LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- குருப்பெயர்ச்சிப் பலன்கள்

2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள்)

கர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட அலைந்து கொண்டே இருப்பவரும், சாதிக்கும் வலிமையும், பலன் கருதி உதவுபவருமான மகரராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு குருப் பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம். பொதுப் பலன்கள், பார்வை பலன்கள், மூர்த்தி நிர்ணயப்படி சிறப்பு பலன்கள் என அனைத்து இராசி நண்பர்களுக்கும் சீரான சிறப்பான பலன்களே அமையும்.

தங்கள் இராசிக்கு தைரிய, விரய பாவாதிபதியான குரு – ஆவணி 27 க்கு கர்ம பாவத்தில் அமர்கிறார். அதன் காரணமாக ஈசன் பிரம்மனின் தலையைக் கொய்த தோஷத்திற்காக, கிள்ளப்பட்ட அவனின் தலை ஓட்டிலேயே அவர் பிச்சை எடுத்துத் திரிந்தார் என்பது பழம் பாடல். அப்படியிருக்க நாம் எம்மாத்திரம். அனைத்துக் காரியங்களுக்கும் பிறர் தயவையே நாட வேண்டியிருக்கும். சிலருக்கு இதுநாள்வரை பார்த்துக் கொண்டிருந்த வேலையை விடவேண்டிய சூழல் எழலாம். சிலருக்கு இதுநாள்வரை வகித்து வந்த பதவி பறி போகலாம். பதவி உயர்வு கிடைக்க தடை, தாமதங்கள் கூட ஏற்படலாம். மனக்கவலைகளால் உடல் ஆரோக்கியம் கெட்டு, பல வியாதிகளுக்கு வழிவகுக்கலாம்.மாசினும் பணவரவுகள் ஓரளவு வந்து கொண்டுதான் இருக்கும். எவரை நம்பியும் கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் விருப்பங்கள் எதுவும் நிறைவேறாது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு என ஊரைவிட்டுப் போகவேண்டிய சூழ்நிலை எழலாம். மனச் சோர்வால், உடல் சோர்வும் சேர்ந்து கொள்ளும். எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமையாது. அரசு மூலம் எவ்வித ஆதாயங்களையும் எதிர்பார்க்க முடியாது. வியாபாரம், தொழில் புரிபவர்களுக்கு, போட்டிகள் அதிகமாகி உழைப்புக்கேற்ற இலாபம் இருக்காது. வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். பொதுவாழ்வில் மற்றும் அரசியலில் இருப்பவர்களுக்கு கெடுபிடிகள், வேண்டாத டென்ஷன், எதிரிகளின் ஏற்றம் ஆகியவை காரணமாக இறங்குமுகமாக, முன்னேற்றம் எதுவும் இன்றி, பின்னடைவுகளைத் தரும். அவமானங்களும் ஏற்படலாம். அரசுப் பணியாளர்கள் உயர் அதிகாரிகளின் நெருக்கடி தாங்காமல் விடுமுறை எடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே, அமைதியாக மருத்துவ விடுப்பு எடுத்து மனையிலேயே ஓய்வெடுப்பது டென்ஷனையாவது குறைக்கும். பெற்றோர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்.

குரு 5 ஆம் பார்வையாக தனபாவத்தைப் பார்வையிடுவது நல்ல நிலை ஆதலால் இல்லத்தில் இனிய விழாக்கள், சுபகாரியங்கள் சிறப்புற நடைபெறும்.பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். முன்னர் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேர்ந்து இன்ப மயமான வாழ்க்கை வாழ்வர். உடன் பிறந்தவர்கள் வெளியூருக்குப் பிரயாணங்கள் மேற்கொள்வர். மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான விஷயங்களில் மேன்மை ஏற்படும். வக்கீல், மதபோதகர், ஜோதிடர் போன்ற வாக்கால் வருமானம் ஈட்டுவோருக்கு தேவைக்கு அதிகமாகவே வருமானம் வரும்.

குரு 7 ஆம் பார்வையாக சுக பாவத்தைப் பார்வையிடுகிறார் அதன் காரணமாக புதிய நவீன வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். புதிய மனை, வீடு ஆகியவற்றை வாங்கும் யோகம் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். உடுக்கை இழந்தவன் கை போல உயிர் நண்பர்கள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவர். ஆராய்ச்சிக் கல்வி படிக்கும் மாணவர்கள் வழிகாட்டுபவர்கள் உதவியுடன் மேன்மை அடைவர். உங்கள் வாழ்க்கைக்குத் துணைக்கு அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ப புதிதாக, சிறப்பான, கைநிறையச் சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். வழக்கு, வியாஜ்யங்கள் உங்களுக்கு சாதகமாக வெற்றி பெறும்.

