LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

2014-ல் முக்கிய நிகழ்வுகள் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!

ஜனவரி 1 : ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் மசோதாவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.

இந்திய அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ரூ.360 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதால், வி.வி.ஐ பிக்களின் பயணத்துக்காக ஆர்டர் செய்யப்பட்ட அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஹெலிகாப்டர் ஒப்புதல் ரத்தானது.

நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வீரர் ஆண்டர்சன் 36 பந்தில் அதிவேக சதம் அடித்து உலக சாதனை படைத்தார்.

ஜனவரி 5 : இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இஞ்சின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்வி - டி5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

ஜனவரி 6 : சிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசு நிர்வகிக்க உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பு.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.கே.கங்குலி, மேற்கு வங்க மனித உரிமை கமிஷன் தலைவர் பதவியிலிருந்து விலகல்.

ஜனவரி 9 : தமிழகத்தில் சட்டப்படி அனுமதி பெறாமல் பேனர் வைப்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு சித்து நடவடிக்கை உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஜனவரி 16 :
இந்தியாவின் பழமையான யோகா கலைக்கு யாரும் காப்புரிமை கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஜனவரி 18 : மும்பையில் இறந்த தாவூதி பொஹ்றா மத தலைவர் சையத்னா மொகமத் பர்ஹனுத்தீனுக்கு இறுதி மரியாதை செலுத்த அவருடைய வீட்டின் அருகே லட்சக் கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் பலி.

ஜனவரி 20 : ஒடிசா வீலர் தீவில் நடத்தப்பட்ட அக்னி 4 ஏவுகணை சோதனை வெற்றி.

தேசிய காவல் அகாடமியின் முதல் பெண் இயக்குனராக அருணா பகுகுணா நியமனம்.

ஜனவரி 21 : கருணை மனு தாமதமாக நிராகரிக்கப்பட்டதால், வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் உட்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுளாக குறைத்து உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.

ஜனவரி 22 : கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எதுவம் செல்லாது என் ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு.

ஜனவரி 23 : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராகேஷ் குரானா, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையின் டீனாக நியமனம்.

ஜனவரி 26 : அந்தமான் கடலில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 21 பேர் உட்பட 28 பேர் பலி.

ஜனவரி 27 : தமிழக - இலங்கை மீனவர்கள் இடையே சென்னையில் 6 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டதாக இரு நாட்டு மீனவர்களின் கூட்டமைப்பு அறிவித்தது.

ஜனவரி 30 : வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியது.

ஜனவரி 31 : மாநிலங்களவை எம்.பி தேர்தலில் அதிமுக சார்பில் எஸ்.முத்துக்கறுப்பன், ஏகே.செல்வராஜ், எல்.சசிகலா புஷ்பா, விசிலா சத்தியானந்த், திமுக சார்பில் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் சார்பில் டி.கே ரங்கராஜன் ஆகிய 6 பேர் போட்டியின்றி தேர்வு.

டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் காலிஸ்தான் தீவிரவாதி தேவிந்தர்பால் சிங் புல்லரின் தூக்குத் தண்டனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு.


*****



பிப்ரவரி 1 : நாட்டின் முதலாவது மோனோ ரயில் சேவை மும்பையில் தொடக்கம். வடாலா முதல் செம்பூர் வரை 8.8 கி.மீ தூரம் உள்ள வழித்தடத்தில் மோனோ ரயில் சென்றது.

உத்தரகான்ட் மாநில முதல்வராக ஹரிஷ் ராவத் பதவியேற்பு.

பிப்ரவரி 4 : பிரபல விஞ்ஞானி சி.என்.ராவ், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுலகருக்கு நாட்டின் உயரிய விருதான் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

பிப்ரவரி 5 : மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டார்.

பிப்ரவரி 9 : ஓடிசாவின் சாபல்பூர் மாவட்டத்தில் மகாநதி ஆற்றின் சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

பிப்ரவரி 10 : சென்னையில் விதிமுறைகளை மீறி கட்டப் பட்டுள்ள 3 லட்சம் கட்டிடங்களுக்கு அரசு வழங்கியுள்ள சலுகைகளை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு.

விசா மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியப் பெண் தூதராக அதிகாரி தேவயானி கோப்ரக்டே, நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டது.

பிப்ரவரி 11 : நேபாள பிரதமராக சுஷில் கொய்ராலா பதவியேற்பு

அல்ஜீரியா ராணுவத்துக்கு சொந்தமான சி-130 ஹெர்குலஸ் ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 103 பேர் பலி.

பிப்ரவரி 12 : ரயில்வே இடைக்கால பட்ஜெட் தாக்கலானது. பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. புதிதாக தமிழகத்துக்கு 9 ரயில்கள் உட்பட 73 புதிய ரயில்கள் அறிவிப்பு.

பிப்ரவரி 13 : மக்களவையில் தெலுங்கானா தனி மாநில மசோதா தாக்கலாவதை தடுப்பதற்காக காங்கிரஸ் எம்பி ராஜகோபால் "மிளகு ஸ்பிரே" அடித்தால் உறுப்பினர்களுக்கு கண் எரிச்சல், இருமல் ஏற்பட்டது.மைக், டேபிள் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

பிப்ரவரி 14 : டெல்லி சட்டப்பேரவையில் ஜான் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற விடாமல் காங்கிரஸ், பாஜ கட்சிகள் எதிர்த்து வாக்களித்ததால், முதவர் கேஜ்ரிவால் ராஜினாமா. இதனால் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 49 நாளில் முடிவுக்கு வந்தது.

