LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர பலன்கள் (25 – 9 – 2016 முதல் 01 - 10 – 2016 வரை)

 

ஜோதிட இமயம் அபிராமி சேகர்
Cell – 99948 11158    
மேஷம்
 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி --
       இந்த வாரம் இல்லத்தில் இனிய சுபகாரியங்கள் நடைபெறும். உறவுகள் மற்றும் நண்பர்கள், தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். மேடைப்பேச்சு, பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு முன்னேற்றமான வாரம். அன்னையின் அரவணைப்பால் அகம் மகிழும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல்நிலை சீராக இருக்காது.
பரணி  --
      இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். செல்வாக்கு மிக்கவர்களின் புதிய நட்பால் உங்கள் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும். சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றங்கள் ஏற்படலாம்.
கார்த்திகை  1 ஆம் பாதம்.—
       இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். எல்லாக் காரியங்களுமே சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் அதிகாரிகளின் பலத்த சிபாரிசின் மூலமாகக் கிடைத்துவிடும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். கேளிக்கை விடுதிகளில், ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள் –
      இந்த வாரம் பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறி மகிழ்வு தரும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குழந்தைகளின் பிடிவாத குணத்தால் தொல்லை ஏற்படும்.  வீடு மாற்றம், தொழில் மாற்றம் என வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, அதிக இலாபம்  பெற முயற்சி செய்வீர்கள்.
ரோகிணி  –
       இந்த வாரம் நினைத்தது நினைத்தபடி நடக்கும். வீட்டு விசேஷங்களுக்காக வெளியில் அலைந்து திரியும் நிலை ஏற்படும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். ஒரு சிலருக்கு உழைப்பின் காரணமாக, அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் ஒரளவு சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு இல்லாமல் வங்கியில் ஓவர் டிராப்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள் –
       இந்த வாரம் பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் அழகும் பொலிவும் கூடும். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தாங்களே சமாளித்துக் கொள்வர். என்ன சமாதான முயற்சிகள் மேற்கொண்டாலும், வீட்டில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சச்சரவுகளைச் சமாளிக்க முடியாமல் போகலாம். விபத்துக்களைத் தவிர்க்க வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்கவும்..
மிதுனம்
(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள். –
       இந்த வாரம் இளைஞர்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்குச் சென்று மகிழ்வீர்கள். புது மாடல் இருசக்கர வாகனத்தை வாங்க முயற்சி செய்வீர்கள். நெடுநாட்களாகப் பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக ஆகாயத்தில் மிதப்பார்கள். பெயரும், புகழும் ஓங்கும். உங்களின் அன்பு மிக்க செயல்களால், உறவுகள் மகிழ்ச்சி கொள்வர். புத்திர பாக்கியத்தால் ஒரு நபரை ரேஷன் கார்டில் சேர்க்கும் பாக்கியம் ஏற்படலாம்.
 திருவாதிரை ---
       இந்த வாரம் வாக்குவன்மை ஓங்கும்.  சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் ஏமாற நேரலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  மனோதைரியம் ஓங்கும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.
       இந்த வாரம் மனதில் புதிய வீடு, மனை ஆகியவை வாங்கும் எண்ணம் மேலோங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். தாய் வழி உறவுகளால் எதிர்பார்த்த ஆதாயம் இருக்கும். புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு அவர்களின் சீரிய உழைப்புகாக அரசாங்க விருதுகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வாக்குவன்மையால் வியாபாரத்தில் அதிக இலாபம் ஈட்டுவர்.  
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.
       இந்த வாரம் தனவரவு, கூட்டாளிகள் ஒத்துழைப்பு, எதிர்பாலரால் சந்தோஷம், புகழ், கௌரவம், திருமணம் மற்றும் பெரியவர்கள் ஆசி ஆகியவை ஏற்படும். பணியில் முன்னேற்றம், கீழே பணிபுரிவர்களின் ஒத்துழைப்பு ஆகியவை கிடைக்கும், வெளிநாட்டு வாசம் ஏற்படலாம்.  பெண்களால் இலாபம் உண்டு. தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, உறவுகள் மத்தியில் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.  சங்கடங்கள் தீர்ந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும்.
பூசம் -- 
       இந்த வாரம் ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைத்து, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். வீட்டில் தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என தெய்வீக வாரமாக அமையும். தடையின்றி தனவரவு ஏற்பட்டு, மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும்.
ஆயில்யம் –
     இந்த வாரம் சொத்துக்கள் சேரும், தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாச சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும்.  தொழிலைப் பொருத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். இடைவிடாத உழைப்பின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் –
       இந்த வாரம் திருமணம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படலாம்.  உடன் பிறப்புக்களால் நன்மைகள் உண்டு. சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் மூலமாக கஷ்டமும், சுகமும் மாறிமாறி வரும்.  கலைத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.  உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு முன்னேற்றம் இருக்கும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.
பூரம் –
       இந்த வாரம் பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். தங்கள் சேவைகள் உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.  தலைமைப் பதவிகள் தேடிவரும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.
