|
||||||||
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - தனுசு லக்னப் பலன்கள் |
||||||||
![]() ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158 மூலம், பூராடம், உத்தராடம், 1ம் பாதம் தெய்வ சிந்தனையும் விடாமுயற்சியும் உடைய உங்கள் தனுசு லக்னத்திற்கு 10ம் இடத்தில் குருவும் லக்னத்தில் சனியும் 3ம் இடத்தில் கேதுவும் 9ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது நற்பலனே ஆகும். தெய்வ அனுகூலமான காலமிது. எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக செயல்பட ஏதுவாகும். புதிய முயற்சிகள் எதிர்பாரதவிதமாக நல்லபடியாக அமையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதே சமயம் 3ம் இடத்தில் கேது சஞ்சாரம் தேவையற்ற வதந்திகளையும் வீண்புரளிகளையும் பேசவைக்கும் அடிக்கடி. பயணங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கும். அதனால் எதிர்பார்த்த நன்மைகள் அமையும். கொடுத்த பணம் தவணைமுறையில் வந்து சேரும். பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு இருந்து வரும். பேச்சில் அதிகக் கவனம் தேவை. இரண்டாம் இடத்துச் சனி லக்னத்தில் சஞ்சரிப்பதால் தேவையில்லாமல் யாருடனும் அதிகம் பேசுதல் கூடாது. வார்த்தைகளை அளந்தே பேசுதல் வேண்டும். கையில் உள்ள பணம் வீட்டில் உள்ள நகைகள் பங்குப்பத்திரங்களில் அதிகக் கவனம் தேவை. புதிய உறவுகளில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாமல் மற்றவர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது. அண்டை அயலாரிடம் தேவையற்ற உறவுகளை வைத்துக் கொள்ளுதல் கூடாது. உடன்பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மையும் அதே சமயம் அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படும். நெருங்கிய உறவினரைப் பிரிய நேரிடும். இடமாற்றம் மனைமாற்றம் ஒரு சிலருக்கு அமையும். தாயாரின் அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைத்து வரும். இடம் வாங்க வண்டிவாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பங்கள் கூடி வரும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைகள் இருந்து கொண்டே இருக்கும். உங்களுடைய உழைப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக இருந்து வரும். விருந்து கேளிக்கைகள் சுற்றுலாக்களில் அதிகக் கவனம் தேவை. குழந்தைகளின் அன்பும், ஆதரவும் இருந்தாலும் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வந்து சேரும். வேலையாட்களால் எதிர்பார்த்த நன்மைகள் கிட்டும். புதிய வேலையாட்கள் அமைவார்கள். தாய் மாமன் இருப்பின் அவரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை. நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். பாஸ்போர்ட் விசா சீக்கிரம் வந்து சேரும். வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். வேலை, உத்யோகம் (JOB) உத்யோகம் என்பது இங்கு அரசு மற்றும் தனியார் துறை இரண்டையுமே குறிப்பிடுவதாகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் வேலை மாற உத்தமம், வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் மனைமாற்றம் ஏற்படும். வேலையில் சுணக்கம் கூடாது. ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இராது. சக ஊழியர்களிடத்தில் கவனமாகப் பேசிப் பழகுதல் வேண்டும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வேலையில் அடிக்கடி விடுப்பு எடுத்தல் கூடாது. வேறு வேலை தேடுவதில் அவசரம் காட்டுதல் கூடாது. தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE) சுயதொழில்கள் ஓரளவு நல்ல லாபம் தருபவையாக அமையும். ஏற்றுமதி இறக்குமதி திருப்திகரமாக இருக்கும். சுய தொழிலில் முதலீடு அதிகரிக்கும். அதற்கேற்ப வருமானமும் வந்து சேரும். கூட்டுத் தொழில்களில் அதிகக் கவனம் தேவை. பங்குதாரர்களிடையே தேவையற்ற மனவருத்தங்களும் வேதனைகளும் இருந்து வரும். உற்பத்தி சார்ந்த துறைகள் ஓரளவு லாபகரமாக அமையும். எனவே உற்பத்திக்குதக்க லாபம் அமைய வாய்ப்புகள் அதிகரிக்கும். ஒட்டல், உணவு, ஆடை, ஆபரணம், அழகுசாதனம், பிளாஸ்டிக் தொழில்கள் ஓரளவு லாபகரமாக இருக்கும். மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் சாதகமாக அமையும். இரும்பு உருக்கு