பிப்ரவரி 15 : திருச்சியில் திமுக 10 வது மாநில மாநாடு தொடங்கியது.

பிப்ரவரி 17 : இடைகால, மத்திய பட்ஜெட் தாக்கல் வாகனங்கள், உள்நாட்டு செல்போன்கள், டிவி உட்பட வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்புகள் ஆகியவற்றுக்கு வரிச்சலுகை அறிவிப்பு, அரிசி மற்றும் ரத்த வங்கிக்கு சேவை வரி ரத்து.

பிப்ரவரி 18 : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்து கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆயுள் தண்டனையாக குறைத்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

மக்களவையில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றம்.

பிப்ரவரி 24 : கூட்டணி கட்சிகளுடன் உடன்பாடு முடிவாகாத நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளுக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

பிப்ரவரி 25 : நைஜீரியாவின் புனியடி நகரில் தீவிரவாதிகள் நடந்திய தாக்குதலில் விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் 43 பேர் கொலை.

பிப்ரவரி 27 : ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி உள்பட நான்கு பேரை விடுவிக்கும் தமிழக அரசின் முடிவுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்தது.

காஷ்மீரின் சபாபோராவில் ராஷ்டிரிய ரைபிள்ஸ் ராணுவ படை பிரிவின் முகாமில், தூங்கிக் கொண்டிருந்த சக வீரர்கள் 5 பேரை சுட்டுக் கொன்று விட்டு ராணுவ வீரர் ரன்பீர் சிங் தற்கொலை.

நாட்டின் முதல் அஞ்சலக ஏடிஎம் சேவை சென்னையில் தொடங்கியது.

பிப்ரவரி 28 : சஹாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் லக்னோவில் கைது.

 

****

 

மார்ச் 1 : தெலுங்கானா மசோதாவிற்கு ஜனாதிபதி பிரணாப் ஒப்புதல்.

உத்திரப் பிரதேச மாநிலம் மஹோனா ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலி.

மார்ச் 2 : கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள உணவகத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 5 இந்தியர்கள் உட்பட 11 பேர் பலி.

இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் நீதிபதி உட்பட 11 பேர் பலி

மார்ச் 5 : ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடி வந்த டெல்லியைச் சேர்ந்த லட்சுமிக்கு சர்வதேச வீரப்பெண் விருதை, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் வழங்கினார்.

மார்ச் 8: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகரத்துக்கு சென்ற எம்.எச்., 370 விமானம் நடுக்கடலில் சென்ற போது மாயமானது. இன்றுவரை இதைக்கண்டுபிடிக்க முடியவில்லை.

மார்ச் 10 :
ஐந்து ஆண்டுகள் தண்டனைக்கு உரிய சட்டத்தில் வழக்கு பதிவானாலே தேர்தலில் போட்டியில் தடை செய்யுமாறு சட்டக் கமிஷன் பரிந்துரைத்தது.

மார்ச் 11 : கேரளா மாநில கவர்னராக ஷீலா தீட்சித் பதவியேற்பு.

மார்ச் 12 : முதல்வர் அலுவலக உத்தரவை மீறி சூடான் சென்ற பெண் எஸ்.பி.சத்தியப்பிரியா சஸ்பென்ட்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய மாநில முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டி "ஜெய் சமைக்யா ஆந்திரா" என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

மார்ச் 13 : முன்னாள் இந்திய துணைத் தூதர் தேவயாணி கோப்ரகடே மீதான விசா மோசடி வழக்கி அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மார்ச் 17 : நெய்வேலி என்.எல்.சி சுரங்க நுழைவு வாயிலில் ஒப்பந்த தொழிலாளி ஒருவரை பாதுகாப்பு படை வீரர் சுட்டுக் கொன்றதால் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பு வீரர்களுக்கு இடையே கலவரம் மூண்டது. அதில் 35 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய பல கோடி ரூபாய் மதிப்புள்ள முருகன் மற்றும் விநாயகரின் ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மார்ச் 18 : பெருந்துறை சிப்காட்டில் உள்ள சாய தொழிற்சாலையின் கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷவாயு தாக்கியதில் ஏழு தொழிலாளர்கள் பலி.

மார்ச் 19 : திருப்பதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 400 ஹெக்டர் பரப்பளவில் உள்ள செம்மரங்கள், மூலிகைகள், வனவிலங்குகள் தீயில் கருகி சேதமானது.

மார்ச் 20 : பழம்பெரும் எழுத்தாளர் குஷ்வந்த்சிங் மரணம்.

மார்ச் 22 : தமிழகம் முழுவது மீண்டும் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு அமலாகியது.

மார்ச் 24 : கெய்ரோவில் வன்முறையில் ஈடுபட்டு நூற்றுக்கணக்கானோர் பலியாக காரணமாக இருந்த எகிப்தின் முன்னால் அதிபர் முகமது மோர்சி ஆதரவாளர்கள் 529 பேருக்கு மரண தண்டனை விதித்து, அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மார்ச் 27 : இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரிய, அமெரிக்காவின் தீர்மானம் ஐ.நா சபையில் நிறைவேறியது. இதற்காக நடந்த ஓட்டெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது.