உத்திரம்- 1 பாதம் –
       இந்த வாரம் உங்கள் மீது மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம், சேட்டைகள் கண்டு மனமகிழ்ச்சி ஏற்படும். சிலருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படலாம். கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும்.  அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்.  பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.
      இந்த வாரம் சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். வியாபார சம்பந்தமாக  வெளிநாட்டுப் பயணங்களும், அதனால் ஆதாயங்களும் ஏற்பட்டு, எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ?
ஹஸ்தம் –
       இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்குப் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். திடீர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம்.  எதிர்பார்த்த அளவுக்குப் பண வருமானம் இருக்கும். உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளால் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். குடும்பத்தார் விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே வாங்கித் தருவீர்கள்..
சித்திரை – 1,2 பாதங்கள் –
       இந்த வாரம் கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபலமானவர்களின் நட்பால் உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வங்கி மூலமான கடனுதவிகள் சிறிது தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும்.  சுற்றுலாத்  தலங்களுக்குக் குடும்பத்துடன் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். எழுத்தாளர்களுக்கு  தங்கள் தொழிலில் ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். வீண் சச்சரவுகளை விலைக்கு வாங்காதீர்கள்.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் –
       இந்த வாரம் மனை வாங்கும் யோகம் ஏற்படும். வங்கிக் கணக்குகளில் கையிருப்புக் கூடும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். படிப்பைப் பொருத்தவரை, உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அன்றாட வருமானத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அரசு அதிகாரிகளுக்குத் துணைபுரியக் கீழ்நிலை உதவியாளர்கள் அமைவர். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான அனுகூலமான பதில்கள் அரசிடமிருந்து  கிடைக்கும்.
சுவாதி –
       இந்த வாரம் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.
விசாகம்- 1,2,3 பாதங்கள் –
       இந்த வாரம் பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்.  தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். உங்கள் குழந்தைகளைக் கருணை உள்ளத்தோடு அணுகுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் –
      இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும்.  புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.  இனிப்பான நல்ல செய்திகள் வரும். எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும்.
.அனுஷம் –
       இந்த வாரம் தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். அரசு சிபாரிசால் அதிகாரம் மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். சிலருக்குத் தலைவலி/கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். கவலை வேண்டாம். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது இழப்பைத் தவிர்க்கும்.
கேட்டை –
     இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், தனசேர்க்கை ஆகியவற்றால் வரும் இன்பத்திற்கு அளவே இருக்காது.. சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாட்டப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் எண்ணமெல்லாம் பணத்தைப் பற்றியதாகவே இருக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் –
       இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.  செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.  நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே நல்ல ஊதியம் அளிக்கும்.  வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.
பூராடம் –
       இந்த வாரம் மனதில் ஏற்படும் தெய்வ சிந்தனையால் மனநிம்மதி கூடும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். ஆரவாரம் மிக்க சூழலில், கேளிக்கை விருந்துகள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். சோதனைகள் அனைத்தையும் சாதனைகள் ஆக்குவீர்கள். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.  பங்களாப் போன்ற பெரிய வீடும் கிடைக்கும். சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம்.
உத்திராடம் –1 ஆம் பாதம் –
       இந்த வாரம் மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---
       இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். தூரப் பயணங்களிலும் எச்சரிக்கை தேவை. தங்களுக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். மதிப்பும், அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும்
திருவோணம்-
       இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதிகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர் சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். சிலருக்குப் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். அரசுப் பதவியில் உள்ளவர்களுக்கு வேண்டியவர்களாகி அவர்களால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  பண விஷயத்தைப் பொருத்தவரை வரவுகள் அதிகமாகி திருப்திகரமான வாரமாக இருக்கும்.
அவிட்டம் 1,2 பாதங்கள் –
       இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் நடக்கும். குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். அதன், காரணமாகத் தாராளமான  பணச் செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். நல்ல விஷயங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும். விவசாயிகளுக்குத் தனவரவு திருப்தி அளிக்கும்
 
