LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

உத்தரம் 2,3,4 அஸ்த்தம் சித்திரை 1,2

சுறுசுறுப்பும் ஊக்கமும் விடாமுயற்சியும் உள்ள உங்கள் கன்யாலக்னத்திற்கு லக்னத்திலே குருவும் 4ம் இடத்தில் சனியும் 6ம் இடத்தில் கேதுவும் 12ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது நற்பலனே ஆகும். இதுவரை தள்ளிப்போன விஷயங்கள் இனிதே நடந்தேறும். மேலும் சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் செல்வாக்கும் அதிகரிக்கும். குரு லக்னத்தில் சஞ்சரிப்பது பெரிய மனிதர்களின் நட்பும் அன்பும் கிட்டும். தெய்வீக விஷயங்களில் மனம் ஈடுபடும். ஆன்மீக நாட்டங்கள் அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் நல்லவிதமாக நடக்க சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் ஒத்துப்போகும். பேச்சில் இனிமையும் வசிகரமும் கூடும். கொடுத்த பணம் வந்து சேரும். பணப்புழக்கம் ஓரளவு சாதகமாக இருக்கும்.

உடன்பிறந்தசகோதர சகோதரர்களால் மனவருத்தங்கள் வந்து சேரும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். அண்டை அயலாருடன் கவனமாக பேசிப் பழகுதல் வேண்டும். இடமாற்றம் ஊர் மாற்றம் ஒரு சிலருக்கு அமையும். பழைய இடத்தை விற்று புதிய இடம் வாங்க வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். அடிக்கடி ரிப்பேர் மராமத்து வேலைகள் வீட்டில் இருந்து கொண்டே இருக்கும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனமாக இருத்தல் வேண்டும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. உங்களைப் பற்றிய வீண் வதந்திகள் பரப்ப வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளால் சற்று வருத்தங்களும் வேதனைகளும் ஏற்படும். குழந்தைகள் விஷயத்தில் சற்று கண்டிப்பும் கறாரும் அவசியமாகும்.

தாயரால் எதிர்பாராத தனவரவுகளும் பொருள்வரத்தும் கிட்டும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் அமையும். விட்டதைப் பிடிக்க மனம் அலைபாயும். எனவே எதிலும் கவனம் தேவை. வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். போட்டித் தேர்வுகளில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். விருந்து கேளிக்கைகளில் நாட்டமிராது. காதல் விஷயங்கள் சற்று சுமாராகவே இருக்கும். அதே சமயம் கணவன் மனைவி ஒற்றுமை இன்பமாக இருந்து வரும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். அடிக்கடி வெளியூர் செல்ல சந்தர்ப்பம் அமையும். விசாவில் தடையேற்பட்டுப் பின் கைக்கு வந்து சேரும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான சந்தர்ப்பம் அமையும். அறுவை சிகிச்சைக்கான சரியான காலமிதுவாகும். உடல் நலத்தில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்துதல் வேண்டும்.


வேலை, உத்யோகம் (JOB)

அரசு மற்றும் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சற்று சுமாரான காலமாகும். அடிக்கடி வேலையில் விடுப்பு எடுக்க வேண்டியது வரும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலை உருவாகும். உடன் பண்புரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது சற்று சிரமமாக இருக்கும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு வேலையில் மாற்றம் அமையும். ஒரு சிலருக்கு உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். தேவையற்ற பேச்சைக் குறைத்தல் வேண்டும்.


தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

ஆரம்பத்தில் சுயதொழில் லாபகரமாக இருந்தாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் சற்று சுமாராகவே இருந்துவரும். புதிய தொழில்கள் தொடங்குவதில் அதிகக் கவனம் தேவை. கூட்டுத்தொழிலில் பணம் மாட்டிக் கொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பாதால் அதிக அளவில் கடன் கொடுத்தல் கூடாது. பார்ட்னர்ஷிப்புகளில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம் உண்டு. உற்பத்தி சார்ந்த துறை லாபகரமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் நல்ல லாபகரமாக அமையும். ஷேர் மார்க்கெட்டில் அதிகக் கவனம் தேவை. தேவையில்லாமல் பணத்தை முதலீடு செய்தல் கூடாது. மேலும் ஓட்டல், ஆடை, ஆபரணம், பிளாஸ்டிக்ஸ் தொழில்கள் லாபகரமாக இருக்கும். போக்குவரத்து தகவல் தொடர்பு செய்தி, பத்திரிக்கை ஏற்றமுடன் விளங்கும். இரும்பு எஃகு சிமெண்ட் கனிமவளங்கள் துறை நல்ல லாபகரமாக இருக்கும். மேலும் கமிஷன், ஏஜென்ஸி, புரோக்கர்ஸ், கன்சல்டன்ஸி, ரியல் எஸ்டேட் கல்வி, நிதி, நீதி, வங்கி, ரேஸ், லாட்டரி, சூதாட்டம் சுமாரகவே இருந்து வரும். சாலையோர வியாபாரிகள் நல்ல லாபம் அடைவர். பொறியியல் விஞ்ஞானம் ரசாயனம் மற்றும் உரத் துறைகள் நல்ல லாபகரமாக இருக்கும்.


