LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க விரைவில் பிரிமியம் ரயில்கள் அறிமுகம் !!

ரயில்வேயின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு முக்கியமான வழித்தடங்களில் பிரிமியம் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.  

 

கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வரும் ரயில்வே நிர்வாகம், வருவாயை அதிகரிக்க பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வகையில், விமான கட்டணங்கள் பாணியில், புது ரயில்களை இயக்க இந்திய ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 

 

பயணிகளின் விருப்பத்தை பொருத்து முக்கியமான வழித்தடங்களில் இந்த வகை ரயில்கள் இயக்கப்படும். 

 

சில வழித்தடங்களில் ரயிலில் பயணிக்க, டிக்கெட் கிடைப்பதே இல்லை. அத்தகைய ரயில்களில் பயணிக்க, இரு மாதங்களுக்கு முன், முன்பதிவு துவங்கியதும், அனைத்து டிக்கெட்டுகளும், விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால், கடைசி நேரத்தில், வரும் பயணிகள், ரயிலில் இடம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். 'தட்கல்' டிக்கெட் புக்கிங்கும், துவங்கிய ஒரு சில வினாடிகளில், முடிந்து விடுகிறது. 

 

இதையடுத்து, முக்கிய வழித்தடங்களில், புது ரயில்களை விட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான கட்டணங்கள், ராஜ்தானி, சதாப்தி ரயில்களுக்கான கட்டணங்களை விட கூடுதலாக இருக்கும், முதற்கட்டமாக டில்லி - மும்பை இடையே, சோதனை அடிப்படையில், இந்த புதிய பிரிமியம் ரயில் விடப்படுகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து, ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

பிரிமியம் ரயில்கள் புறப்படும் இடத்தில் இருந்து, வழியில் எங்கும் நிற்காமல், குறிப்பிட்ட நகரத்துக்கு மட்டும் போய் சேரும். வழக்கமாக செல்லும் ரயில்களின், 'வெயிட்டிங் லிஸ்ட்'டை பொருத்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் ரயில்கள், திருவனந்தபுரம், ஆமதாபாத், பாட்னா, ஜம்மு தாவி, புவனேஸ்வர், பெங்களூரு, செகந்திராபாத், லக்னோ ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் விடப்படும். இந்த ரயில்கள், விமான பயணிகளை கவரும் வகையிலும், வழக்கமான ரயில்களில் இடம் கிடைக்காமல் சிரமப்படும் பயணிகளை மனதில் வைத்து அறிமுகப்படுத்தப்படுகிறது. அத்துடன், ரயில்வே சந்திக்கும், 37 சதவீத நெருக்கடியை ஓரளவு சரிக்கட்ட இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

by Swathi   on 27 Jan 2014  0 Comments
Tags: Indian Railway   Railway   India Railway   Premium Trains   Premium Rails   இந்தியன் ரயில்வே   ரயில்வே வருவாய்  
 தொடர்புடையவை-Related Articles
இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்... இந்திய ரயில்வேயில் 18252 காலிப்பணியிடங்கள்...
ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !! ரயில்வேயில் வேலைவாய்ப்பு - பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணபிக்கலாம் !!
இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !! இந்திய ரயில்வேயில் 2774 காலிப்பணியிடங்கள் !!
2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !! 2015 - 16 ஆம் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் - சிறப்பு பார்வை !!
தெற்கு ரயில்வேயில் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியிடங்கள் !! தெற்கு ரயில்வேயில் ஆய்வக உதவியாளர் ஒப்பந்த பணியிடங்கள் !!
இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !! இந்தியன் ரயில்வேயில் 6119 காலிப்பணியிடங்கள் !!
ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் !! ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களும், அறிவிப்புகளும் !!
ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க விரைவில் பிரிமியம் ரயில்கள் அறிமுகம் !! ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க விரைவில் பிரிமியம் ரயில்கள் அறிமுகம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.