LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - சிம்ம லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

மகம், பூரம், உத்தரம 1ம் பாதம்

எதிலும் எப்பொழுதும் முன்னோடியாக விளங்கும் உங்கள் லக்னத்திற்கு குரு பகவான் 2ம் இடத்தில் சஞ்சாரம் செய்வதும் சனி 4 மற்றும் 5ம் இடத்திலும், கேது 7ம் இடத்திலும், ராகு லக்னத்திலும் சஞ்சாரம் செய்வதும் சிறப்பானது ஆகும். இதுவரை இல்லாத அளவில் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். எடுத்த காரியங்களில் வெற்றியும் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாகவும் வந்து சேரும். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஆர்வமுடனும் செயல்பாடு அமையும். எதிர்பாரத தன்வரவும் பொருள்வரவும் கிட்டும். கையில் பணப்புழக்கம் எப்பொழுதும் தாரளமாக இருந்து வரும். பேச்சில் சாமர்த்தியமும் இனிமையும் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூர் பயணங்கள் அமையும். அதனால் நன்மைகளும் ஏற்படும். யாருக்கும் கடன் கொடுத்தல் கூடாது. கொடுத்த பணம் தவணை முறையில் வந்து சேர வாய்ப்புகள் அமையும்.

உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு வேலை மற்றும் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும். சொத்துக்கள் பிரிவினை ஆகும். வீடு, வண்டி வாகனங்கள் வாங்க வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையும். நகை, பணம், பத்திரங்கள் இவற்றில் அதிகக் கவனம் தேவை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்களால் நன்மை அதிகரிக்கும். அதே சமயம் நெருங்கிய உறவுகளை விட்டுப் பிரிய நேரிடும். குழந்தைகளால் மகிழ்ச்சி நிலவும். அதே சமயம் அவர்களால் தேவயற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகமாவும் சந்தோஷகரமாகவும் அமையும்.

தாயாரின் அன்பும் ஆதரவும் கிட்டும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதுக்கடன் வாங்க வாய்ப்புகள் அமையும். போட்டித் தேர்வில் வெற்றி பெற வாய்ப்பு அமையும். தாய்மாமன்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். உணவுப் பழக்கத்தில் அதிக மாற்றம் தேவை. சதா அலைச்சல்களும் வேதனைகளும் தொடர்ந்து கொண்டேயிருக்கும். கணவன் மனைவி உறவு சற்று சுமாராகவே இருந்து வரும். போக்குவரத்து வண்டி வாகனங்களில் கவனம் தேவை. அறுவை சிகிச்சைக்கான உகந்த காலமாகும். அரசால் அல்லது அரசு ஊழியர்களால் தேவையற்ற பிரச்சனைகளால் அலைச்சல்களும் மனஉலைச்சல்களும் ஏற்பட்டு இறுதியில் நன்மையாகவே நடந்து முடியும். அடிக்கடி ஆலய தரிசனம் கிட்டும். நண்பர்களால் நன்மையேற்படும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் கூடும்.


வேலை உத்யோகம் (JOB)

இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் வந்து சேரும். வேலையின் நிமித்தமாக வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் ஒரு சிலருக்கு கிட்டும். வேலையில் திருப்தியற்ற நிலை காணப்படினும் அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது. வேறு வேலைக்கான உத்தரவாதம் பெறப்பட்டப்பின் வேலையை விடுதல் வேண்டும். வேலையில் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவில் இராது. உடன்பரிபுரிவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.


தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)

சிறு தொழில்கள் ஏற்றமுடன் விளங்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆராய்ந்து ஆலோசித்துப் புதுத் தொழில் தொடங்குதல் வேண்டும். கூட்டுத் தொழிலில் எதிர்பாரத பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். சுயதொழில்கள் சற்று லாபகரமாக இருந்தாலும் பிரச்சனைகளும் இருந்து கொண்டேயிருக்கும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும். பத்திரிக்கை, தகவல் தொடர்பு, கல்வி ஏற்றமுடன் விளங்கும். கமிஷன் ஏஜென்ஸி, கன்சல்டன்சி, வானொலி, தொலைக்காட்சி ஏற்றமுடன் விளங்கும். இரும்பு, எஃகு, சிமெண்ட், மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம், ஜவுளித் துறைகள் சற்று சுமாரக இருந்தாலும் ஜனவரிக்குப் பின் ஏற்றம் பெறும். கட்டுமானம் நிதி, நிர்வாகம் வங்கி, இன்சூரன்ஸ் லாபகரமாக அமையும். கப்பல், மீன்பிடி, நீர், பால் போன்ற துறைகள் சாதகமாக அமையும். லாட்டரி, ரேஸ், கிளப் இவற்றில் அதிகக் கவனம் தேவை. சாலையோர வியாபாரம் நல்ல லாபகரமாக அமையும்.