சிமெண்ட் கனிமங்கள் துறை சற்று சுமாரக இருக்கும். நடைபாதை வியாபாரம் லாபகரமாக இருக்கும். ரியல் எஸ்டேட் லாபகரமாக அமையும். செய்தி போக்குவரத்து பத்திரிக்கை சினிமா, தகவல் தொடர்பு, சேவைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். கல்வி, நிதி, நீதி, நிர்வாகம், வங்கி, தணிக்கைத் துறை நல்ல லாபகரமாக இருந்து வரும். சுற்றுலா, மீன்பிடி, கப்பல் துறைகள் எதிர்பார்த்த அளவு லாபம் இராது. பங்குச்சந்தையில் அதிகக் கவனம் தேவை. ரேஸ், லாட்டரி, சூதாட்டம், கிளப் இவைகளில் அதிகக் கவனம் தேவை. அரசியல் அரசியல் ஓரளவு சாதகமாக இருந்து வரும். தொண்டர்களின் ஒத்துழைப்பு இருப்பினும் பிரச்சனைகளும் போராட்டங்களும் இருக்கும். தேவையில்லாமல் வீண் வந்தந்திகளும் சமூகத்தில் சற்று கெட்டப் பெயரையும் உண்டுபண்ணும். எனவே எச்சரிக்கையுடனும் கவனமுடனும் நடந்து கொள்ளல் வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. விவசாயம் விவசாயம் ஓரள்வு சாதகமாக இருந்து வரும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்கும். பயிர்க்கடன்கள் வாங்க வாய்ப்பு அமையும். நிலத்தை ஒத்தி அல்லது குத்தகைக்கு விட வாய்ப்புகள் வந்து சேரும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க வாய்ப்புகள் அமையும். கலை கலைத்துறை சற்று சுமாரகவே இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். பணம் கைக்கு வருவதில் அதிகத் தடைகள் ஏற்படும். அலைச்சல்கள் அதிகரிக்கும். தேவையற்ற விஷயங்களை ஒதுக்கித்தள்ளுதல் வேண்டும். சினிமா, இசை, நடனம், ஓவியம் சுமாராகவும், விளையாட்டுத்துறை லாபகரமாகவும் நல்ல பெயர் புகழ் கிடைக்கவும் வாய்ப்பு அமையும். மாணவர்கள் படிப்பில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும். புதிய பயிற்சிகளை பெற சந்தர்ப்பம் வாய்க்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. கல்விக்கடன் கிடைக்கும். ஒரு சிலர் உயர்கல்வி பயிலுவதற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். எதிர்பார்த்த பள்ளி வளாகங்களில் இடம் கிடைப்பதில் சற்று சிரம்ம் ஏற்படும். பெண்கள் இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் நடக்க சந்தர்ப்பங்கள் அமையும். அடிக்கடி பயணம் செய்ய வாய்ப்புகளும், அதனால் நன்மைகளும் அதே சமயம் அலைச்சல்களும் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்கள் வருகை அதிகரிக்கும். தேவையில்லாமல் வீண் வந்தந்திகள் பரவி வேதனைப்படுத்தும். சதா எதற்காவது கவலைபட்டுக் கொண்டே இருக்க வேண்டியது வரும். உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். தேவையில்லாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுதல் கூடாது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் சற்று சலிப்பும் வெறுப்பும் ஏற்படும். அவசரபப்ட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுடல் கூடாது. கிடைத்த வேலையை திருப்தியாகச் செய்தல் வேண்டும். கணவன் மனைவி ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். சக ஊழியயர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வருத்தங்களும் இருந்து கொண்டேயிருக்கும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். காதல் விஷயங்கள் சற்று சுமாராக இருந்து வரும். ஒரு சிலருக்கு வேலையின் நிமித்தமாக வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடல் ஆரோக்கியம் தலை, முகம் இவற்றில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் நலம். சளித்தொல்லை வராமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். சர்க்கரை நோய் இருப்பின் அதனை கட்டுக்குள் வைத்துக் கொள்ளல் வேண்டும். நேரத்திற்கு உணவு அருந்துதல் வேண்டும். பரிகாரம் வெள்ளிக்கிழமை தோறும் “மஹாலெக்ஷ்மியை” வணங்கிவர நன்மையேற்படும். “திருப்பட்டூர்” சென்று பிரம்ம தேவனை வணங்கி வந்தால் நற்பலன்கள் அதிகரிக்கும். |
||||||||
by Swathi on 08 Jul 2016 0 Comments | ||||||||
Tags: தனுசு லக்னப் பலன்கள் 2016 தனுசு லக்னப் பலன்கள் தனுசு ராசி பலன்கள் 2016 தனுசு ராசி பலன்கள் குருப்பெயர்ச்சி பலன்கள் தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் 2016 தனுசு ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|