தமிழ் சினிமாவை பொறுத்த வரை பெரிய வசூல் சீஸன் என்றால் அது பொங்கல்தான். அதனால் தான் பொங்கல் பண்டிகையை குறிவைத்து முக்கியமான பிரபலங்களின் படங்கள் வெளியாக்குவது வழக்கம்.
இந்த வருட பொங்கலுக்கு, விக்ரமின் ஐ, அஜீத்தின் என்னை அறிந்தால், விஷாலின் ஆம்பள, கார்த்தியின் கொம்பன், சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை ஆகிய படங்கள் வெளியாகின்றன. இவற்றில் ஆம்பள, காக்கிச் சட்டை மற்றும் என்னை அறிந்தால் ஆகிய மூன்று படமுமே போலீஸ் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.
கவுதம் மேனன் இயக்கத்தில் என்னை அறிந்தாலில் அஜீத்தின் வேடம் எல்லோரும் அறிந்தது. கம்பீரமான போலீஸ் கெட்டப்பில் கலக்கலாக உள்ளன அவரது ஸ்டில்கள்.
சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்தில் விஷால் போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். காக்கிச் சட்டையில் சிவகார்த்திகேயன் முதல் முறையாக போலீசாக நடித்துள்ளார். எதிர்நீச்சல் படம் எடுத்த செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
பொங்கலுக்கு மோதும் மூன்று போலீஸ் படங்களில் எந்த போலீஸ் அதிகமான வசூலை வாரிகுவிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
|