வான மண்டலத்தில் முதல் இராசியாக இருக்கும் மேஷ ராசியில் பிறந்த நீங்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பும் விவேகமும் உடையவர்களாக இருப்பீர்கள். எதிலும் தலைமை பொறுப்பை ஏற்று நடத்தும் திறன் உடையவர்கள். மற்றவர்களின் சொல் கேட்டு நடப்பது போல் தோன்றினாலும் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யும் ஆற்றல் உடையவர்கள். உங்கள் மேஷ ராசி அல்லது லகனத்திற்கு 5ம் இடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் குருவும் 9ம் இடத்தில் சனியும் 11ம் இடத்தில் கேதுவும் ஆரம்பத்தில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
உங்கள் லக்னாபதி செவ்வாய் 11ம் இடத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் விருப்பம் ஆசை அபிலாஷை ஆரம்பத்தில் பூர்த்தியாகும். இது வரை உங்கள் லக்னத்திற்கு சனி பகவான் 8ம் இடத்தில் இருந்து 9ம் இடமான தெய்வ அனுகூலமான ஸ்தானத்தில் சஞ்சரிப்பது மிகவும் விசேஷமாகும். அடிக்கடி ஆலய தரிசனம் தெய்வ தரிசனம் மகான்களுடைய தரிசனம் கிடைக்க வாய்ப்புகள் அமையும். பேச்சில் இனிமை கூடும். இதுவரை வராமல் இருந்து வந்த பணம் பொருட்கள் வந்து சேரும். பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். குடும்பத்தில் புது வரவுகள் வந்து சேரும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய வாய்ப்புகள் அமையும். மேலும் புதிய முயற்சிகளில் ஈடுபட சந்தர்ப்பங்கள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும்.
அம்மாவின் அன்பும் ஆதரவும் அமையும். ஒரு சிலருக்கு இடம் வீடுஇ வண்டி வாகனங்கள் வாங்க அமைப்பு அமையும். அடிக்கடி உடல் ஆரோக்யம் சற்றுப் பாதிப்பு ஏற்பட்டுப் பின் சீராகும். 5ம் இடத்தில் ராகு குழந்தை பாக்யத்தில் சற்று தடையேற்படுத்துவார். அதே சமயம் 6ம் இடத்து குரு குழந்தைகளால் எதிர்பாராத தனவரவையும் மகிழ்ச்சியையும் உண்டுபண்ணுவார். பூர்வீக சொத்துகள் வாங்க அல்லது கிடைக்க சந்தர்ப்பம் அமையும். தந்தையாரால் நன்மையேற்படும். தாய்மாமன்களால் ஒரு சிலர் நன்மை அடைவர். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் அது முடியும். இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன சுபகாரியங்கள் குருப்பெயர்ச்சிக்குப் பின் வேகமெடுக்கும்.
வேலை அல்லது உத்யோகம் (JOB)
6ம் இடத்தில் குரு சஞ்சாரம் செய்வது வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகளை உருவாக்கும். ஒரு சிலருக்கு வேலையில் முன்னேற்றமும் அதனால் பெயரும் புகழும் உண்டாகும். வேலையில் இடமாற்றம் ஊர்மாற்றம் ஏற்படும். உடன்பணிபுரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். 6ல் குரு ஒரு சிலருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்புகளை உருவாக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு வெளியூர்இ வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகும். அடிக்கடி அலைச்சல்கள் அதிகரிக்கும்.
தொழில் (BUSINESS) வியாபாரம் (TRADE)
சிறுதொழில் புரிபவர்கள் ஓரளவு ஏற்றம் பெறுவர். குருப் பெயர்ச்சிக்குபின் சுயதொழில் கூட்டுத் தொழில் புரிபவர்கள் ஏற்றம்பெறுவர். உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று மந்தமாக இருந்தாலும் ராகு கேது பெயர்ச்சிக்குப்பின் சற்று சாதகமாக இருந்து வரும். இக்காலங்களில் தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. நிதி, நீதி, வங்கி இன்சூரன்ஸ் துறைகள் சற்று சுமாராகவே இருந்து வரும். போக்குவரத்து வண்டி வாகனங்கள் தகவல் தொடர்பு சாதகமாக அமையும். இரும்பு எஃகு ரசாயனம் மருத்துவம் சார்ந்தவைகள் ஒரளவு லாபகரமாக அமையும். ஆடைஇ ஆபரணம் அழகு சாதனப் பொருட்கள் துறை சாதகமாக இருந்து வரும். ரியல் எஸ்டேட் ஆரம்பத்தில் சற்றூ தொய்வு ஏற்பட்டாலும். பின்னால் நல்ல லாபகரமாக அமையும். பங்குச் சந்தை ஏற்ற இறக்கமாகவே இருந்து வரும். சாலையோர வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி சாதகமாக இருக்கும்.
