அமெரிக்கா நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாக நாசா உள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களாகப் பணிபுரிந்து பணிபுரிந்து வருகிறார்கள்.
நாசாவில் வானிலை ஆய்வு மற்றும் பருவகால மாறுபாடு இலாகா தலைவராக கேத்ரின் கால்வின் என்ற பெண் ஆராய்ச்சியாளர் பணி புரிந்து வந்தார்.
இந்தநிலையில் அமெரிக்கா ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றதிலிருந்து அரசு அலுவலகங்களில் பணி புரிந்து வரும் பலரை பணி நீக்கம் செய்து வந்தார். தற்போது கேத்ரின் கால்வின் உள்ளிட்ட 23 பேரை நாசாவில் இருந்து பணிநீக்கம் செய்து ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
|