குரு தனது 9 ஆம் பார்வையால் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தை பார்வை செய்கிறார். அதன் காரணமாக நீண்ட நாட்களாக இருந்துவந்த வியாதிகள் மருத்துவ முன்னேற்றங்களால் நன் முறையில் குணமாகும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் சமாதானக் கொடி பறக்கவிட்டு நட்பு பாராட்டுவார்கள். பகை மறைந்து புதிய நட்புகள் உருவாகும். மனைவியின் மனம் கோணாமல் ஆடம்பர பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொடுத்து மகிழவைத்து, மகிழ்வீர்கள். சமூகத்தில் தந்தையின் மதிப்பும், மரியாதையும் உயரும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் ஏற்படும்.

மகர இராசியினருக்கு மூர்த்தி நிர்ணயப்படி ரஜத மூர்த்தியாக இரண்டாம் நிலையில் அமைவதால் இந்த இராசிக்காரர்களுக்கு வெள்ளி ஆபரணங்கள், பாத்திரங்கள் ஆகிய சேர்க்கை உண்டாகி நன்மை அளிக்கும்.

வேலை அல்லது உத்யோகம் (JOB)

வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வேலை ஓரளவு அமைய வாய்ப்புண்டு. ஒரு சிலருக்கு வேறு கம்பெனிகளில் மாற வாய்ப்புண்டு. பார்க்கும் வேலையை விட்டுவிடாமல் வேறு நல்ல கம்பெனி அமைந்தால் மட்டுமே வேலையை விடவேண்டும். அரசு வேலை ஒரு சிலருக்கு கிடைக்க வாய்ப்புண்டு. வேலையின் காரணமாக ஒரு சிலர் வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிட்டும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் எதிர்பாராத உதவி கிட்டும். உயரதிகாரிகளிடத்தில் தேவையில்லாமல் பேசுதல் கூடாது. எதிலும் சற்று நிதானம் தேவை. ஒரு சிலருக்கு நிலுவையில் நிற்கும் பணங்கள் வந்து சேரும்.

தொழில் (BUSINESS), வியாபாரம் (TRADE)

தொழிலில் புதிய முயற்சிகள் செய்ய வேண்டிய காலமிது தொழிலில் புதிய கூட்டாளிகள் அல்லது பங்குதாரர்கள் இணைய வாய்ப்புகள் ஏற்படும். சிறுதொழில் சுயதொழில் ஓரளவு லாபகரமாக அமையும். போக்குவரத்து தகவல் தொடர்பு கமிஷன் ஏஜென்ஸி கன்சல்டன்சி, பத்திரிக்கை, எழுத்துத்துறையில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவர். புதிதாக தொழில் தொடங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு ஏற்படும். சுயதொழில் உற்பத்தி சார்ந்த தொழில் புரிபவர்கள் ஏற்றம் பெறுவர். நிதி, நீதி, வணிகம், கப்பல், இரும்பு, எஃகுத்துறை லாபம் தரும். ரியல் எஸ்டேட் ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக அமையும். மருத்துவம், விஞ்ஞானம், இரசாயனம் சாதகமாக இருக்கும். பங்குச்சந்தை சற்று சுமாராகவும் முதலீட்டில் அதிகக் கவனமும் தேவை.

விவசாயம்

விவசாயம் சாதகமாக இருக்கும். புதிதாக நிலம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். தோட்டப்பயிர்கள், காய்கறிகள், பழங்களால் நன்மையேற்படும். புதிய கடனை வாங்கி பழைய கடனை அடைக்க சந்தர்ப்பம் அமையும். விவசாயக் கடன் கிடைக்கும்.

அரசியல்

பெயர், புகழ், அந்தஸ்து, இவற்றுடன் வருமானமும் பெருகும். பட்டம் பதவிகள் தாமாக வந்து சேரும். அரசால் கௌரவிக்கப்பட வாய்ப்புகள் வந்து அமையும். வேலையாட்களும் உண்மையான தொண்டர்களும் அமைவர். அவர்களால் நன்மையுண்டு.

கலைஞர்கள்

கலைத்துறை ஏற்றம் மிகுந்து காணப்படும். எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு பொருளாதாரம் மேன்மையடையும். புதிய ஒப்பந்தகள் ஏற்படும். அதனால் எதிர்பாராத புகழும் பணம் வந்து சேரும். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும்.

மாணவர்கள்

எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க விரும்பிய பாடங்கள் படிக்க வாய்ப்புகள் அமையும். ஒரு சிலருக்கு உயர்கல்வி பயில சந்தர்ப்பம் அமையும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு அமையும். கல்விக்கடன் கிடைக்கவும் வழியேற்படும்.

