LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - விருச்சிகம் லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

விசாகம் 4ம் பாதம் அனுஷம், கேட்டை

எப்பொழுதும் சுறுசுறுப்பும் உற்சாகமும் விவேகமும் உடைய உங்கள் விருச்சிக லக்னத்திற்கு 11ம் இடத்தில் குருவும் 2ம் இடத்தில் சனியும் 4ம் இடத்தில் கேதுவும் 10ம் இடத்தில் ராகுவும் சஞ்சாரம் செய்வது மிகப் பெரிய நற்பலன்கள் ஆகும். சமூகத்தில் எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். பேச்சில் சாமர்த்தியம் இருந்தாலும் கவனமாகப் பேசிப்பழகுதல் வேண்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருந்து வரும். பணப்புழக்கம் சரளமாக இருந்து வரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் விருப்பமும் அதிகரிக்கும். நகைகள், பணங்கள், பத்திரங்கள் இவற்றை கவனமாக கையாளுதல் வேண்டும். அடிக்கடி பயணங்கள் அமையும். அவற்றால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும்.

இடமாற்றம் மனைமாற்றம் ஒரு சிலருக்கு அமையும். சகோதர சகோதரிகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் இனிமேல் இனிதே நடந்தேறும். தாயாரின் உடல்நலத்தில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்துதல் வேண்டும். இடம், மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். விருந்து கேளிக்கைகளில் அளவோடு இருத்தல் வேண்டும். இல்லையேல் அதனால் தேவையற்ற வருத்தங்களும் அவமானங்களும் வந்து சேரும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். அதே சமயம் அவர்களால் மனவருத்தங்களும் வேதனைகளும் மிஞ்சும். காதல் விஷயங்களில் அதிகக் கவனம் தேவை.

யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. கொடுத்தப் பணங்கள் தவணை முறையில் வட்டியோடு வந்து சேரும். தேவையில்லாமல் கடன் வாங்குதலும் கூடாது. தாய்மாமன் அன்பும் ஆதரவும் கிட்டும். வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். வீட்டு வளர்ப்புப் பிராணிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும். நோயின் தன்மை அதிகரித்துக் காணப்படும். இக்காலங்களில் அறுவை சிகிச்சைக்கான காலமிதுவாகும். எல்லோரையும் சந்தேகித்தல் கூடாது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடுதல் கூடாது. அடிக்கடி ஆலய தரிசனம் கிட்டும். தந்தையாரின் அன்பும் ஆதரவும் இருந்து வரும். பாஸ்போர்ட் விசா சீக்கிரம் வந்து சேரும். வெளிநாடு செல்வதில் இருந்த தடை நீங்கி பயணம் மகிழ்ச்சியளிப்பாதாக இருந்து வரும்.


வேலை, உத்யோகம் (JOJOB)

வேலை என்றால் இங்கு அரசு தனியார் துறை இரண்டையும் இங்கு குறிப்பிடப்படுகிறது. வேலை தேடுபவர்களுக்கு சீக்கிரம் வேலை கிட்டும். கிடைக்கும் வேலையில் மகிழ்ச்சியும் உத்யோக உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். வேலையின் காரணமாக ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். வேலையில் ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெறுவர். பென்ஷன், பி.எப், கிராஜுவட்டி ஒரு சிலருக்கு மொத்தமாக வந்து சேரும். உடன் பணிபுரிபவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக்க் கவனம் செலுத்துதல் வேண்டும்.


தொழில் (BUSINESS)  வியாபாரம் (TRADETRADE)

சிறுதொழில்கள் நல்ல லாபம் கிட்டும் சாலையோர வியாபாரிகள் கூலித்தொழில்களில் பணிபுரிபவர்கள் ஏற்றம் பெறுவர். ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இருந்து வரும். உற்பத்தி சார்ந்த துறைகள் நல்ல லாபகரமாக அமையும். சுய தொழில்கள் புரிபவர்கள் அதிக அளவில் முதலீடு செய்தல் கூடாது. லாபம் சற்று குறைந்து காணப்படும். கூட்டுத்தொழில் சற்று லாபகரமாக அமையும். புதிதாகத் தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் வந்து சேரும். பங்குச்சந்தையில் பெரிய அளவில் முதலீடு கூடாது. குதிரை, ரேஸ், லாட்டரி, கிளப்புகள் நல்ல லாபகரமாக இருக்கும். போக்குவரத்து வண்டிவாகனங்கள் தகவல் தொடர்பு பத்திரிக்கை போன்றவைகள் ஏற்றம் பெற்று இருக்கும். இரும்பு எஃகு சிமெண்ட் பிளாஸ்டிக் சில்வர் தொழில் லாபகரமாக இருக்கும். ஓட்டல், ஆடை, ஆபரணம் ஜவுளித்துறைகள் சற்று சுமாரகவே இருந்து வரும். மருத்துவம் பொறியியல் விஞ்ஞானம் கட்டுமானத் துறைகள் வங்கி, நிதி, நீதி, நிர்வாகத்துறைகள் நல்ல லாபகரமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி, புரோக்கர்ஸ் கன்சல்டன்ஸி ரியல் எஸ்டேட் சற்று சுமாராகவே இருக்கும். கனிமவளம், கப்பல், மீன்பிடித் தொழில்கள் லாபகரமாக இருக்கும்.


