LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தன்னம்பிக்கை-வாழ்வியல் Print Friendly and PDF

இளைஞர்களின் வாழ்வு செழிக்க... வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் !!

1. உனக்குத் தெரிந்த நல்லவரை – வல்லவரை குருவாக ஏற்றுக்கொள்.

2. அவருடன் உன் அறிவைப் பெருக்கிக்கொள்ள கேள்வி கேட்டுப் பழகு.

3. படிக்கின்றபொழுது படிப்பை மட்டுமே முதலாவதாகக் கொள்ள வேண்டும்.

4. நல்லவற்றை மட்டும் பழகிக் கொள்.

5. படிக்கின்ற காலத்தில் நட்பை அதிகப் படுத்தாதே. அந்த சமயத்தில் இனிக்கும். பின் கசக்கும்.

6. சிக்கனமாக செலவு செய்து அளவாக சேமித்து வை.

7. விடுமுறைக் காலத்தில் நல்ல நூல்களைப் படித்து பயனடைந்து கொள்.

8. நீ வருத்தப்படும் அல்லது கஷ்டப்படும் அல்லது துன்பமாக நினைக்கிற எந்த செயலாக இருந்தாலும் மற்றவரிடம் பகிர்ந்து கொள்.

9. படிப்பு முடித்தபின் உன்னுடைய நேரத்தை பொழுது போக்குகளின் செலவு செய்வதை விடுத்து ஏதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள். தேடிச்சென்று வாய்ப்பை ஏற்படுத்திக்கொள். தானாக எதுவும் வராது.

10. உன் படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வருத்தப்படாமல் வலிய சென்று இருக்கும் வேலையை செய்.

11. வாழ்வில் உயர்ந்தவர்கள் எல்லாம் கிடைக்கும் வேலையைச் செய்து கொண்டே உயர்ந்த நிலையை அடைந்தனர் என்பது வரலாறு.

12. மனதை தெளிவாக வைத்துக் கொள்.

13. கோபப்படாமல் பொறுமையாக இருந்து நல்லதையே நினைத்து நல்லவற்றையே செய்தால் வெற்றி பெறுவாய்.

14. ஒவ்வொரு உயிரும் எதிர்பார்ப்பது அன்பு, ஆதரவு, பாராட்டு. நீ ஒவ்வொருவரிடமும் எதிர்பார்ப்பதும் அதுவே.

15. எல்லோரையும் அனுசரித்துச் சென்று உன் எண்ணத்தைச் செயல்படுத்து.

16. தாழ்வு மனப்பான்மையை துரத்திவிடு. இல்லையேல் இது உன்னைத் துரத்தும்.

17. நீ வெற்றியாளன். எனவே வேகமாக முன்னேறு.

18. நீ தன்னம்பிக்கை உள்ளவன், எனவே தடைகளை உடைத்திடு.

19. உலக உருண்டையை பள்ளியில் மேசையின் மேல் பார்த்திருப்பாய். அதை உன் கைகளில் கொண்டு வா. எப்படி? உலகம் உன்கையில் – நீ உழைத்தால்/ நினைத்தால்.

20. உழைப்பையும் துன்பத்தையும் விற்பனை செய்து வெற்றி மாலை வாங்கியணிந்து வீர நடை செய்ய உன்னை நாளும் தயார்ப்படுத்து.

21. எந்தச் செயலை செய்வதானாலும் திட்டமிட்டு செய். தள்ளிப்போடும் பழக்கத்திலிருந்து தள்ளி நில். வெற்றி உன் செயலில் தெரியும்.

by Swathi   on 02 Apr 2015  0 Comments
Tags: Life Tips   வாழ்க்கை குறிப்புகள்                 
 தொடர்புடையவை-Related Articles
இளைஞர்களின் வாழ்வு செழிக்க... வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் !! இளைஞர்களின் வாழ்வு செழிக்க... வழிகாட்டும் 21 வாழ்க்கை குறிப்புகள் !!
மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பத்து டிப்ஸ் !! மனைவியை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க பத்து டிப்ஸ் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.