LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள்

ஜோதிட இமயம் அபிராமி சேகர் – 99948 11158   

அசுவனி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் 

விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் உடைய உங்கள் மேஷ லக்னத்திற்கு இதுகாறும் 5ம் இடத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் 6ம் இடத்திலும், சனிபகவான் 8,9ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும், ராகு பகவான் 5ம் இடத்திலும் சஞ்சாரம் செய்வது ஓரளவு நற்பலன்களை அளிக்கவல்லதாகும். குரு 6ம் இடத்தில் சஞ்சாரம் செய்வது எடுத்த காரியங்களில் வெற்றியையும் புகழையும் அளிக்கவல்லதாகும். கையில் பணப்புழக்கம் ஒரளவு சீராக இருந்து வரும். பேச்சில் இனிமையும் சாமர்த்தியமும் அதிகரிக்கும், புதிய முயற்சிகளில் வெற்றி பெற வழி ஏற்படும். உடன்பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மையேற்படும். எதிர்பார்த்த விஷயங்கள் அல்லது செய்திகள் வெற்றியாக அமையும். அடிக்கடி பிரயாணங்கள் ஏற்படும். அதனால் நன்மைகளும் ஏற்படும். நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும்.

ஒரு சிலருக்கு இடமாற்றமும் மனை மாற்றமும் அமையும். சொத்துக்கள் வண்டி வாகனங்கள் புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் கிட்டும். தாயாருக்கு அடிக்கடி உடல் ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு விலகும். காதல் விஷயங்களில் அதிகக் கவனமும் எச்சரிக்கையும் தேவை. குழந்தைகளால் மகிழ்ச்சியும் அதே சமயம் அவர்களால் பிரச்சனைகளும் சந்திக்க வேண்டிவரும். கேட்ட இடங்களில் பணம் வரும். நிறைய கடன்கள் வாங்க வேண்டியது வரும். எனவே கடன்களை கட்டுக்குள் வைத்துக் கொள்ளல் வேண்டும். வழக்குகளில் வெற்றி கிட்டும் வேலையில் முன்னேற்றம் அமையும்.

திருமணம் மற்றும் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும் அடிக்கடி விருந்து கேளிக்கைகளில் மனம் ஈடுபடும். ஒரு சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அமையும். எதிர்களால் தொல்லைகள் அதிகரித்தபடியே இருக்கும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அரசாங்கச் செய்திகள் பணவரவுகள் சற்று காலதாமதமாகவே வரும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு விசா சீக்கிரம் வந்து சேரும். வண்டி வாகனங்களில் பயணங்களில் படிகளில் ஏறி இறங்குவதில் சற்று கவனம் தேவை. அறுவை சிகிச்சைக்கான காலமிதுவாகும்.


வேலை, உத்யோகம் (JOB)

வேலை என்றால் இங்கு அரசு மற்றும் தனியார்துறை, இரண்டையும் குறிப்பிடுவதாகும். இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். வேலையில் ஒரு சிலருக்கு மாற்றங்கள் அமையும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தேவையில்லாமல் உயரதிகாரிகளை பகைத்துக் கொள்ளுதல் கூடாது. சக ஊழியர்களால் தேவையற்ற மனவருத்தங்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடுதல் கூடாது. ஒரு சிலருக்கு வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் அமையும்.


தொழில் (BUSINESS) வியாபாரம் ( TRADE)

சுயதொழில் சிறுதொழில் குறுந்தொழில்கள் புரிபவர்கள் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். சரக்குகளை கையாளுவதில் அதிகக் கவனம் தேவை. பொருட்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது சிறப்பானதாகும். புதிய தொழில்கள் தொடங்குவதில் சற்று கவனம் தேவை. தேவையில்லாமல் முதலீடு செய்து அவஸ்தைப்படுதல் கூடாது. பங்குச் சந்தையில் அதிகக் கவனம் தேவை. உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் அறிவைக் கொண்டு தொழில் செய்தல் வேண்டும். பங்குச் சந்தை முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. உற்பத்தித்துறை, சேவைத்துறை சற்று லாபகரமாக இருக்கும். போக்குவரத்து வங்கி இன்சூரன்ஸ் துறைகள் லாபகரமாகவும் மருத்துவம், பொறியியல், இரசாயனம் மற்றும் கனிமவளங்கள் துறை அதிக முன்னேற்றம் அடையும். ஆடை, ஆபரண, அழகுத் தொழில்கள் லாபகரமாக இருக்கும். இரும்பு, சிமெண்ட் துறை சற்று லாபகரமாக அமையும். நிதி, நீதி, வங்கி ஏற்றம் அடையும். சாலையோர வியாபாரம் சற்று லாபகரமாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி புரோக்கரேஜ் தொழில்கள் ஆரம்பத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