மார்ச் 31 : காவிஸ்தான் விடுதலை இயக்க தீவிரவாதி தேவிந்தர்பால் சிங் புல்லரின் தூக்குத் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க முடியாது என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

நடிகர் கமல்ஹாசன், பாடலாசிரியர் வைரமுத்து, கடம் வித்வான் விக்கு விநாயகம் ஆகியோருக்கு, பத்ம பூஷன் விருதுகளும்,நடிகை வித்யா பாலன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் சேகர் பாசுக்கு பத்மஸ்ரீ விருதுகளும் தவிர 66 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.

 

*****

 

ஏப்ரல் 2 : சிலி நாட்டின் கடற்கரை பகுதியில் 8.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து 2 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலைகள் எழுந்து கடற்கரைப் பகுதிகளை தாக்கியது.

ஏப்ரல் 4 : செயற்கைக் கோளுடன் பிஎஸ்எல்வி சி 24 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஐஆர்என்எஸ்எஸ் 1 பி செயற்கைக் கோள் புவி சுற்றுவட்ட மாற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.

கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சூரியநெல்லி சிறுமி பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளி தர்மராஜனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மும்பை சக்தி மில் வளாகத்தில் பெண் புகைப்பட பத்திரிக்கையாளர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை விதித்து முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

ஏப்ரல் 7 : தமிழக மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த நீலகிரி தொகுதி பாஜ வேட்பாளர் குருமூர்த்தி மற்றும் சிதம்பரம் பா.ம.க வேட்பாளர் மணிரத்னம் ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஏப்ரல் 9 :
குஜராத் மாநிலம் வதோதரா மக்களவைத் தொகுதியில், பாஜ பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். தனது மனைவி பெயர் ஜசோதா பெண் என்றும், ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்டார் என்றும் வேட்பு மனுவில் தெரிவித்தார்.

இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்கு வகித்த ஐ.என்.எஸ் விக்ராந்த் போர்க்கப்பல் ரூ.60 கோடிக்கு ஏலம் போனது.

ஏப்ரல் 14 : சங்கரன்கோவில் அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு ரோபோ உதவியுடன் உயிருடன் மீட்பு.

ஏப்ரல் 15 : திருநங்கைகள் அனைவரையும் மூன்றாம் பாலினமாக பட்டியலில் சேர்த்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ட்ரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் உச்ச நீதிமன்றம் உத்தவிட்டது.

ஏப்ரல் 16 : கர்நாடக மாநிலம், மேடிகுர்கி கிராமத்தில் தனியார் ஏசி பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 6 பயணிகள் உடல் கருகி பலி.

தென்கொரியா அருகே பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்ற பயணிகள் கப்பல் கவிழ்ந்து மூழ்கி விபத்துக்குள்ளானதில் முந்நூறு பேர் பலியாகினர்.

ஏப்ரல் 18 : உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் வீசிய பயங்கர புழுதிப் புயலில் சிக்கி 27 பேர் பலி.

ஏப்ரல் 22 : தமிழகத்தில் முதல் முறையாக வாக்களர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கவும், வன்முறை நடைபெறாமல் இருக்கவும் 144 தடை உத்தரவு போடப்பட்டது.

ஏப்ரல் 24 : திருவனந்தபபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் வடக்கு வாசல் முன் தானியங்கி தடுப்பு வெளி அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் போது சுரக்கப் பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

ஏப்ரல் 26 : காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் சென்னையைச் சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வீரமரணம்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் புதிய நிர்வாகக்குழு தலைவராக நீதிபதி இந்திரா பொறுப்பேற்றார்.

ஏப்ரல் 27 : உச்ச நீதிமன்றத்தின் 41 வது தலைமை நீதிபதியாக ஆர்.எம்.லோதா பதவியேற்பு.

வாடிகனில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் மறைந்த போப் ஆண்டவர்களான 23ம் ஜான் மற்றும் 2ம் ஜான்பால் ஆகியோருக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

எதிரி நாட்டு போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை நடுவானில் தாக்கி அழிக்கும் நவீன ரக இந்திய ஏவுகணை ஓடிசாவில் வீலர் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

மே 1 : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பெங்களூர் - கவுகாத்தி ரயிலில் 2 குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் ஆந்திராவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரான இளம்பெண் சுவாதி பலியானார்.மேலும் 16 பயணிகள் பலத்த காயமடைந்தனர்.

மே 4 : மகாராஷ்டிராவில் கொங்கன் ரயில் பாதையில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாயினர். 120 பேர் காயமடைந்தனர்.

நடுவானில் பறக்கும்போதே எதிரி நாட்டு விமானங்களை தகர்க்கும் "ஆஸ்டரா" என்ற அதிநவீன ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.

மே 5 : சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் திடீரென ஏற்பட்ட மின்தடையாலும், ஜெனரேட்டர் இயங்காததாலும் செயற்கை சுவாச கருவிகள் வேலை செய்யவில்லை. இதனால் இரண்டு நோயாளிகள் பலியாயினர்.

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளில் 248 வழக்குகளை உடனடியாக தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.

மே 6 : ஊழல் வழக்குகளில் சிக்கும் அரசு உயர் அதிகாரிகளை சிபிஐ விசாரிக்க, அரசிடம் முன் அனுமதிபெற தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.

மே 7 : முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டத்தை 136 அடிக்கு உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பளித்தது.

ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

மே 8 : மாநில அரசின் அனுமதி உத்தரவு இல்லாமல் சிபிஐ கூடுதல் இயக்குனராக பதவி ஏற்ற டி.ஜி.பி அர்ச்சனாவை தமிழக அரசு சஸ்பென்ட் செய்தது.

மே 9 : ஆந்திர முன்னாள் முதல்வர் ஜனார்த்தன் ரெட்டி மரணம்.

மே 13 : துருக்கியில் சோமா என்ற இடத்திலுள்ள நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 250 தொழிலாளர்கள் பலி.

மே 15 :
தனது மனைவி இல்லை என்று பல ஆண்டுகளாக ஏமாற்றி வந்த காங்கிரஸ் மூத்த தலைவரான என்.டி.திவாரி 67 வயது பெண்ணுடன் முறைப்படி திருமணம்.

மே 16 :
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் அறிவிப்பு. 337 இடங்களில் வெற்றி பெற்று அறுதி பெரும் பான்மையுடன் பாரதிய ஜனதா ஆட்சியை பிடித்தது. இக்கட்சி. தனித்தே 283 இடங்களை பிடித்தது. தமிழகத்தில் நடந்த 5 முனைப்போட்டியில் அதிமுக 37 இடங்களை பிடித்தது.பாஜ ஒரு இடத்தைப் பிடித்தது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் ராதாகிருஷ்ணன் வெற்றி. ஆலந்தூர் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் வெங்கட் ராமன் வெற்றி.

ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ், சீமந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சியி பிடித்தன.

ஓடிசாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூஜனதா தளம் 119 இடங்களில் வெற்றி பெற்று நான்காவது முறையாக ஆட்சியை பிடித்தது.

மே 20 : பீகார் முதல்வராக ராம் மண்ஜி பதவியேற்பு.

மே 21 : வடமாநிலங்களில் 6 ரிக்டர் அளவில் திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டது. சென்னையிலும் பல பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.

கம்யூனிஸ்ட் தலைவர் உமாநாத் மரணம்.

ஒடிசா மாநிலத்தின் முதல்வராக நவீன் பட்நாயக் பதவியேற்பு.

பாஜ மூத்த தலைவர் நிதின் கட்கரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் தொகை செலுத்த மறுத்ததால் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு 2 நாள் சிறை.

மே 22 :தாய்லாந்தில் அரசுக்கு எதிராக கடந்த ஏழு மாதங்களாக போராட்டம் நடந்து வந்ததால்,அங்கு இயல்பு நிலையை கொண்டு வர ராணுவ ஆட்சி அமலானது.

குஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபேன் படேல் பதவியேற்பு.

மே 25 :நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவுக்காக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை ஒட்டி அந்நாட்டு சிறையில் இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை. அதேபோல் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் வருகையை ஒட்டி, அங்குள்ள சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் 151 பேரும் விடுதலை.

70 ஆண்டு கால அம்பாசிடர் கார் தொழிற்சாலை மூடப்பட்டது.

ஆந்திராவின் பழங்குடி இனத்தைச் சேர்ந்த 13 வயதான பூர்ணா, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய சிறுமி என்ற சாதனையை படைத்தார்.

மே 26 : இந்திய பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு. அவருடன் 23 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 22 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றனர். இந்த விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஐ.பிக்கள் பங்கேற்றனர்.

 

*****

 

ஜூன் 1 : மணிப்பூர் மாநிலத்தில் தீவிரவாதிகளுன் தாக்குதலில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மோகன்குமாரின் உடல் ராணுவ மரியாதையுடன் கோவையில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜூன் 2 : நாட்டின் 29வது மாநிலமாக தெலுங்கானா உதயமானது. அம்மாநிலத்தின் முதல்வராக கே.சந்திரசேகரராவ் பதவியேற்பு.

ஜூன் 3 : டெல்லியில் நடந்த சாலை விபத்தில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கோபிநாத் முண்டே பலி

ஜூன் 5 : வேலூரில் கனமழையின் போது கால்வாய் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஜார்க்கண்ட் மாநில சிறுமி பிரியங்காவின் சடலம் 4 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு மீட்பு.

ஜூன் 6 : பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில், சீக்கியர்கள் இரு பிரிவினர் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் வாளால் தாக்கிகொண்டதில் பொற்கோவில் வளாகம் போர்க்களமானது.

மக்களவை சபாநாயகராக பாஜ மூத்த எம்பி சுமித்ரா மகாஜன் பதவியேற்றார். இதன் மூலம், மக்களவையில் இரண்டாவது பெண் சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

ஜூன் 7 : கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்திய அணுமின் நிலையங்களில் முதல் முறையாக உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டது.

ஜூன் 8 :
உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் பாஜ தலைவர் விஜய் பண்டிட்டை ஒரு கும்பல் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொலை செய்தது.

இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்ற ஐத்ராபாத் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 24 பேர் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு பலியாகினர்.

ஜூன் 9 : அதிவேக புல்லட் ரயில்களை இயக்கும் வகையில், வைர நாற்கர ரயில் திட்டம் செயல் படுத்தப்படும் என்று நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையில் தெரிவத்தார்.

காஜியாபாத் எம்பிஏ மாணவர் ரன்பீர் சிங் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட உத்தரகாண்ட் மாநில போலீசார் 17 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம் தீர்ப்பு.

