|
||||||||
35000 (முப்பத்தைந்தாயிரம்) திருக்குறள் நூல்கள் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு இன்று முதல் அனுப்பப்படுகிறது |
||||||||
![]() Aug,9 2023 வணக்கம், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில், உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் , USA வழங்கும் ஆண்டுக்கு 80000 (எண்பதாயிரம்) இலவசத் திருக்குறள் நூல்கள் வழங்கும் திட்டத்தின் மூலம் முதல் 35000 (முப்பத்தைந்தாயிரம்) திருக்குறள் நூல்கள் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி மாநிலத்திற்கு இன்று முதல் அனுப்பப்படுகிறது. அடுத்த ஓரிரு நாட்களில் உங்கள் மாவட்டத்திற்கு, அங்குள்ள அரசுப்பள்ளிகளில் விவரங்களுடன் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி கட்டுகளாக ஒழுங்கு செய்யப்பட்டு மாவட்டத் தொடர்பாளரான உங்கள் முகவரிக்கு வந்து சேரும். இதை வானதி பதிப்பகம் ஒழுங்கு செய்கிறது. நூல் அனுப்பப்படும் பள்ளிகள் நம்மைத் தொடர்புகொண்டு நூல்கள் தேவை என்று கேட்டவர்கள் . அவர்களுக்கு மட்டும் முதல் கட்டமாக அனுப்பப்படுகிறது. அவற்றை பெற்றுக்கொண்டு பத்திரமாக வைக்கவும். விரைவில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்வோம். ஒவ்வொரு மாவட்டத்திலும், இதை ஒரு வாய்ப்பாகக் கருதி , இலவச நூல்கள் வழங்குவதோடு மட்டுமல்லாமல், இலவச திருக்குறள் முற்றோதல் பயிற்சித் திட்டத்தை அரசுப் பள்ளிகளுக்கு கொண்டுசெல்ல வேண்டும் , குறைந்தது 100 மாணவர்கள் இத்திட்டத்தில் அரசு வழங்கும் ரூபாய் 15000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழைப் பெறவேண்டும் என்று திட்டமிடுவோம். மேலும், இந்த நூல்களை வழங்குவதை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் கல்வித்துறை அதிகாரிகள் (CEO , DEO ), மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை இணை இயக்குநர் , மாவட்ட நூலகர் உள்ளிட்டவர்களை அழைத்து சிறு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, அரசுப்பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கு இவற்றை வழங்குவது மிகுந்த பலனை மாவட்ட அளவில் ஏற்படுத்தும். அது குறித்து விரைவில் ஒரு இணையவழி சந்திப்பில் உரையாடுவோம். தற்போது நூல்களை பெற்று பாதுகாப்பாக வைக்க பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 20 Aug 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|