|
||||||||
ரூ.5000 கோடி செலவில் 60 வயது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் திருமணம் |
||||||||
உலக பணக்காரர் பட்டியலில் எலான் மஸ்க்குக்கு அடுத்த இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். 60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார். 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது. இருவரும் மே 2023 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளது.
இவர்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளது. அமெரிக்காவின் ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வரும் டிசம்பர் 28-ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறுகிறது.
இந்தத் திருமண விழாவில் அமெரிக்கப் பிரபலங்கள் பலர் கலந்துகொள்கின்றனர். $600 மில்லியன் (ரூ.5,000 கோடி) செலவில் இந்தத் திருமணத்தை பெசோஸ் ஏற்பாடு செய்துள்ளார் என்று டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
லாரன் சான்செஸ் The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபலத் தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தகுந்தது
|
||||||||
by hemavathi on 22 Dec 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|