ஜூன் 10 : கேரளாவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மலரில் தீவிரவாதிகள், சர்வாதிகாரிகள் படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் பிரசுரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது கல்லூரி முதல்வர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஜூன் 12 :
அகில இந்திய அளவில் ஐஏ.எஸ், ஐ.பி.எஸ் பதவிகளுக்கு தமிழகத்தில் இருந்து 109 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

ஜூன் 13 :
சுற்றுலா பயணப்படியை பெறுவதற்காக போலியாக பயணச்சீட்டு அளித்து மோசடியில் ஈடுபட்ட ஆறு எம்.பிக்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

ஜூன் 14 : குண்டர் தடுப்பு சட்டத்தில் 212 பேரை சிறையில் அடைத்ததை ரத்து செய்து உயர் நீதிமன்ற சிறப்பு பென்ச் தீர்ப்பு.

கோவாவில் நடைபெற்ற விழாவில், ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.

ஜூன் 15 :
ஈராக்கின் சலாஹூதீன் மாகாணத்தில் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா பிரிவினரை சன்னி பிரிவு தீவிரவாதிகள் கும்பலாக சுட்டுக்கொன்றனர்.

பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கியிருந்த, கராச்சி விமான நிலைய தாக்குதலில் தொடர்புடைய 80 தீவிரவாதிகள் அநாட்டு ராணுவத்தால் குண்டு வீசி அழிக்கப்பட்டனர்.

ஜூன் 18 : உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி முல்லைப் பெரியாறு அணையை கண்காணிக்க 3 பேர் கொண்ட பராமரிப்பு குழுவை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

விமானங்களை தாக்கி அளிக்க கூடிய ஆகாஸ் ஏவுகணையை மிகவும் குறைந்த உயரத்தில் பாய்ந்து செல்வதற்கான சோதனை, ஒடிசா மாநிலத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

ஜூன் 19 : திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சுரேஸ்குமார் கொலை.

ஜூன் 25 :  ரயில் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை பட்ஜெட்டுக்கு முன்பாகவே மத்திய அரசு உயர்த்தியது. அனைத்து வகுப்புகளுக்குமான பயணிகள் கட்டணம் 14.2 சதவிகிதமும் சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

ஜூன் 27 : ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுனத்திற்கு சொந்தமான எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியதில் 16 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

ஜூன் 28 : சென்னை மவுலிவாக்கத்தில், கட்டப்பட்டு வந்த 11 அடுக்கு மாடிக்கட்டடம் இடிந்து விழுந்ததில் சிக்கி 61 பேர் பலி. 27 பேர் காயங்களுடன் மீட்பு. ஜூலை 5ம் தேதி மீட்பு பணி நிறைவடைந்தது.

 

******

 

ஜூலை 1 : கீழ் நீதிமன்றங்களில் இனி தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க மதுரை ஐகோர்ட் உத்தரவு.

ஜூலை 4 : ஈராக்கில் தீவிரவாதிகள் பிடியில் சிக்கி தவித்த தூத்துக்குடி செவிலியர் மோனிஷா உட்பட இந்தியாவை சேர்ந்த 46 நர்ஸ்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஜூலை 8 : மோடி அரசின் முதல் ரயிவே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். இதில் நாட்டிலேயே முதல் முறையாக புல்லட் ரயிலை அறிமுகம் செய்வதற்கான அறிவிப்பு இடம் பெற்றது.

ஜூலை 9 : பாஜ கட்சியின் தேசிய தலைவராக அமித்ஷா ஒருமனதாக நியமனம்.

ஜூலை 10 : பிரதமர் மோடி தலைமையிலான அரசின் முதல் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2.5 லட்சமாகவும், மூத்த குடிமக்களுக்கு ரூ.3 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. வரி விதிப்பில் செய்யப்பட்ட மாற்றத்தின் காரணமாக டிவி, கம்ப்யூட்டர், விலை குறைந்தது, சிகரெட், பான்மசாலா, குட்கா விலை அதிகரிக்கப்பட்டது.

ஜூலை 15 : மத்திய அரசின் நிதியுதவியுடன் சென்னை மற்றும் இதர நகரங்களில் ரூ.825 கோடி செலவில் புதிதாக 10,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் புதிய வளர்ச்சி வங்கி சீனாவின் ஷாங்காய் நகரில் ரூ.6 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டது. முதல் 6 ஆண்டுகளுக்கு, இந்த வங்கியை இந்தியா நிர்வகிக்கும் என்று பிரேசில் நாட்டின் போர்டலிசா நகரில் நடந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜூலை 17 : ரஷ்யா - உக்ரைன் எல்லையில் நடுவானில் பறந்து கொண்டிருந்த மலேசிய பயணிகள் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் விமானத்தில் பயணம் செய்த 295 பேரும் உடல் சிதறி பலி.

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்திய பின், மேற்கு வங்க ஆளுநர் எம்கே நாராயணன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலை 19 :
இந்திய விமானப்படைக்கு 56 நவீன ரக போக்குவரத்து விமானங்களை தயாரித்து தர தனியாரிடம் முதல் முறையாக மத்திய அரசு ஒப்படைத்தது.

ஜூலை 24 :
டெல்லியில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இன்சுரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஜூலை 25 : இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்புவருக்கோ ஆண்டு தோறும் சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இளங்கோவடிகள் விருது வழங்கப்படும் என சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு.