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்—
       இந்த வாரம் எதிர்பாராதவிதமாகப் பல திசைகளில் இருந்தும் பணம் வரலாம். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். அரசுப் பணியாளர்களுக்குத் தாமதமான பதவி உயர்வுகள் துறை அதிகாரிகளின் ஆதரவால் விரைவில் கிடைக்கும்.
சதயம்-
       இந்த வார உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  நோட்டுப் புத்தக, ஜெனரல் ஸ்டோர் வியாபாரிகளுக்குப் பொன்னான காலம் ஆகும். நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –
       இந்த வாரம் உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாக அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் –
      இந்த வாரம் மனைவிமார்கள் தங்கள் கணவரிடமிருந்து உண்மைக் காதலையும், உன்னத அன்பையும் பெறுவர்.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். அரசுப் பணியாளர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், புதிய பதவிகள் தேடிவரும். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். பங்குச் சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்வது இழப்பைக் குறைக்கும்.
உத்திரட்டாதி-
      இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடனான உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். அரசு வகை  ஆதாயம் ஏற்படும். வங்கிகள் மூலமாகக் கிடைக்கும்  உதவிகளால் புதிய தொழில் தொடங்கி ஆதாயம் காணும் நிலை ஏற்படலாம். பெண்கள் கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.
ரேவதி-
       இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல் இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வாசல் வந்து நிற்கும்.. மனக்கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும். . பெண்களால் முழுமையான சந்தோஷம் உருவாகும். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது.

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

Cell – 99948 11158    

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி

இந்த வாரம் இல்லத்தில் இனிய சுபகாரியங்கள் நடைபெறும். உறவுகள் மற்றும் நண்பர்கள், தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். மேடைப்பேச்சு, பட்டிமன்றப் பேச்சாளர்களுக்கு முன்னேற்றமான வாரம். அன்னையின் அரவணைப்பால் அகம் மகிழும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல்நிலை சீராக இருக்காது.

பரணி 

இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். செல்வாக்கு மிக்கவர்களின் புதிய நட்பால் உங்கள் எதிர்காலம் ஒளிமிகுந்ததாகும். சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணிமாற்றங்கள் ஏற்படலாம்.

கார்த்திகை  1 ஆம் பாதம். 

இந்த வாரம் நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். எல்லாக் காரியங்களுமே சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலமாக வரவேண்டிய அனைத்துப் பண நிலுவைகளும் அதிகாரிகளின் பலத்த சிபாரிசின் மூலமாகக் கிடைத்துவிடும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். கேளிக்கை விடுதிகளில், ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

ரிஷபம்

(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் 

இந்த வாரம் பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறி மகிழ்வு தரும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குழந்தைகளின் பிடிவாத குணத்தால் தொல்லை ஏற்படும்.  வீடு மாற்றம், தொழில் மாற்றம் என வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, அதிக இலாபம்  பெற முயற்சி செய்வீர்கள்.

ரோகிணி 

இந்த வாரம் நினைத்தது நினைத்தபடி நடக்கும். வீட்டு விசேஷங்களுக்காக வெளியில் அலைந்து திரியும் நிலை ஏற்படும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். ஒரு சிலருக்கு உழைப்பின் காரணமாக, அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் ஒரளவு சமாளித்து விடுவீர்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு இல்லாமல் வங்கியில் ஓவர் டிராப்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்  

இந்த வாரம் பணியிடத்தில் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உங்கள் அழகும் பொலிவும் கூடும். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளைத் தாங்களே சமாளித்துக் கொள்வர். என்ன சமாதான முயற்சிகள் மேற்கொண்டாலும், வீட்டில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சச்சரவுகளைச் சமாளிக்க முடியாமல் போகலாம். விபத்துக்களைத் தவிர்க்க வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்கவும்..

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள் 

இந்த வாரம் இளைஞர்கள் நண்பர்களுடன் பார்ட்டிகளுக்குச் சென்று மகிழ்வீர்கள். புது மாடல் இருசக்கர வாகனத்தை வாங்க முயற்சி செய்வீர்கள். நெடுநாட்களாகப் பெண் தேடி அலைந்தவர்களுக்குத் திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக ஆகாயத்தில் மிதப்பார்கள். பெயரும், புகழும் ஓங்கும். உங்களின் அன்பு மிக்க செயல்களால், உறவுகள் மகிழ்ச்சி கொள்வர். புத்திர பாக்கியத்தால் ஒரு நபரை ரேஷன் கார்டில் சேர்க்கும் பாக்கியம் ஏற்படலாம்.

