LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மீன லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

பூரட்டாதி 4ம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி

தெய்வீக சிந்தனையும் ஆன்ம பலமும் விடாமுயற்சியும் உடைய உங்கள் லக்னத்திற்கு 7ம் இடத்தில் குருவும் 10ம் இடத்தில் சனியும் 12ம் இடத்தில் கேதுவும் 6ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது சிறப்பானது ஆகும். நினைத்த காரியங்கள் இனிதே நடந்தேறும். தள்ளிப்போன சுபகாரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். மனம் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றியடைய பாடுபடும். சமூகத்தில் பெயர் புகழ் அதிகரிக்கும். பேச்சில் சாமர்த்தியமும் கூடும். பணப்புழக்கம் தாரளமாக இருந்து வரும். நகைகள் பணப்பத்திரங்கள் இவற்றை பாதுகாத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களைப் பேசுவதோ எழுதுவதோ கூடாது. வீண் வந்தந்திகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

குடும்பத்தில் புது உறவுகள் வந்து அமையும். அந்நியர்களால் லாபம் ஏற்படும். சகோதர சகோதரர்களால் தேவையற்ற மனக்குழப்பங்களும் வருத்தங்களும் வந்து சேரும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். அதனால் மகிழ்ச்சி குறையும். எனவே தேவையற்ற பயணத்தைத் தள்ளிப்போடுதல் வேண்டும். இடமாற்றம் மனைமாற்றம் ஏற்படுவதும் நிறையத் தடைகள் ஏற்பட்டு விலகும். தாயாரின் அன்பும் ஆதரவும் நன்கு கிட்டும். இடம் வண்டி வாகனங்கள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். சொந்த வாழ்க்கையில் நிறையப் பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.

விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபாடு அதிகரிக்கும். விளையாட்டுகளில் கவனமாகச் செயல்படுதல் வேண்டும். காதல் விஷயங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருந்து வரும். உணவுகளை கட்டுப்பாட்டில் வைத்தல் வேண்டும், வாழ்க்கையில் பண நஷ்டம் பொருள் நஷ்டம் ஏற்படும். விட்டதை பிடிக்கும் எண்ணம் வேண்டாம். உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காமல் சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும். நல்ல வேலையாட்கள் அமைவர். வழக்குகள் சாதகமாக வந்து சேரும். வேலை கிடைக்க வாய்ப்பும் ஊதிய உயர்வும் கிட்டும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். சுபகாரியம் செய்ய கடன் வாங்க வாய்ப்பு அமையும். மனைவியின் உடல்நலத்தில் அதிக அக்கறை தேவை. வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். ஆன்மீக விஷயங்களில் பணம் ஈடுபடும். பாஸ்போர்ட் விசா விரைவில் வந்து சேரும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். நண்பர்களால் எதிர்பாராத தனவரவும் பொருள்வரவும் உதவிகளும் கிட்டும்.


வேலை, உத்யோகம் (JOB)

அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களை இங்கு வேலை என்ற அர்த்தத்தில் குறுப்பிடப்படுகிறது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்க சந்தர்ப்பம் கிட்டும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடுதல் கூடாது. வேலையில் திருப்தியற்ற நிலை இருந்து கொண்டேயிருக்கும். நிலுவையில் உள்ள பணங்கள் வந்து சேரும். வேலையின் காரணமாக கணவன் மனைவி பிரிவு ஒரு சிலருக்கு ஏற்படும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். வேலையின் காரணமாக அலைச்சல்கள் அதிகரிக்கும். உயரதிகாரிகளால் தேவையற்ற மன உலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். தேவையில்லாத விஷயங்களைப் பேசுதல் கூடாது.


தொழில் (BUSINESS)  வியாபாரம் (TRADE)

சுயதொழில்கள் புரிபவர்கள் நல்ல ஏற்றம் பெற்று லாபம் அடைவர். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பம் ஒரு சிலருக்கு அமையும். கூட்டுத் தொழில் லாபகரமாக இருந்து வரும். இருப்பினும் கூட்டாளிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டேயிருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாரகவே இருக்கும். தேவைக்கேற்ப பொருடகளை உற்பத்தி செய்தல் வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி லாபகரமாக இருக்கும். நடைபாதை வியாபாரம் சுமாரகவே இருந்து வரும். கமிஷன் ஏஜென்ஸி, கன்சல்டன்சி சுமாராக இருந்து வரும். போக்குவரத்து தகவல் தொடர்பு செய்தி பத்திரிக்கை தொலைக்காட்சி ஊடகங்கள் கடும் போட்டியை சந்திக்கும். ஒட்டல், உணவு, உடை, ஜவுளித் துறைகளில் லாபமேற்படும். இரும்பு சிமெண்ட், கட்டுமானம் கனிமவளம் லாபகரமாகவும் ரியல் எஸ்டேட் சற்று சரிந்தும் காணப்படும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும். எனவே பெரிய அளவில் முதலீடு கூடாது. யூக வணிகம், லாட்டரி கிளப், ரேஸ் நல்ல லாபகரமாக இருந்து வரும். மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் கப்பல் கட்டுதல் மீன்பிடித் தொழில்கள் லாபகரமாக அமையும். நிதி, நீதி, வங்கி, இன்சூரன்ஸ் துறைகள் ஏற்றமுடன் விளங்கும். சுற்றுலாத்துறை சிறப்பாக இருந்து வரும்.