ஜூலை 26 : அரசு நிர்வாகம் பற்றி பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான புதிய இணையதளத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கினார்.

காத்மாண்டுவில் இந்தியா-நேபாளம் இடையே 23 ஆண்டுகளுக்கு பிறகு இரு தரப்பு வெளியுறவுத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்ட முதல் கூட்டம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடைபெற்றது.

சென்னை ஐகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் கிஷன் கவுல் பதவியேற்றார்.

ஜூலை 30 :
கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 குழந்தைள் கருகி பலியான வழக்கில் 10 ஆண்டுகளுக்குப் பின் தீர்ப்பளிக்கப்பட்டது. பள்ளி நிறுவனர் பழனிசாமிக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் சரஸ்வதி உட்பட 8 பேருக்கு 5 ஆண்டு சிறையும், கட்டிட பொறியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ஆப்பர்ஜூனிட்டி என்ற ஆய்வுக்கலம், கடந்த 2004 ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி செவ்வாயில் தரையிறங்கி ஆய்வை தொடங்கியது. அது தனது ஆயுள் காலமான 10 ஆண்டு 95 நாட்களை கடந்து இன்னும் இயங்கி கொண்டிருக்கிறது. இது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் இதுவரை 40 கி,மீ தூரம் பயணம் செய்து, புதிய சாதனை படைத்துள்ளது.

 

****

 

ஆகஸ்ட் 1 : மீனவர்கள் பிரச்சனை பற்றி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதுவது குறித்து இழிவாக விமர்சித்த விவகாரத்தில், இலங்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, தனது ராணுவ இணையதளத்தில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கட்டுரையை நீக்கியது மட்டுமின்றி, இந்தியாவிடம் இலங்கை அதிபர் ராஜபக்சே பகிரங்க மன்னிப்பு கேட்டார்.

ஆகஸ்ட் 3 :
சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனன் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 175 பேர் பலி.

நேபாளத்தில் உள்கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு ரூ6,000 கோடி சலுகை ஒதுக்கீட்டு கடன் வசதியை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு.

ஆகஸ்ட் 6 : வேட்டி மற்றும் இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருபவர்களை தடை செய்யும் கிளப், சங்கங்கள், மனமகிழ் மன்றங்களின் அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் அவற்றின் உரிமையாளர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்திய ராணுவத்தில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஆகஸ்ட் 7 : ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் வேகமாக பரவியது.

ஆகஸ்ட் 8: மக்களவை வரலாற்றில் முதல்முறையாக தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு தமிழிலேயே பதில் அளித்தார் மத்திய வர்த்தக இணையமைச்சர் நிர்மலா சீதாராமன்.

ஆகஸ்ட் 11: தமிழக அரசிடம் அனுமதி பெறாமல் ஆழ்துளை கிணறு மற்றும் ஆழ்குழாய் கிணறு தோண்டுபவர்களுக்கு அதிகபட்சமாக ஏழு வருடம் சிற தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் ஆனது.

தமிழகம் முழுவதும் ரூ45 கோடி செலவில் புதிதாக 15 தாலுகாக்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு.

ஆகஸ்ட் 12 :
ஜம்மு காஷ்மீரில் உள்ள லே பகுதியில் நீர் மின் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

ஆகஸ்ட் 13 : தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்பு.

கனடா நாட்டின் இந்திய வம்சாவளியை சேர்ந்த மஞ்சுள் பார்க்கவா என்ற பேராசிரியருக்கு கணித கண்டு பிடிப்புக்காக நோபல் பரிசு கிடைத்தது.


ஆகஸ்ட் 16 : தமிழக பாஜ தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்.

மும்பையில் நாட்டின் மிகப்பெரிய போர் கப்பலான ஐஎன்.எஸ் கொல்கத்தா கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஆகஸ்ட் 19 : பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு,

ஆகஸ்ட் 25 : கடந்த 1993ம் ஆண்டு முதல் 2010 ம் ஆண்டு வரை நடந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என உச்சநீதி மன்றம் உத்தரவு.

மத்திய பிரதேசத்தில் உள்ள மலைக்கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பக்தர்கள் பலி.

ஆகஸ்ட் 26 : உலகத்தின் எந்த பகுதியையும் ஒரு மணி நேரத்துக்குள் தாக்கும் வகையில் ரகசிய சூப்பர்சோனிக் ஆயுதம் ஒன்றி அமெரிக்கா உருவாக்கி வருகிறது. ராக்கெட் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு இந்த குண்டு போடப்படும். இது மணிக்கு 3,500 மைல் வேகத்தில் செல்லும். இதை அமெரிக்கா அலாஸ்காவின் கோடியாக் தீவுப் பகுதியில் இருந்து ஏவி சோதனை செய்தது.

ஆகஸ்ட் 30 : ஜப்பானின் கியோட்டோ நகரம் - வாரணாசி நகரம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஜப்பானுக்கான இந்தியத் தூதர் தீபா வாத்வா, கியோட்டோ மேயர் டாய்சகா கடோகாவா கையெழுத்திட்டனர்.

 

*****

 

செப்டம்பர் 1 : அகமதாபாத் - மும்பை புல்லட் ரயில், கங்கையை தூய்மைபடுத்துதல், ஸ்மார்ட் சிட்டி, உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்டவற்றில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.2.13 லட்சம் கோடியை முதலீடு செய்வதாக ஜப்பான் அறிவித்தது.

