|
|||||
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சருக்கு மே 2024 ல் வழங்கப்பட்ட கோரிக்கை மனு |
|||||
பெறுநர் மாண்புமிகு அமைச்சர், ஐயா, தமிழ் வளர்ச்சி சார்ந்த பல்வேறு முன்னெடுப்புகளைத் தன்னார்வத்தின் அடிப்படையிலும் தமிழின்மேல் உள்ள பற்றின் அடிப்படையிலும் செய்து வருகிறோம். இதில் கிடைத்த களப்பணி அனுபவத்தில் எங்களைக் கீழ்க்கண்ட வகையில் தமிழ் வளர்ச்சித்துறை உரிய வகையில் பயன்படுத்திக்கொள்ள பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன். 1) நூற்றாண்டுக் காலத் திருக்குறள் பரவலாக்கல், மொழிபெயர்ப்பு வரலாற்றை ஆராய்ந்து ஆறு ஆண்டுகள் ஆய்வின் அடிப்படையில் அமெரிக்கத் வாழ் தமிழர்கள் முன்னெடுப்பில் “Thirukkural Translation In World Languages” , English, Colour 212 பக்கம் நூலைத் தமிழ்நாடு நூலகங்கள், தமிழ்வளர்ச்சித்துறை சார்ந்த நூலகத் தொகுப்புகளில், அலுவலகங்களில் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம். 2) உலகத் தமிழர்கள், ஊடகங்கள், பதிப்பாளர்கள், எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படும் முதன்மையான "வாணி" (www.vaanieditor.com) மென்பொருளை அரசுத்துறைகளில் பயன்படுத்த ஆவன செய்தல். இது ஏற்கனவே தமிழ்நாடு அரசு கணித்தமிழ் விருது, கனடாவின் இலக்கியத் தோட்ட விருது பெற்றது. 3) மாண்புமிகு முதல்வர் அவர்கள் பொறுப்பேற்று மாவட்டத்திற்கு இருவருக்கு மட்டுமே பரிசு என்று இருந்த திருக்குறள் முற்றோதல் விருதின் எண்ணிக்கையின் கட்டுப்பாட்டை நீக்கி 1330 திருக்குறளை முற்றோதல் செய்பவருக்கு ரூபாய் 15000 என்று அறிவித்துள்ள நிலையில் இத்திட்டத்தைச் சரியாக மக்களிடம் கொண்டு செல்ல ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முற்றோதல் பயிற்சியாளரை நியமித்து அவர்களுக்கு அந்த மாவட்ட புரவலர் ஒருவர் உதவியுடன் தமிழ் படித்தவருக்குத் திருக்குறளில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறோம். இதனை மேலும் வலுப்படுத்தத் தமிழ்வளர்ச்சித்துறையுடன் இணைந்து மாவட்டத்திற்கு ஒரு பயிற்சியாளருக்கு ரூபாய் 5000 வழங்கி மாவட்டத்திற்கு 50 மாணவர்களைத் திருக்குறள் முற்றோதல் பயிற்சியாளராக உருவாக்க முடியும் என்று கோருகிறோம். 4) திருக்குறளை முழுமையாகப் பல ஆண்டுகள் தன்னலமில்லா அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் திருக்குறள் சார்ந்த அகவை முதிர்ந்த திருக்குறள் பயிற்றுநர்களுக்கு, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் . தகுதியானவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருது வழங்குவதற்குப் பொருத்தமான களப்பணியாளர்கள் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். 5) உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஒருங்கிணைப்பில் தமிழ் வளர்ச்சி மன்றம் வழங்கும் 40000 திருக்குறள் நூல்களைத் தமிழ்நாட்டில் அணைத்து மாவட்டத்திலும் அடுத்து 9 ஆண்டுகளுடன் (4லட்சம்) மாணவர்களுக்கு இலவசமாக வழங்கத் தமிழ்வளர்ச்சித்துறையின் ஒத்துழைப்பைக் கோருகிறோம். 6) தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிப்பட்டறையை உலகத்தமிழ் அறிஞர்களை அழைத்து வழங்க எங்களைப் பயன்படுத்துமாறு கோருகிறோம். 7) ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் ஆசிரியர்கள், தமிழ்ப் பேராசிரியர்களுக்கு அவர்கள் பிற பாடங்களைப் போல் அல்லாது சமூகத்தைச் செதுக்கிடும் சிற்பிகள் என்பதை வலியுறுத்த, உணர்த்தத் தமிழ்நாடு மட்டுமல்ல பலநாட்டு அறிஞர்களைக்கொண்டு பயிலரங்கம் நடத்துவது. 8) வணிகத் தமிழ்ப்பெயர்களை முழுமையாக நடைமுறைப் படுத்த ஒரு மென்பொருளை வடிவமைத்து தமிழ்ப் பெயர் வைக்காத / உரிய அளவில் சட்டப்படி இல்லாத பெயர்ப்பலகைகளைக் கொண்ட நிறுவனங்களுக்குத் தமிழ்வளர்ச்சித்துறையுடன் இணைந்து "இனிப்பகம்" "அடுக்ககம்" உள்ளிட்ட பெயர்களைப் பரிந்துரைத்து கடிதம் எழுதி பெயர்ப்பலகைகளை மாற்ற வலியுறுத்தல். 9) திருக்குறள் முற்றோதல் முடித்த மாணவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை வழங்குதல். 10) திருக்குறளைத் தேசிய நூலக அறிவிக்கவும், திருக்குறளை யுனெஸ்கோவில் கொண்டு செல்லவும் குழு அமைத்து எங்களையும் அதில் உறுப்பினராக இணைத்துக் கொள்ள வேண்டுகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 03 Nov 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|