விவசாயம்

விவசாயம் ஒரளவு சாதகமாக இருந்து வரும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்கும். அதனால் லாபம் ஓரளவு கையில் வந்து சேரும். புதிதாக இடங்கள் வாங்க வாய்ப்பு அமையும். கடன் வாங்கி வண்டி வாகனங்கள் வாங்க ஒரு சிலருக்கு சந்தர்ப்பங்ககும் வாய்ப்புகளும் அமையும்.


அரசியல்

தொண்டர்களின் ஆதரவு இருந்தாலும் மக்கள் ஆதரவு சற்று குறைந்து காணப்படும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். புதுப்பதவிகளும் பட்டங்களும் வந்து சேரும். எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பர். நிம்மதி குறைந்து காணப்படும்.


கலை

கலைத்துறையில் ஏற்றம் இறக்கம் இருந்து வரும். பணப்புழக்கம் சற்று சுமாராக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் அமையும். அதனால் நனமையேற்படும். நடனம், நாட்டியம், ஓவியம், சினிமா, இசை, ஜோதிடம், சிற்பம் போன்ற துறைகள் சாதகமாக இருந்து வரும். ஒரு சிலர் வெளியூர் செல்ல வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது.


மாணவர்கள்

கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர். புதிய விஷயங்களைக் கற்பதில் நிறையத் தடைகள் ஏற்பட்டு விலகும். புதிய பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைப்பதில் போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. போட்டித் தேர்வுகளில் எதிர்பாராத வெற்றி கிட்டும். விளையாட்டில் ஆர்வமும் பரிசுகளும் ஒரு சிலர் பெற வாய்ப்பு ஏற்படும்.


பெண்கள்

குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை ஏற்படும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகளும் சந்தர்ப்பங்களும் அமையும். தள்ளிப்போன திருமணம் நடந்தேற வாய்ப்புகள் உண்டு. குழந்தைபாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தைபாக்யம் கிட்டும். காதல் விஷயங்களில் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் இருக்கும். ஒரு சிலருக்கு விவாகரத்தும் இரண்டாவது திருமணத்திற்கான சந்தர்ப்பமும் அமையும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் அமையும். வேலையில் மாற்றமும் ஊர் மாற்றமும் மனக்குழப்பங்களும் வருத்தங்களும் வந்து சேரும். தேவையில்லாத விஷயங்களைப் பற்றி பேசுவது கூடாது. உறவினர்கள் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் வேண்டும். புது ஆடை, ஆபரணச் சேர்க்கை நன்கு அமையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நேரத்திற்கு உணவு உண்ணுதல் வேண்டும். கணவரின் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை.


உடல் ஆரோக்கியம்

கண், காது, மூக்கு, தோள்பட்டைகளில் வலி, வேதனை ஏற்பட்டு விலகும். உடலில் சளித்தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். உஷ்ண மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே உடல் நலத்தில் அதிக அக்கறை கொள்ளல் வேண்டும்.


பரிகாரம்

திங்கள்கிழமை தோறும் “அம்பாளை” விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வருதல் வேண்டும். வாய்ப்பு இருந்தால் “திருச்செந்தூர்” சென்று “முருகனை” தரிசித்து வர நற்பலன்கள் அதிகரிக்கும்.

by Swathi   on 08 Jul 2016  0 Comments
Tags: மீன லக்னப் பலன்கள்   2016 மீன லக்னப் பலன்கள்   மீன ராசி பலன்கள்   குருப்பெயர்ச்சி மீன ராசிபலன்கள்   2016 மீன ராசி குருப்பெயர்ச்சி பலன்கள்   Meena Rasi Palangal   2016 Meena Rasi Palangal  
 தொடர்புடையவை-Related Articles
சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - மீன ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மீன லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மீன லக்னப் பலன்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.