செப்டம்பர் 6 : ஆவின் நிறுவனத்துக்கு பால் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்ததாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மாதவரம் மூர்த்தி பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

செப்டம்பர் 7 :
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கில் 150 பேர் பலி.

சர்வதேச அறிவியல் கவுன்சில் தலைவராக தென் ஆப்ரிக்காவின் பிரபல கணிதவியலாளரும் இந்திய வம்சாவளியுமான் தயா ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

செப்டம்பர் 8 : பலாத்கார வழக்கி சிக்கிய நித்தியானத்தாவிட்கு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டது.

செப்டம்பர் 13 :
திருமணம் செய்து கொள்வதற்கு முன் ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ சோதனை கட்டாயம் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு.

செப்டம்பர் 17 : இலங்கையில் கொழும்பு அருகேயுள்ள செயற்கை தீவில் ரூ.8500 கோடி செலவில் துறைமுக நகர் அமைக்கும் திட்டத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் தொடங்கி வைத்தார்.

செப்டம்பர் 18 :
இந்தியா -சீனா இடையே பொருளாதாரா உறவுகளை மேம்படுத்தும் வகையில் ரயில்வே, விண்வெளி உட்பட பல துறைகளில் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 1 லட்சத்து 21 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் வகையில் 12 ஒப்பந்தங்கள் சீனா கையெழுத்திட்டது.

செப்டம்பர் 19 : சென்னையில் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் கல்லீரல் பாதிப்பால் மரணம்

பிரிட்டனுடன் தொடர்வது அல்லது தனி நாடு அந்தஸ்து அளிப்பது தொடர்பாக ஸ்காட்லாந்து மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து வாக்கெடுப்பில் 55.3 சதவீதம் பேர் தொடர்ந்து பிரிட்டனுடன் இருப்பதற்கு ஆதரவு தெரிவித்தனர். தனி நாடாக்க வேண்டும் என்று 44.7 சதவீத மக்கள் வாக்களித்தனர். முடிவில் பிரிட்டனில் தொடருகிறது ஸ்காட்லாந்து

செப்டம்பர் 22 : ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயபுரம் ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

சமையல் எரிவாயு மானியம், முதியோர்,விதவை ஆதரவற்றோர் உதவித் தொகைகள், கல்வி உதவித்தொகை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் பொது விநியோக திட்டங்களின் பலன்கள் வங்கி கணக்கு மூலம் ஆதார் அட்டை விவரங்களுடன் இணைக்கப்பட்டு வழங்க மத்திய அரசு முடிவு.

நியுசிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளிகளான கன்வல்ஜீத் சிங், மகேஷ் பிந்த்ரா மற்றும் பார்ம்ஜீத் பார்மர் ஆகியோர் வெற்றி பெற்று எம்பியாக உள்ளனர்.

செப்டம்பர் 23 : டெல்லி உயிரியல் பூங்காவில் புலி ஒருவரை அடித்து கொன்ற சம்பவம் நாடுமுழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

செப்டம்பர் 24 : மங்கல்யான் செயற்கைக்கோளை வெற்றிகரமாக செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் இணைத்ததன் மூலம் உலக விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில், முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு செயற்கைக்கோள் அனுப்பி மகத்தான சாதனையை இந்தியா படைத்தது.

கடந்த 1993ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக ஒதுக்கீடு செய்த 214 நிலக்கரி சுரங்கங்களின் உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

செப்டம்பர் 25 : உள்நாடு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தொழில் தொடங்கும் விதமாக மேக் இன் இண்டியா என்ற இயக்கத்தின் லோகோவை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்தார்.

செப்டம்பர் 27 : வருமானத்திற்கு அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து குவித்த வழக்கில் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ நூறு கோடி ரூபாய் அபராதமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் தாலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் தலா 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

செப்டம்பர் 29 : நியுயார்க்கில்அமெரிக்காவைச் சேர்ந்த உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவில் தொழில் தொடங்க, அதிக அளவில் முதலீடு செய்ய முன்வரும்படி அழைப்பு விடுத்தார்.

சென்னையில் தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்பு. அவருடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றனர்.

ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக உலக வங்கியின் முன்னாள் பொருளாதார நிபுணர் அஷ்ரப் கனி பதவியேற்பு

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி - அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்து பேசினார்.

 

*****


அக்டோபர் 2 : மகாத்மா காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு இந்தியாவை தூய்மைப்படுத்தும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அக்டோபர் 7 : இந்திய வம்சாவளிகளுக்கு ஆயுட்கால விசாவும், குறிப்பிட்ட சூழ்நிலையைத் தவிர இந்தியாவுக்கு வரும் அமெரிக்க பயணிகளுக்கு பத்து ஆண்டுகால விசா வழங்கவும் மத்திய அரசு உத்தரவு.

அக்டோபர் 8: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் விஜய் பிரதாப் சுட்டதில் உடன் பணியாற்றிய 3 பேர் பலி.

அக்டோபர் 10 : ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அறியான முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு வழங்கபட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.