விவசாயம் 

விவசாயம் ஆரம்பத்தில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் சனிப்பெயர்ச்சிக்குப்பின் லாபகரமாக அமையும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்க சந்தர்ப்பம் கூடும். தேவையற்ற கடன்களை குறைத்தல் வேண்டும். பழைய கடனை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க வாய்ப்புகள் அமையும்.


அரசியல் 

5ம் இடத்தில் ராகு சஞ்சாரம் செய்வதால் அரசியலில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டேயிருக்கும். தேவையற்ற பிரச்சனைகளும் மன உளைச்சல்களும் அதனால் அவமானம் ஏற்படக்கூடுமாகயால் கூடியவரை சற்று கவனமுடன் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


கலைத்துறை 

கலைத்துறை, சற்றே ஏற்றம் மிகுந்து காணப்பதும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். பணப்புழக்கம் தாரளமாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். சினிமா, இசை, நடனம், நாட்டியம் ஏற்றமாக இருக்கும்.


மாணவர்கள் 

எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் ஒரு சிலருக்கு இடம் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். கல்விக்கடன் எளிதில் கிடைக்கும். மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்ல ஒரு சிலருக்கு வாய்ப்பு கிட்டும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.


பெண்கள் 

அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் சுபகாரியங்களில் கலந்து கொள்ள வாய்ப்புகள் அமையும். அதனால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு மனவருத்தங்கள் அமையும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகரியங்கள் இனிதே நடைபெறும் காலமிது. குழந்தை பாக்யம் கிட்டும் காலமிது. வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலையில் சேர ஒரு சிலருக்கு வாய்ப்புகள் அமையும். காதல் விஷயங்கள் சற்று சுமாரகவே இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக அமையும். உயரதிகாரிகளிடத்தில் தேவை இல்லாமல் பேசுதல் கூடாது. சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் மிக அதிகக் கவனம் தேவை. உடலில் ஏதேனும் அடிபடாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கைகள் அமையும். குடும்பத்தில் புது உறுப்பினர் வருகை அமையும்.


உடல் ஆரோக்கியம் 

சனிப்பெயர்ச்சி வரை, உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. ஆப்ரேஷன் செய்ய உகந்த காலமிது. உடலில் சளித் தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளல் வேண்டும். கால் வயிறு சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகளில் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளதால் சற்று கவனம் தேவை.


பரிகாரம் 

செவ்வாய்கிழமை தோறும் “நரசிங்கப்பெருமாளை” வணங்கிவர நற்பலன்கள் அதிகரிக்கும். வாய்ப்பிருந்தால் ஒரு வியாழக்கிழமையன்று “திருச்செந்தூர்” சென்று முருகனை வணங்கி வர நற்பலன்கள் அதிகரிக்கும்.

by Swathi   on 08 Jul 2016  1 Comments
Tags: குருப்பெயர்ச்சிப் பலன்கள்   2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள்   Mesha Rasi Guru Peyarchi Palangal   2016 Mesha Rasi Palangal   2016 Guru Peyarchi Palangal   மேஷ ராசி குருப்பெயர்ச்சிப் பலன்கள்   மேஷம் ராசி  
 தொடர்புடையவை-Related Articles
2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள்  - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர் 2017 - 2018 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கணித்தவர் : ஜோதிட இமயம் அபிராமி சேகர்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மேஷ லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - ரிஷப லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - மிதுன லக்னப் பலன்கள்
2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கடக லக்னப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் - கடக லக்னப் பலன்கள்
குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2016 குருப்பெயர்ச்சிப் பலன்கள் 2016
கருத்துகள்
16-Jan-2017 12:34:58 Annamalai said : Report Abuse
This gurupeyarcchi is very good
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.