திருவாதிரை 

இந்த வாரம் வாக்குவன்மை ஓங்கும்.  சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் ஏமாற நேரலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  மனோதைரியம் ஓங்கும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள் 

இந்த வாரம் மனதில் புதிய வீடு, மனை ஆகியவை வாங்கும் எண்ணம் மேலோங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். தாய் வழி உறவுகளால் எதிர்பார்த்த ஆதாயம் இருக்கும். புதிய இடமாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு அவர்களின் சீரிய உழைப்புகாக அரசாங்க விருதுகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வாக்குவன்மையால் வியாபாரத்தில் அதிக இலாபம் ஈட்டுவர்.  

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

இந்த வாரம் தனவரவு, கூட்டாளிகள் ஒத்துழைப்பு, எதிர்பாலரால் சந்தோஷம், புகழ், கௌரவம், திருமணம் மற்றும் பெரியவர்கள் ஆசி ஆகியவை ஏற்படும். பணியில் முன்னேற்றம், கீழே பணிபுரிவர்களின் ஒத்துழைப்பு ஆகியவை கிடைக்கும், வெளிநாட்டு வாசம் ஏற்படலாம்.  பெண்களால் இலாபம் உண்டு. தேவையற்ற பிரச்சனைகளைத் தவிர்க்க, உறவுகள் மத்தியில் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது.  சங்கடங்கள் தீர்ந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும்.

பூசம் 

இந்த வாரம் ஆன்மிகப் பெரியோர்களின் தரிசனம் கிடைத்து, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். வீட்டில் தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என தெய்வீக வாரமாக அமையும். தடையின்றி தனவரவு ஏற்பட்டு, மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவி ழுழுகாமல் இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும்.

ஆயில்யம்  

இந்த வாரம் சொத்துக்கள் சேரும், தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் உல்லாச சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும்.  தொழிலைப் பொருத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். இடைவிடாத உழைப்பின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.

சிம்மம்

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் 

இந்த வாரம் திருமணம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படலாம்.  உடன் பிறப்புக்களால் நன்மைகள் உண்டு. சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் மூலமாக கஷ்டமும், சுகமும் மாறிமாறி வரும்.  கலைத் துறையில் உள்ளவர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.  உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு முன்னேற்றம் இருக்கும். அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருக்கும்.

பூரம்  

இந்த வாரம் பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். தங்கள் சேவைகள் உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.  தலைமைப் பதவிகள் தேடிவரும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும்.

உத்திரம்- 1 பாதம் 

இந்த வாரம் உங்கள் மீது மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின்  சுட்டித்தனம், சேட்டைகள் கண்டு மனமகிழ்ச்சி ஏற்படும். சிலருக்குப் புத்திர பாக்கியம் ஏற்படலாம். கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும்.  அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்.  பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

இந்த வாரம் சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்குத் தங்கள் விருப்பம் போல் உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர்பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். வியாபார சம்பந்தமாக  வெளிநாட்டுப் பயணங்களும், அதனால் ஆதாயங்களும் ஏற்பட்டு, எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ?

ஹஸ்தம்  

இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்குப் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். திடீர்ப் பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம்.  எதிர்பார்த்த அளவுக்குப் பண வருமானம் இருக்கும். உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளால் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். குடும்பத்தார் விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே வாங்கித் தருவீர்கள்..

சித்திரை – 1,2 பாதங்கள் 

இந்த வாரம் கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபலமானவர்களின் நட்பால் உங்களுக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வங்கி மூலமான கடனுதவிகள் சிறிது தாமதத்திற்குப் பிறகு கிடைக்கும்.  சுற்றுலாத்  தலங்களுக்குக் குடும்பத்துடன் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். எழுத்தாளர்களுக்கு  தங்கள் தொழிலில் ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். வீண் சச்சரவுகளை விலைக்கு வாங்காதீர்கள்.

துலாம்

(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள்  

இந்த வாரம் மனை வாங்கும் யோகம் ஏற்படும். வங்கிக் கணக்குகளில் கையிருப்புக் கூடும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். படிப்பைப் பொருத்தவரை, உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அன்றாட வருமானத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அரசு அதிகாரிகளுக்குத் துணைபுரியக் கீழ்நிலை உதவியாளர்கள் அமைவர். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான அனுகூலமான பதில்கள் அரசிடமிருந்து  கிடைக்கும்.

சுவாதி  

இந்த வாரம் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்புத் தேவை. விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு.