விவசாயம்

விவசாயம் நல்ல லாபகரமாக இருக்கும். பழங்கள், காய்கறிகள், பூக்கள் லாபகரமாக இருக்கும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்க லாபம் அதிகரிக்கும். புதிதாக இடங்கள் மனை வாங்க வாய்ப்புகள் அமையும். புதிதாக கடன் வாங்க வேண்டியது வரும். கடன்களை கட்டுக்குள் வைத்துக் கொள்வது சிறப்பானது ஆகும்.


அரசியல்

அரசியல் வாழ்வு சற்று சுமாரகவே இருந்து வரும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் குறைந்து காணப்படும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடினாலும் மறுபக்கம் ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டேயிருக்கும். வழக்குகள் சாதகமாக இராது.


கலை

கலைத்துறை சற்று சுமாரகவே இருந்து வரும். சினிமா இசை நடனம், ஓவியம், சிற்பம் ஜோதிடம் சற்று சுமாரகவே இருந்து வரும். அதே சமயம் பணப்புழக்கம் எதிர்பார்த்த அளவு அதிகரிக்கும். ஒரு சிலர் வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.


பெண்கள்

சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்துகொள்ள வாய்ப்பு அமையும். அடிக்கடி பயணம் செய்ய சந்தர்ப்பம் அமையும். பயணத்தில் அதிகக் கவனம் தேவை. வீண் அலைச்சலும் அசதியும் மட்டுமே மிஞ்சும். தேவையற்ற விஷயங்களில் பேசுதல் கூடாது. குடும்பத்தில் புதுவரவுகள் அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் நடைபெற வாய்ப்பு அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யத்திற்கான காலம் இதுவாகும். வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலை மாற சந்தர்ப்பான காலமிதுவாகும். அடிக்கடி வேலையில் லீவு போட வேண்டியது வரும். எனவே வேலையில் கவனம் தேவை. உடன்பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகளும் வேதனைகளும் மிஞ்சும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். காதல் விஷயங்கள் சற்று சுமாரகவே இருந்து வரும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். குழந்தைகளால் தேவையற்ற மனக்குழப்பம் ஏற்பட்டு விலகும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் அதிகரிக்கும் கணவரின் உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை.


மாணவர்கள் 

படிப்பு நன்றாக வரும். உயர்கல்வி பயில ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க சந்தர்ப்பம் அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். உயர்கல்வி பயில இடமாற்றம் ஒரு சிலருக்கு அமையும்.


உடல் ஆரோக்யம்

கண், அடிவயிறு காலில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உடலில் சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உணவில் அதிகக் கட்டுப்பாடு அவசியம். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும்.


பரிகாரம்

சனிக்கிழமை தோறும் “ஆஞ்ச்நேயரை”” வணங்கிவர நற்பலன்கள் கூடும். செவ்வாய்க்கிழமை “சரபேஸ்வரரை” வணங்கி வருதல் நலம். வாய்ப்பிருந்தால் “ஸ்ரீரங்கம்” சென்று வழிபட்டு வர நினைப்பது நடந்தேறும்.

by Swathi   on 08 Jul 2016  1 Comments
Tags: Kanni Rasi Guru Peyarchi 2016   2016 Kanni Rasi Palangal   Kanni Rasi Guru Peyarchi Palangal   2016 Kanni Rasi Guru Peyarchi Palangal   Jupiter Transit Predictions for Kanni Rasi   கன்னி ராசி   2016 கன்னி ராசி பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 கன்னி ராசி(Kanni Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கன்னி ராசி(Kanni Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - கன்னி ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கன்னி லக்னப் பலன்கள்
ஜெய்க்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உட்பட 9 கதாநாயகிகள் !! ஜெய்க்கு ஜோடியாக ஹன்சிகா, நயன்தாரா, த்ரிஷா உட்பட 9 கதாநாயகிகள் !!
கருத்துகள்
28-Jul-2016 20:01:04 vinoth said : Report Abuse
Meel palngal veenum
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.