LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !!

2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

இன்று அறிவிக்கப்பட்ட ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

பயணிகள் கட்டணத்திலும் சரக்கு கட்டணத்திலும் மாற்றம் இல்லை.  

ரயில்வே துறை தனியார் மயமாக்கப்பட மாட்டாது

புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு, ஆய்வுக்கு பிறகு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில், தனியாக அறிவிக்கப்படும்.

ரயில் மற்றும் ரயில் நிலையங்களின் தூய்மைக்கென தனி துறை உருவாக்கப்படும்.

குறைந்த விலையில் சுத்தமான தண்ணீர் வழங்கப்படும்.

650 ரயில் நிலையங்களில் புதிய பசுமை கழிவறைகள்.

17000 கழிவறைகள் நவீனமயமாக்கப்படும்.

பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்த பெண்கள் பயணிக்ககும் பெட்டிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்படும்.

மூத்த குடிமகன்களுக்கு சக்கர நாற்காலிகள் வசதி.

400 ரயில்வே ஸ்டேஷன்களில் வைபை வசதி ஏற்படுத்தப்படும்.

அடுத்த ஆண்டுக்குள் 7000 ஆளில்லா ரயில்வே கிராசிங்களில் ஆட்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

3438 ஆளில்லா லெவல் கிராசிங்குகள் ஒழிப்பு.

விபத்துக்களை தவிர்ப்பதற்காக ஆளில்லா கிராசிங்களில் ஒளி மற்றும் ஒலி மூலம் எச்சரிக்கைகள் அமைக்கப்படும். பாதுகாப்புக்காக இஸ்ரோவுடன் இணைந்து திட்டங்கள் அமைக்கப்படும்.

ரயில் பெட்டிகளில் தீ விபத்து எச்சரிக்கைக் கருவி பொருத்தப்படும்.

24 மணிநேரமும் செயல்படும் குறை தீர் மையங்கள் நிறுவப்படும்.

எஸ்.எம்.எஸ்.  மூலம் குறைகளை பதிவுசெய்யும் வசதி அறிமுகம்.

நாடு முழுமைக்கும் ரயில்வே உதவி எண் 138

மார்ச்-1 முதல் குறைகளை தீர்க்க மொபைல் அப்ளிகேசன் அறிமுகப்படுத்தப்படுகிறது.

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசம் தற்போதுள்ள 60 நாட்களிலிருந்து செய்யும்  120 நாட்களாக நீட்டிப்பு.

5 நிமிடத்தில் ரயில்வே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.

காகிதமில்லாத டிக்கெட் வழங்கப்படும்

எஸ்.எம்.எஸ்., மட்டுமோ டிக்கெட் அத்தாட்சிக்கு போதும்.

உரிய நேரத்திற்கு ரயில்கள் இயக்கப்படும். ரயில்கள் தாமதமாகும் பட்சத்தில் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.

ரயில்களில் மொபைல் போன் சார்ஜ் செய்ய வசதி

கூட்ட நெரிசலை சமாளிக்க கூடுதல் பொது பெட்டிகள் இணைக்கப்படும்.

108 ரயில்களில் இ-கேட்டரிங் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் ரயில்களில் பயணிப்பவர்கள் தங்களுக்கு வேண்டிய விருப்பமாக உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட முடியும்.

ஐ.ஆர்.சி. டி.சி இணையதளத்தில் சென்று ஆர்டர் செய்தால் நிர்ணயிக்கப்பட்ட ரயில் நிலையங்களில் சாப்பாடு தேடி வந்து விடும்.

அதுபோல் நாட்டில் அனைத்து நவீன வசதிகளை கொண்ட  10 சேட்டிலைட் ரயில்வே நிலையங்கள் அமைக்கப்படும்.

ரயில்வே பாதுகாப்பு ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுக்கான பாதுகாப்பு திட்டங்கள் இன்னும் 3 மாதங்களில் தயார் செய்யப்படும்.

கடற்கரை நகரங்களை இணைக்க ரூ.2000 கோடிக்கு திட்டங்கள் அமைக்கப்படும்.

1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சோலார் திட்டங்கள் அமைக்கப்படும்.

ரூ.96,000 கோடி செலவில் 77 புதிய ரயில்வே திட்டங்கள் அமைக்கப்படும்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கும் ரயில் பாதை அமைக்கப்படும்.

ரயில்வே ஊழியர்களின் வீடுகள் புனரமைக்கப்படும்

சாமானியரோடு தொடர்பு கொள்ள எம்.பி. தலைமையில் குழு ஏற்படுத்தப்படும்.

ரயில்வே நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது தவிர்க்க டிஜிட்டல் மேப்பிங் மூலம்  கண்காணிப்பு

வன விலங்கு பாதுகாப்பிற்கு முக்கியத்துவம்

ரயில்களின் ஒலி அளவு குறைப்பு

முதியோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு  கீழ்ப்படுக்கை முன்னுரிமை

தேர்வு செய்யப் பட்ட 4 பல்கலைக் கழகங்களில் ரயில்வே ஆய்வு மையங்கள்.

அனைத்து மாநிலங்களிலும் மெட்ரோ ரயில் சேவை பரிசீலனை.

ரயில் பேருந்துகளுக்கு ஒரே டிக்கெட்.

சரக்கு ரயில்களின் வேகம் அதிகரிப்பு

9 ரயில்களின் வேகம் 160 கி.மீ.ஆக அதிகரிப்பு.

ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பம்.

அதிக பயணிகள், சரக்குகளை கையாள வசதியாக ரயில் திட்டங்களுக்கு ரூ. 96,182 கோடி ஒதுக்கீடு

கடந்த ஆண்டில் 462 கி.மீ தூரம் தான் மின்மயமாக்கப்பட்டது. இந்த ஆண்டு 6,000 கி.மீ மின்மயமாக்கப்படும்.

முக்கிய ரயில் நிலையங்களில் லிப்ட்கள், எஸ்கலேட்டர்கள் அமைக்க ரூ. 120 கோடி

பழங்கள், காய்கறிகளை பாதுகாத்து கொண்டு செல்ல நவீன குளிரூட்டப்பட்ட மையங்கள்.

ரயில்வேயை மேம்படுத்த 4 திட்டங்கள்

1. சிறந்த சேவை,

2. பாதுகாப்பான சேவை

3. ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவது

4. ரயில்வேயின் நிதி நிலைமை மேம்படுத்துவது

அடுத்த 5 ஆண்டுகளில் 8.5 லட்சம் கோடி ரயில்வே துறையில் முதலீடு செய்யப்படும்

ராஜ்தானி சதாப்தி போன்ற விரைவு ரயில்கள்  அதிகம் தேவை.

சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகரிக்க நடவடிக்கை.

ரயில்வே பணியாளர்கள் தேர்வுகள் அனைத்தும் வெளிப்படையாக நடத்தப்படும்.

புல்லட் ரயில் அடுத்த 2 ஆண்டுகளில் அறிமுகம்.

புதிய விளக்கு வசதிகளுடன் பெட்டிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தல்.

ரயில் நிலையங்களை நவீனப் படுத்த தனியாருக்கு அனுமதி.

 

ரயில்வே வேலைக்கு ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வசதி

பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு முன்னுரிமை

ரயில்வே வேலை வாய்ப்பிற்காக 2 இணைய தளங்கள்

by Swathi   on 26 Feb 2015  0 Comments
Tags: ரயில்வே பட்ஜெட்   Railway Budget   2015 Railway Budget   2015 ரயில்வே பட்ஜெட்           
 தொடர்புடையவை-Related Articles
2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !! 2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !!
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் !! ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.