விவசாயம்

பழங்கள் காய்கறிகள் பூக்கள் உற்பத்தி அதிகரிக்கும். ஆனால் விளைச்சலுக்கேற்ற விலை கிடைப்பது அரிதாக இருக்கும். கடன் வாங்க வேண்டியது வரும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன் அமையும். பணப்புழக்கம் தாரளமாக அமையும்.


அரசியல்

பொதுவாழ்வு ஏற்றம் பெற்றதாக இருக்கும். புதுப்பதவிகள் விருதுகள் வந்து சேரும். வழக்குகளில் தேவையற்ற அலைச்சல்களும் மனவருத்தங்களும் அவமானங்களும் வந்து சேரும். தொண்டர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.


கலை

கலைத்துறை ஏற்றமுடன் இருந்துவரும். எதிர்பாராதவிதமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் மனமாற்றம் அமையும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். அதனால் நன்மைகள் அமையும். கையில் பணப்புழக்கம் இருந்து வரும். தேவையற்ற மனக்குழப்பங்களும் அவமானங்களும் ஒரு சிலருக்கு அமையும்.


மாணவர்கள்

எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும். உயர்கல்வி பயில வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் அமையும். வங்கிக் கடன் கிடைப்பதில் காலதாமதங்கள் ஏற்படும்.


பெண்கள்

அடிக்கடி வெளியூர் செல்ல வாய்ப்புகள் அமையும். தள்ளிப்போன சுபகாரியங்கள் குடும்பங்களில் இனிதே நடந்தேறும். திருமணம் நடக்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். குழந்தைக்கான அறிகுறிகளும் அதற்கான வாய்ப்பும் அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை அமையும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதோ பேசுவதோ கூடாது. இதுவரை வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் மாற்றம் இடமாற்றம் ஒரு சிலருக்கு அமையும். பாஸ்போர்ட் விசா எளிதில் வந்து சேரும். பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். உடலில் அடிக்கடி அசதியும் சோர்வும் ஏற்பட்டு விலகும். கணவரின் உடல் நலத்தில் அதிகக் கவனம் தேவை. காதல் விஷயங்கள் சற்று சுமாரகவே இருந்து வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உயரதிகாரிகளால் தேவையற்ற மனருத்தங்கள் வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களின் அன்பும் ஒத்துழைப்பும் கிட்டும். குழந்தைகளால் நன்மைகளும் அதே சமயம் அவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.


உடல் ஆரோக்யம்

சளித்தொல்லைகள் இல்லாமல் உடலைப் பேணுதல் வேண்டும். தலை, அடிவயிறு கால் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். சர்க்கரை நோய் இருப்பின் மிகுந்த கட்டுப்பாடு அவசியம்.


பரிகாரம்

“செவ்வாய்க்கிழமை” தோறும் “முருகனை” வணங்கி வருதல் நலம். அத்துடன் “ப்ரித்தியங்கரா தேவியை” வணங்கிவர நன்மை ஏற்படும். வாய்ப்பிருந்தால் “திருப்பதி” செனறுவர நற்பலன்கள் அதிகரிக்கும்.


by Swathi   on 08 Jul 2016  0 Comments
Tags: Jupiter Transit Predictions for Simma Rasi   2016 Jupiter Transit Predictions   2016 Simma Rasi Palangal   Simma Rasi Palangal   Guru Peyarchi   2016 Guru Peyarchi   Guru Peyarchi Palangal  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மீனம் ராசி(Meenam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 கும்பம் ராசி(Kumbam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கும்பம் ராசி(Kumbam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 தனுசு ராசி(Dhanusu Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 துலாம் ராசி(Thulam Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 துலாம் ராசி(Thulam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 கன்னி ராசி(Kanni Rasi)  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 கன்னி ராசி(Kanni Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017-2018 சிம்ம ராசி  குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 சிம்ம ராசி குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.