LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழர்களின் கண்டுபிடிப்புகள் Print Friendly and PDF

வாகன விபத்துகளை குறைக்க டூவீலரில் 3 ஜி கருவி : சிவகங்கை மாணவரின் அறிய கண்டுபிடிப்பு !!

இந்தியாவில் வருடம் தோறும் சுமார் ஒரு லட்சத்திற்கு அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.


டூவீலர்களால் ஏற்பாடும் விபத்துக்கள் 75 சதவீதம் அதிகரித்துள்ளன. இதை கட்டுப்படுத்தும் விதமாக, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வி.ஆர். மணிகண்டன், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்திலான

கருவி மூலம், "3 ஜி' வாகன கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ளார். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டூவீலரை பதிவு செய்யும் போது, அதில் இந்த டிவைஸ் பொருத்தலாம். 


இதன் விலை 2,200 ரூபாய். 


இந்த சாதனத்தை வண்டியில் பொருத்திய பின், இதற்காக தனி எண் தரப்படும்.வாகனம் திருடு போனால் அதற்குரிய எண்ணை, மொபைல் போன் மூலம் அழைத்தால் வாகனம் நின்று விடும். அதிலிருந்து எச்சரிக்கை ஒலி எழும்பும். 


வாகனம் இருக்கும் இடத்தை எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கும். மேலும், "ஹெல்மெட்' அணிந்த பின்பே வாகனத்தை இயக்க முடியும். வாகனம் விபத்துக்குள்ளாகும் போது, சம்பந்தப்பட்ட மொபைல் எண்ணிற்கு இந்த இடத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது என எஸ்.எம்.எஸ்., தரும்.


சைடு ஸ்டாண்ட் போட்டிருக்கும் போது, டூவீலரை இயக்க முடியாது. குறிப்பிட்ட இடங்களில் இத்தனை கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் என்பதை கண்டுபிடிக்கும்.


"பிரேக் ஷூ' தேய்ந்து விட்டால், வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்யும்.


இரவு நேரங்களில் மட்டுமே முகப்பு விளக்குகள் எரியும். பகலில் "ஆன்' செய்தாலும் எரியாது.


"எப்.சி.' எடுக்க வேண்டிய தேதியை, அறிவுறுத்தும். திருட்டு வாகனங்களோ, ரோடுகளில் தவறு செய்யும் வாகனங்கள் 200 மீட்டரில் வரும் போதே, நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீசாருக்கு தகவல்

தெரிவிக்கும். 


வாகன "பயோ டேட்டா' வழங்கும் விதமாக "3 ஜி' கட்டுப்பாட்டு கருவியை கண்டுபிடித்துள்ள மணிகண்டனுக்கு, விருதுநகரில் நடந்த மாநில அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.


இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது:


நான் கண்டுபிடித்துள்ள கருவிகளை டூவீலரில் பொருத்தும் போது, ஹெல்மெட் அணியாமல் ஏற்படும் பலியை 95 சதவீதம், விபத்து நடந்த இடத்தை தெரிவிப்பதன் மூலம் பலியை 75 சதவீதம், வேக கட்டுப்பாடு மூலம் 85 சதவீதம், பிரேக் ஷூ, இண்டிகேட்டர், முகப்பு விளக்கு கட்டுப்பாடு, சைடு ஸ்டாண்டு ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளை 95 சதவீதம் குறைக்க முடியும் . டூவீலர்களால் ஏற்படும்

விபத்துகளில் 80 சதவீதத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கான தொகை மிகக் குறைவு தான்.


ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் வாகனங்களுக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு பதிலாக ஜி.எஸ்.எம்., கருவிகளை பயன்படுத்தலாம் என மணிகண்டன் கூறியுள்ளார்.  

by Swathi   on 05 Jun 2014  2 Comments
Tags: Sivagangai Manikandan                    
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
27-Jul-2015 23:38:59 ஆ.அரவிந்தன் said : Report Abuse
ஹாய் எந்த கருவி வனும் 9942164230,9715691640
 
27-Jun-2014 13:40:39 kamalraj said : Report Abuse
ஹாய் இந்த கருவி வேணும், இத எப்படி பெற்று கொள்வது,ப்ளீஸ் கால் மீ 9655630330
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.