பெண்கள்

அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சந்தர்ப்பங்கள் அமையும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் கிட்டும். அடிக்கடி பயணம் அமையும். தெய்வ தரிசனம் கிட்டும். உறவினர்களால் தேவையற்ற மனக்குழப்பமும் பிரச்சனைகளும் ஏற்படுமாகையால் சற்று கவனம் தேவை. கணவன் மனைவி உறவு மற்றும் ஒற்றுமை சுமாராக இருக்கும். குழந்தைகளால் நன்மையும் அவர்களால் மனஉலைச்சல்களும் ஏற்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வேலையில் முன்னேற்றமும் ஊதிய உயர்வும் அமையும். சகபணியாளர்களால் நன்மையேற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேர்க்கைகள் வந்து சேரும். உடலில் சளித்தொல்லை இல்லாமல் பார்த்துக் கொள்ளல் அவசியம்.

உடல் ஆரோக்யம்

அடிவயிறு, கல்லீரல், இவற்றில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது உத்தமம். சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளவும், காலில் பிரச்சனைகள் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ளல் அவசியம். தோலில், சிரங்கு, அரிப்பு போன்றவை உடம்பில் வராமல் பார்த்துக் கொள்ளல் நலம்.

மகரத்திற்க்கு - ரஜத மூர்த்தியாக இருப்பதால் சுப பலன் சிறிதளவு குறையும். (10) 65%

by Swathi   on 11 Aug 2017  5 Comments
Tags: Magaram Rasi   Guru Peyarchi Palangal Magaram Rasi   Magaram Rasi 2017 Guru Peyarchi Palangal   Tamil Guru Peyarchi Palangal for Magaram Rasi   Magaram Rasi Tamil Palangal   2017 - 2018 Guru Peyarchi Magaram Rasi   மகரம் ராசி  
 தொடர்புடையவை-Related Articles
2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர் 2017-2018 மகரம் ராசி(Magaram Rasi) குருப்பெயர்ச்சி பலன்கள் : கணித்தவர் - அபிராமி சேகர்
2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மகர லக்னப் பலன்கள் 2017 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் - மகர லக்னப் பலன்கள்
கருத்துகள்
23-Feb-2018 15:07:43 RAMON ROCHAMBEAU said : Report Abuse
DEAR SIR DUE TO THE GEANT PLANETS JUPITOR AND SATURN MOUVINNETS IN THE COSMOS THE HEAVY CHANGES ARRIVE WITH FAST MOUVING GIVING EFFECTS TO HUMAIN LIFE GOOD AND BAD THINGS CONTINUED THIS IS THE VERY GOOD PERIOD FOR ALL TAMIL PEOPLES DUE TO JUPITOR GOES TO GOOD PLACE AND SATURN IS ALSO IN A GOOD PLACE MODERATELY 85 PERCENT GOOD ADVANTAGES WIIL BE HELD IN THIS PERIOD UP TO OCTOBER 2018 AND DO THE PRAYER OF SHIVA LORD OF KALIYUGA EVERY TIME TO GET SUCESS PLEASE WAIT AND SEE THE GOOD CHANGES THANKS RAMON ROCHAMBEAU FROM PARIS
 
21-Nov-2017 15:40:53 Ramon said : Report Abuse
டியர் சார், AFTER 28TH FEBRUARY THE GEANT PANET ஜூபிட்டர் WILL GIVE MOST POWERFUL EFFECTS இணைப்பிலுன்சஸ் TO ALL THE PEOPLES IN THE வேர்ல்ட் PLEASE WAIT UP TO 28TH FEB 2018 THEN ALL RHE ஒற்றீஸ் WILL BE DESTROYED NEARLY GOOD FOR ALL RAMON ROCHAMBEAU PARIS
 
17-Nov-2017 06:27:05 Ramon said : Report Abuse
THE ONLY PARIHARAM TO JUPITOR IS ONLY EATING VEGETABLES ON THURSDAY AND SATURDAY AND குட் PRAYER SHIVA எவருடைய RAMON ROCHAMBEAU PARIS
 
16-Nov-2017 15:23:18 Ramon said : Report Abuse
தி every aspect of jupitor is always good there is a possibility of getting good jobs and good ஒப்போர்ட்டுனிடிஸ் ANS ஜூபிட்டர் GIVES BENEFITS FOR MARRIAGES FOR YOUNG பெரோப்லேஸ், AND சில்றேன் EDUCATIONS வெள், JUPITOR TRANSIT FOR ALL PEOPLES NEARLY குட் RAMON ROCHAMBEAU PARIS
 
11-Aug-2017 05:52:49 vignesh said : Report Abuse
மிக்க நன்றி உங்கள் தகவலுக்கு ஏதேனும் பரிகாரம் உண்டா
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.