|
||||||||
தமிழக முதல்வர் வெளியிட்ட குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகள்! |
||||||||
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில், முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் பங்கேற்றார். திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்னூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியைத் திறந்து வைத்ததோடு திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரையும் வெளியிட்டார். மேலும் திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கி சிறப்பித்ததோடு திருக்குறள் சார்ந்த 6 சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டார். அந்த 6 அறிவிப்புகள் இதோ! 1. புதிய படகுகள்: சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையைச் சென்றடையப் படகுச் சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். புதிதாகப் பெருந்தலைவர் காமராஜர், தென்குமரியைத் தமிழகத்துடன் இணைக்கப் போராடிய மார்ஷல் நேசமணி, திருக்குறளை மொழிபெயர்த்த ஜி.யு.போப் பெயர்கள் இந்தப் படகுகளுக்குச் சூட்டப்படும். 2. ஆசிரியர்களுக்குப் பயிற்சி: திருக்குறளில் ஆர்வம், புலமை மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருக்குறள் திருப்பணிகள் தொடர்ந்து நடைபெறத் திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டுக்கு மாவட்டம் ஒன்றுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படும். 3. அறிவுசார் போட்டிகள்: ஆண்டுக்கு 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தத் திட்டமிடப்படும். 4. குறள் வாரம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் 'குறள் வாரம்' கொண்டாடப்படும். 5. திருக்குறள் மாநாடு தமிழ்த் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும். 6. குறள், உரை: திருக்குறளும், உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுகிறது போல, தனியார் நிறுவனங்களிலும் எழுதுவதற்கு, ஊக்குவிக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். |
||||||||
by hemavathi on 02 Jan 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|