விவசாயம்

விவசாயம் சற்று லாபகரமாக இருக்கும். கரிப்பயிர்கள் ஏற்றம் மிகுந்து காணப்படும். பணவரவு சற்று தாரளமாக இருந்து வரும். நிலங்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்க வாய்ப்புகள் அமையும்.


அரசியல்

சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய பதவிகளும் பொறுப்புகளும் ஒரு சிலருக்கு வந்து சேரும். வழக்குகள் பயமுறுத்தும் தொண்டர்களின் அன்பும் ஆதரவும் எப்பொழுதும் போல் இருந்து வரும். தேவையில்லாத விஷயங்களைப் பேசுவது கூடாது.


கலை

கலைத்துறை லாபகரமாக இருக்கும். சிற்பம், ஓவியம், சினிமா, இசை, நடனம், நாட்டியம், தொலைக்காட்சி, ஜோதிடம், மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷகரமாகவும் இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். பணவரத்தும், பணப்புழக்கமும் திருப்திகரமாக இருந்து வரும். விருதுகளும் பட்டங்களும் ஒரு சிலருக்கு அமையும்.


மாணவர்கள்

படிப்பில் நல்ல மதிப்பெண்கள் வந்து சேரும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது ஆகும். விளையாட்டில் ஆர்வமும் திறமையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டியது வரும். எதிர்பார்த்த கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு அமையும். படிப்பின் காரணமாக இடமாற்றம் ஊர்மாற்றம் ஒரு சிலருக்கு அமையும்.


பெண்கள்

எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கினாலும் மனதில் ஏதாவது ஒரு குறை அல்லது கவலை இருந்து கொண்டேயிருக்கும். சுபநிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். அடிக்கடி பிரயாணம் செய்ய சந்தர்ப்பங்களும் அதனால் அலைச்சல்களும் ஏற்படும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் வந்து சேரும். ஆடை, ஆபரணச் சேர்க்கைகள் விரும்பியவண்ணம் அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நல்லவிதமாக அமையும். காதல் கனிந்து ஒரு சிலருக்கு திருமணத்தில் முடியும். புத்ரப்ராப்தி ஒரு சிலருக்கு வாய்க்கும். குடும்பத்தில் புதுவரவுகள் வந்து சேரும். அதனால் நன்மையேற்படும். தேவையற்ற பேச்சைக் குறைத்தல் வேண்டும். வேலையில் அதிகக் கவனம் தேவை. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கிடைத்த வேலையை விட்டுவிடாமல் திருப்தியுடன் வேலை பார்த்தல் வேண்டும். நட்பு வட்டாரம் சாதகமாக அமையும். உடலில் சளித்தொல்லைகள் உஷ்ண சம்பந்தமான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். வேலையின் காரணமக வெளியூர் செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். கணவரின் உடல்நலத்தில் அதிகக் கவனம் தேவை.


உடல் ஆரோக்கியம்

இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். தலை, கண், அடிவயிறு இவற்றில் அதிகக் கவனம் தேவை. தலை சுற்றல், பல்வலி, இடுப்புவலி அதிகரித்து விலகும். தொற்று நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும்.


பரிகாரம்

வியாழக்கிழமை தோறும் நவக்கிரகத்தில் இருக்கும் “குருபகவானை” வணங்கிவர நற்பலன்கள் கூடும். வாய்ப்பிருந்தால் “திருப்பட்டூர்” சென்று பிரம்ம தேவனை வணங்கிவர நற்பலன்கள் அதிகரிக்கும்.

by Swathi   on 08 Jul 2016  0 Comments
Tags: Viruchigam Rasi   Viruchigam Rasi Palangal   2016 Viruchigam Rasi Palangal   2016 Guru Peyarchi Viruchigam Rasi Palangal   Viruchigam Rasi Guru Peyarchi Palangal   2016 Viruchigam Rasi Guru Peyarchi Palangal   விருச்சிகம் லக்னப் பலன்கள்  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 விருச்சிகம் ராசி(Viruchigam Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விருச்சிக லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - விருச்சிக லக்னப் பலன்கள்
சனிப்பெயர்ச்சி - விருச்சிகம் ராசி பலன்கள் (2017 - 2020) சனிப்பெயர்ச்சி - விருச்சிகம் ராசி பலன்கள் (2017 - 2020)
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - விருச்சிகம் லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - விருச்சிகம் லக்னப் பலன்கள்
2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிக லக்னம் 2016 ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - விருச்சிக லக்னம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.