விவசாயம்
விவசாயம் நன்கு லாபகரமாக இருக்கும். விளைச்சலுக்கேற்ற விலை கிடைக்கும். பணப்புழக்கம் ஓரளவு நன்கு அமையும். ஒரு சிலர் புதிய விலை நிலங்கள் வாங்க வாய்ப்பு அமையும். தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. காய்கறிகள்இ பழங்கள் இவற்றின் உற்பத்தி லாபம் அதிகரிக்கும்.
அரசியல்
அரசியல் வாழ்வு ஒரு சிலருக்கு சாதகமாக அமையும். உயர்பதவியும் பெயரும் புகழும் அமையும். ஒரு சிலருக்கு பட்டம் பதவி தாமாகவே வந்து சேரும். அரசாங்கத்தால் எதிர்பாராத லாபம் கூடும். எதிரிகள் விஷயத்தில் அதிகக் கவனம் தேவை. தொண்டர்களின் அன்பும் ஆதரவும் அமையும்.
கலைஞர்கள்
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு இவ்வாண்டு சாதகமாக அமையும். குருப்பெயர்ச்சி வரை எதிர்பாராத தனவரவுகள் பொருள்வரவுகள் அமையும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஒரு சிலர் வெற்றியடைய போராடுவீர்கள் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தேவையற்ற விஷயங்களில் தலையிடுதல் கூடாது. வெளியூர்இ வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். அரசாங்கத்தால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வழக்குகள் இழுபறியாகவே இருந்து வரும்.
மாணவர்கள்
எதிர்பார்த்த மதிப்பெண்கள் அமைய கடுமையாகப் போராரட வேண்டியது வரும். அதே சமயம் எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்க வாய்ப்புகள் உங்களுக்கு அமையும். விளையாட்டுகளில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொள்வீர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பும் ஊக்கமும் உடையவர்களாக விளங்குவீர்கள். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. தேவையில்லாத விஷயங்களைப் பேசுவதும் தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதும் கூடாது.
பெண்கள்
குரு 6ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் வேலை தேடுபவர்களுக்கு வேலையும் வேலையில் உயர்வும் வருமானமும் அதிகரிக்கும். எப்பொழுதும் சுறுசுறுப்புடன் விளங்குவீர்கள். குரு 7ம் இடத்தில் சஞ்சரிக்கும் காலங்களில் இதுவரை நடைபெறாமல் தள்ளிப்போன திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடந்தேறும். மேலும் குழந்தை பாக்யத்தை விரும்புவர்களுக்கு அதுவும் நன்கு அமையும். நீங்கள் பார்க்கும் வேலையில் கவனம் தேவை. வேலையில் சற்று சலிப்பு ஏற்பட்டாலும் வேலையை அவசரப்பட்டு விட்டுவிடாதீர்கள். ஏனெனில் அடுத்த வேலை உங்களுக்கு கிடைக்க சற்று காலதாமதம் ஆகும். வீட்டில் சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். ஒரு சிலருக்கு காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாகவும் அது திருமணத்திலும் முடியும். உயரதிகாரிகளின் அன்பும் ஒத்துழைப்பும் நன்கு அமையும். கணவன் மனைவி உறவுகள் மகிழ்ச்சிகரமாகவும் சீராகவும் இருந்து வரும். குழந்தைகளால் நன்மையும் அதே சமயம் அவர்களால் ஒரு சிலருக்கு பிரச்சனைகளும் ஏற்பட்டு விலகும்.
உடல் ஆரோக்யம்
உடலில் முதுகுஇ தோள்பட்டைஇ அடிவயிறு போன்ற இடங்களில் வலி பிரச்சனைகள் தோன்றி மறையும். உடம்பை நன்கு பேணுதல் வேண்டும். தேவையற்ற கவலைகள் உங்களுக்கு தேவையற்ற நோய்கள் உண்டுபண்ணும்.
அதிர்ஷ்ட எண் – 8,5 அதிர்ஷ்ட நிறம் – கருப்பு, பச்சை அதிர்ஷ்ட நாள் – சனி, புதன்கிழமை அதிர்ஷ்ட இரத்னம் – கருநிலக்கல்,மரகதப்பச்சை
பரிகாரம்
“செவ்வாய்க்கிழமை” தோறும் “துர்க்கை” அல்லது “காளியை” வணங்கிவர நன்மையேற்படும். சித்தர்கள் ஜீவசமாதிகள் மசூதிகள் சென்று வணங்கி வருதல் சிறப்பான பலன்களை அளிப்பதாகும்.
|