குழந்தைகள் நல உரிமைகளுக்காக போராடிய இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, தாலிபான்களின் துப்பாக்கி குண்டில் உயிர் தப்பி பெண் கல்விக்காக போராடி வரும் பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசூப்சாய் ஆகியோர் நோபல் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அக்டோபர் 11 : பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களைத் தொடர்ந்து கிராமங்களை மேம்படுத்தும் புதிய மாதிரி கிராம மேம்பாட்டு திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

அக்டோபர் 15 : ஐதராபாத்தை சேர்ந்த சாதிக் என்ற பத்து வயது சிறுவன் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டு நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு போலீஸ் கமிஷனராக வேண்டும் என்பது ஆசை. அவனது ஆசையை ஐதராபாத் போலீசார் நிறைவேற்றி ஒரு நாள் கமிஷனர் ஆக்கினர்.

அக்டோபர் 16: இந்தியாவுக்கு தனி ஜி.பி.எஸ்., வசதி ஏற்படுத்த திட்டமிடப்பட்ட 7 செயற்கைக்கோள்களில், 3வது செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்., 1சி வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.

அக்டோபர் 17: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.

அக்டோபர் 23: இந்திய -- பாக்., எல்லையில் உள்ள சியாச்சின் மலைப்பகுதியில் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் மோடி.

அக்டோபர் 27: பிரேசிலின் புதிய அதிபராக டில்மா ரூசெல்ப் மீண்டும் தேர்வு.

அக்டோபர் 29: வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 627 பேரின் பட்டியலை மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்தது.

அக்டோபர் 30: ராமேஸ்வரம் அருகே தங்கச்சி மடத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை ஐகோர்ட் மரண தண்டனை விதித்தது. 2011ல் போதைப்பொருள் வழக்கில் கைதானவர்கள். மத்திய, மாநில அரசுகளின் எதிர்ப்பை தொடர்ந்து இவர்கள் விடுதலை.

 

*****

 

நவம்பர் 2: தமிழக காங்., கட்சியின் புதிய தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்பு.

நவம்பர் 3: அமெரிக்காவின் இரட்டை கோபுரம் 2011 செப்., 11ல் அல்குவைதா பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட இடத்தில் மீண்டும் வணிக கோபுரம் திறக்கப்பட்டது.

கிரானைடு முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் குழுவுக்கு தமிழக அரசு அனுமதி.

நவம்பர்  5: டில்லி சட்டசபையை கலைத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு. ஜனாதிபதி ஆட்சி அமல்.

நவம்பர் 9: மத்திய அமைச்சரவையில் 21 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்பு. மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 65 ஆனது.

நவம்பர் 11 : சத்திஸ்கரில் மாநில அரசு சார்பில் பிலாஸ்பூரில் நடத்தப்பட்ட சிறப்பு கருத்தடை முகாமில் கலந்து கொண்டு கருத்தடை சிகிச்சை செய்து கொண்ட 8 பெண்கள் பலியானார்கள்.

நவம்பர் 14 : தர்மபுரி அரசு மருத்துவமனையில் அடுத்தடுத்து பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நவம்பர் 28: காங்., கட்சியில் இருந்து விலகிய வாசன், 'தமிழ் மாநில காங்கிரஸ்' கட்சியை மீண்டும் தொடங்கினார்.

 

*****

 

டிசம்பர் 3: சி.பி.ஐ., புதிய இயக்குநராக அனில் சின்ஹா நியமனம்.

டிசம்பர் 10: அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கு இணைந்து வழங்கப்பட்டது.



டிசம்பர் 17:
பாகிஸ்தானின் பெஷாவர் ராணுவப்பள்ளியில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 மாணவர்கள் பலி.

டிசம்பர் 18: அமெரிக்கா -- கியூபா இடையே 50 ஆண்டுகளாக இருந்த பகைமை முடிவுக்கு வந்தது.

எடைமிகுந்த செயற்கைக்கோள்களை தாங்கி செல்லும் வகையிலான, ஜி.எஸ்.எல்.வி., மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

டிசம்பர் 19: 2014 தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு பூமணி தேர்வு. இவர் எழுதிய அஞ்ஞாடி நாவலுக்கு பரிசு.

டிசம்பர் 21: காஷ்மீர் சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை. பி.டி.பி., 28 , பா.ஜ., 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்., 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

டிசம்பர் 23: அசாமில் போடா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70 பொதுமக்கள் பலி.

டிசம்பர் 24: சுதந்திர போராட்ட வீரர் மதன் மோகன் மாளவியா மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவருக்கும் பாரத ரத்னா விருது அறிவிப்பு.

டிசம்பர் 28: ஜார்க்கண்ட் தேர்தலில் பா.ஜ., வெற்றி. முதல்வராக ரகுபர் தாஸ் பதவியேற்பு.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்து பணியாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது.

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவின் சுபரயா நகரிலிருந்து, அதிகாலை 5:36 மணிக்கு, சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்ற ஏர்ஆசியா விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

டிசம்பர் 30 : தொடர் தோல்வி காரணமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து தோனி ஓய்வு அறிவிப்பு.

 

*****

by Swathi   on 31 Dec 2014  0 Comments
Tags: முக்கிய நிகழ்வுகள்   வரலாற்று சுவடுகள்   2014 Mukkiya Seithigal   2014 Mukkiya Nigalvigal   2014 Current Affairs   2014 Important Events     
 தொடர்புடையவை-Related Articles
2014-ல் முக்கிய நிகழ்வுகள் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !! 2014-ல் முக்கிய நிகழ்வுகள் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.