விசாகம்- 1,2,3 பாதங்கள் 

இந்த வாரம் பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்.  தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதருமங்கள் செய்வீர்கள். உங்கள் குழந்தைகளைக் கருணை உள்ளத்தோடு அணுகுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். சிலருக்குப்  பிரிவும், பகையும் ஏற்படலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு.

விருச்சிகம்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்  

இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும்.  புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.  இனிப்பான நல்ல செய்திகள் வரும். எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும். பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும்.

அனுஷம்  

இந்த வாரம் தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். அரசு சிபாரிசால் அதிகாரம் மிக்க பதவிக்குப் பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். சிலருக்குத் தலைவலி/கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். கவலை வேண்டாம். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது இழப்பைத் தவிர்க்கும்.

கேட்டை 

இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுதல், தனசேர்க்கை ஆகியவற்றால் வரும் இன்பத்திற்கு அளவே இருக்காது.. சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாட்டப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் எண்ணமெல்லாம் பணத்தைப் பற்றியதாகவே இருக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும்.

தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் 

இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடும், அதன் காரணமாகக் குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.  செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட்டு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.  நேர்மையும் கடின உழைப்பும் மட்டுமே நல்ல ஊதியம் அளிக்கும்.  வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

பூராடம்  

இந்த வாரம் மனதில் ஏற்படும் தெய்வ சிந்தனையால் மனநிம்மதி கூடும். எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாக வாங்குவீர்கள். ஆரவாரம் மிக்க சூழலில், கேளிக்கை விருந்துகள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். சோதனைகள் அனைத்தையும் சாதனைகள் ஆக்குவீர்கள். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.  பங்களாப் போன்ற பெரிய வீடும் கிடைக்கும். சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம்.

உத்திராடம் –1 ஆம் பாதம் 

இந்த வாரம் மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். விரிவாக்கங்கள் செய்வதினால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும்.

மகரம்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்  

இந்த வாரம் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். தூரப் பயணங்களிலும் எச்சரிக்கை தேவை. தங்களுக்கு உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவும் ஏற்படலாம். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். மதிப்பும், அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும்

திருவோணம் 

இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதிகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர் சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். சிலருக்குப் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். அரசுப் பதவியில் உள்ளவர்களுக்கு வேண்டியவர்களாகி அவர்களால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  பண விஷயத்தைப் பொருத்தவரை வரவுகள் அதிகமாகி திருப்திகரமான வாரமாக இருக்கும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் 

இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் நடக்கும். குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கான முயற்சிகள் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். அதன், காரணமாகத் தாராளமான  பணச் செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். நல்ல விஷயங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும். விவசாயிகளுக்குத் தனவரவு திருப்தி அளிக்கும்

 

கும்பம்

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள் 

இந்த வாரம் எதிர்பாராதவிதமாகப் பல திசைகளில் இருந்தும் பணம் வரலாம். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. உங்களது நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். அரசுப் பணியாளர்களுக்குத் தாமதமான பதவி உயர்வுகள் துறை அதிகாரிகளின் ஆதரவால் விரைவில் கிடைக்கும்.

சதயம் 

இந்த வார உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.  நோட்டுப் புத்தக, ஜெனரல் ஸ்டோர் வியாபாரிகளுக்குப் பொன்னான காலம் ஆகும். நெடுந்தூரப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள்  

இந்த வாரம் உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாக அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்.

மீனம்

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் 

இந்த வாரம் மனைவிமார்கள் தங்கள் கணவரிடமிருந்து உண்மைக் காதலையும், உன்னத அன்பையும் பெறுவர்.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். அரசுப் பணியாளர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், புதிய பதவிகள் தேடிவரும். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். பங்குச் சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்வது இழப்பைக் குறைக்கும்.

உத்திரட்டாதி 

இந்த வாரம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடனான உறவு மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்புக்களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். அரசு வகை  ஆதாயம் ஏற்படும். வங்கிகள் மூலமாகக் கிடைக்கும்  உதவிகளால் புதிய தொழில் தொடங்கி ஆதாயம் காணும் நிலை ஏற்படலாம். பெண்கள் கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பார்கள்.

ரேவதி 

இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களைக் கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல் இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வாசல் வந்து நிற்கும்.. மனக்கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும். . பெண்களால் முழுமையான சந்தோஷம் உருவாகும். உங்கள் திறமைமிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது.

by Swathi   on 24 Sep 2016  0 Comments
Tags: Nakshatra Rasi Palangal   Rasi Palangal   Abirami Sekar   நட்சத்திர ராசி பலன்கள்   ராசி பலன்கள்   அபிராமி சேகர்     
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.