்தால் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
டிசம்பர் 28 : டெல்லி மாநிலத்தின் இளம் முதவராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்றார். |
|||||
by Swathi on 31 Dec 2013 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|