LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

21-12-2012-ல் உலகம் அழியுமா?

     எத்தனையோ இன்ப,துன்பங்கள் வந்து சென்றலும் சாகும் நாள் தெரிந்தால் மனிதனின் வாழ்கையே நரகமாகிவிடும். அப்படிதான் நம்மில் சிலர் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதற்கு காரணம் 21.12.2012 தேதியுடன் இந்த உலகம் அழியும் என்ற சில வரலாற்று குறிப்புகள் தான்.உலகம் அழியப்போகிறது என்று கூறும் ஒரு தரப்பினர் தங்களது கருத்துக்கு வழு சேர்க்கும் வகையில் சில சான்றுகளை முன் வைக்கின்றனர்.அதை பற்றியும், உலகம் அழியுமா ! அழியாதா ! என்பது பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

21 - ம் தேதியுடன் முடிகிறது மாயன் கலண்டர் :

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தென் அமெரிக்காவில் மாயன் என்ற ஒரு இனம் வாழ்ந்து வந்தது.இவர்கள் வானவியல்,கட்டிடவியல்,கணித சூத்திரங்கள் ஆகியவற்றில் கைதேர்ந்தவர்களாக இருந்தனர்.இவர்களது காலத்தில் கணிதம் மற்றும் வானவியலின் அடிப்படியில் காலண்டர் ஒன்றை உருவாக்கினர்.அதுதான் தற்போது மாயன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.இன்று நாம் பின்பற்றும் தேதி முறை உள்ளிட்ட பல விஷயங்களை கிட்டத்தட்ட துல்லியமாக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் மாயன் காலண்டர் மூலம் கணித்து வைத்துள்ளனர். சூரியன் காலாவதியாகும் தேதியையும் இவர்கள் கணித்து வைத்துள்ளார்களாம். அதுதான் இந்த 2012 என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

புவியின் துருவங்கள் இடம் மாறும் :

பூமியில் காந்தப் புலம் வடக்கு, தெற்காக இருப்பது அனைவரும் அறிந்ததே. இந்த காந்தப் புலம்தான் உலகை நிலைப்படுத்தி இயங்க வைக்கிறது.ஒவ்வொரு 750000 வருடங்களுக்கும் ஒருமுறை பூமியின் காந்தப் புலம் தலைகீழாக மாறுமாம். அப்படி மாறும்போது அடுத்த 100 ஆண்டுகளுக்கு காந்தப் புலம் என்பதே இல்லாமல் போகுமாம். அப்படி இல்லாமல் போகும் சூழ்நிலையில் புற ஊதாக் கதிர்கள் வெளிப்பட்டு பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஒரு நொடியில் சாம்பலாகிவிடுமாம்.இந்த நிகவும் மாயன் கலான்டரில் சொல்லப்பட்டதே,இதை விஞ்ஞானிகள் சிலர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பனிப்புயல் :

சூரியனில் உருவாகும் பனிப்புயல் காரணமாக ஏற்படும் கதிர்வீச்சு,எரிமலை வெடிப்பு,அல்லது ஒரு பெரிய விண்கல் பூமியை தாக்கி அளித்து விடும் என்றும் சூரியனை ஆராய்ச்சி செய்யும் சில விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இவையெல்லாம் 2012 அழிவுக்கு ஆதாரமாக சொல்லப்படும் காரணங்கள்.

உலகம் அழிவதை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது ?

கண்டிப்பாக 2012-ம் வருடத்தில் உலகம் அழியாது என பல வனவியல் விஞ்ஞானிகள் அடித்து சொல்கின்றனர்.மேலும் 450 கோடி ஆண்டுகளுக்கு உலகம் அழிவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார்கள்.அப்படி ஏதேனும் நிகழ்ந்தால் அதை பல ஆண்டுகளுக்கு முன்னரே கண்டுபிடிக்கும் வசதிகள் நம்மிடம் தற்போது உள்ளது.பலர் 2020-ம் ஆண்டு ஒரு குறுங்கோள் பூமியை தாக்கும் என்று கூறுகிறார்கள். அவ்வாறு தாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் இல்லை. குறுங்கோள் இடம் பெயர்ந்து மியை தாக்கும் நிலை ஏற்பட்டால் அக்னி ஏவுகணை மூலமாக குறுங்கோளை தகர்க்கும் சக்தி உலக ஆய்வுக்கூடத்தில் உள்ளது என நமக்கு மிகுந்த நம்பிக்கையை தருகின்றனர்  வனவியல் விஞ்ஞானிகள்.

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
சனவரி   மாத -ஆசிரியர் கடிதம். சனவரி மாத -ஆசிரியர் கடிதம்.
செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019) செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)
வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா? வாய்மை, மெய்ம்மை & உண்மை வெவ்வேறா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.