LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

போலி கடவுச்சீட்டு பயன்படுத்தினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 10 லட்சம் அபராதம் - வருகிறது புதிய குடியுரிமைச் சட்டம்

 

இந்தியாவில் புதிய குடியுரிமைச் சட்​டத்தை கொண்டு வரும் வகையில், மக்களவையில் குடி​யுரிமை மற்றும் வெளி​நாட்​டினர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் போலி கடவுச்சீட்டு, போலி விசா பயன்படுத்தி நுழைந்தாலோ, தங்​கியிருந்தாலோ, இந்தி​யாவை விட்டு வெளியேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, அதி​கபட்​சம் 7 ஆண்டு சிறை தண்​டனை, ரூ.10 லட்​சம் அபராதம் விதிக்​கப்​படும் என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.


கடந்த 2023-24-ம் நிதி ஆண்​டில் இந்​தி​யா​வுக்கு மொத்​தம் 98.40 லட்​சம் வெளி​நாட்​டினர் வந்​துள்​ளனர். இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும் பாஸ்​போர்ட் சட்​டம் (1920), வெளி​நாட்​டினர் பதிவு சட்​டம் (1939), வெளி​நாட்​டினர் சட்​டம் (1946), குடி​யுரிமை சட்​டம் ஆகிய 4 சட்​டங்​களால் தற்​போது வெளி​நாட்​டினர் வருகை நிர்​வகிக்​கப்​படு​கிறது. இந்த சட்​டங்​களின்​படி, வெளி​நாட்​டினருக்கு பல கட்​டுப்​பாடு​கள் உள்​ளன


கல்வி, வேலை​வாய்ப்​பு, மருத்​துவ சிகிச்சை ஆகிய​வற்​றுக்​காக நீண்ட கால விசா​வில் வரும் வெளி​நாட்​டினர், 14 நாட்​களுக்​குள் வெளி​நாட்​டினர் பதிவு அலு​வல​கத்​தில் பதிவு செய்ய வேண்​டும். பாகிஸ்​தானை சேர்ந்​தவர்​கள் என்றால் 24 மணி நேரத்​தில் பதிவு செய்ய வேண்​டும். இது மட்டுமின்றி, அந்​த​மான் நிகோ​பார் தீவு​கள், ஜம்மு காஷ்மீர், உத்​த​ராகண்ட், இமாச்​சலப் பிரதேசம், ராஜஸ்​தான், வடகிழக்கு மாநிலங்​களுக்கு செல்வதானால் சிறப்பு அனு​மதி பெற வேண்​டும்.


 இது​போன்ற பழைய சட்​டங்​களை ரத்து செய்​து​விட்​டு, புதிய குடி​யுரிமை சட்​டத்தை கொண்​டுவர மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது. அதன்படி, மக்​களவை​யில் குடி​யுரிமை மற்​றும் வெளி​நாட்​டினர் மசோ​தாவை (2025) மத்​திய உள்​துறை அமைச்​சகம் கடந்த 11-ம் தேதி தாக்​கல் செய்​தது.


இந்​தி​யா​வில் போலி பாஸ்​போர்ட், போலி விசா பயன்​படுத்தி ஒரு​வர் நுழைந்​தாலோ, தங்​கி​யிருந்​தாலோ அல்​லது இந்​தி​யாவை விட்டு வெளி​யேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, 2 ஆண்​டு​கள் முதல் அதி​கபட்​சம் 7 ஆண்​டு​கள் வரை சிறைத் தண்​டனை விதிக்​கப்​படும். மேலும், ரூ.1 லட்​சம் முதல் ரூ.10 லட்​சம் வரை அபராத​மும் விதிக்​கப்​படும்.



விசா காலம் முடிந்து இந்​தி​யா​வில் தங்​கி​யிருக்​கும் வெளி​நாட்​டினரை கண்​காணிக்க உதவும் வகை​யில் ஓட்​டல்​கள், பல்​கலைக்​கழகங்​கள், கல்வி நிறு​வனங்​கள், மருத்​து​வ​மனை​கள் ஆகியவை வெளி​நாட்​டினர் பற்​றிய விவரங்​களை சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு தெரிவிக்க வேண்டியது அவசியம். அதே​போல, இந்தியாவுக்குப் பயணியர் வாகனங்களை இயக்கும் சர்​வ​தேச விமான நிறு​வனங்​கள், கப்​பல் நிறு​வனங்​கள் ஆகியவை தங்​களது ஊழியர்​கள், பயணி​களின் விவரங்​களை தெரிவிக்க வேண்​டும்.



மத்திய அரசுக்கு அதிகாரம்: வெளி​நாட்​டினரின் வரு​கையை ஒழுங்​குபடுத்​த​வும், தேவைப்​பட்​டால் அவர்​களுக்கு கட்​டுப்​பாடு​கள் விதிக்​க​வும் இந்த புதிய சட்​டம் மத்​திய அரசுக்கு அதி​காரம் அளிக்​கிறது. வெளி​நாட்​டினர் மற்​றும் குடி​யுரிமை சம்​பந்​த​மான அனைத்து விவரங்​களை​யும் விரி​வாக நிர்​வகிக்க இந்த மசோதா கொண்​டு​வரப்​பட்டுள்ளது.



இந்த மசோதாவில் பல நடை​முறை​கள் எளி​தாக்​கப்​பட்​டுள்​ளன. தற்​போதைய தேவை​களுக்கு ஏற்ப, புதிய அம்​சங்​களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. சட்​டங்​களை எளி​தாக்​கு​வது, தேவையற்ற அம்​சங்​களை நீக்​கு​வது, எளி​தாக தொழில் செய்​வதை ஊக்​கு​விப்​பது, நாட்​டின் பாது​காப்பு அம்​சங்​கள், பொருளா​தார வளர்ச்​சி, சுற்​றுலாவை மேம்​படுத்​து​வது ஆகிய​வற்றை கருத்​தில் கொண்​டும் இந்​திய புதிய மசோதா கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.



 

 

by hemavathi   on 17 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
10 ஆண்டுகளில்  17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா 10 ஆண்டுகளில் 17 கோடி பேரை வறுமைக் கோட்டுக்கு மேல் உயர்த்திய இந்தியா
பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்  என்னென்ன? பிரதமர் மோடியின் சவுதி அரேபியா பயணத்தால் ஏற்பட்ட பலன்கள் என்னென்ன?
பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா பயணிகள் விமானப் போக்குவரத்தில் சீனாவை மிஞ்சும் இந்தியா
இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க் இந்தாண்டு இறுதிக்குள் இந்தியா வருகிறார் எலான் மஸ்க்
அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா அடுத்த மாதம் விண்வெளிக்குப் புறப்படுகிறார் சுபான்ஷு சுக்லா
இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் பல்வேறு தளர்வுகளை அறிவித்த சீனா
அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம்  இந்தியா வருகிறார் அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி,வான்ஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்
டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டெல்லியில் தங்கினால் வாழ்நாளில் 10 ஆண்டுகள் குறைந்துவிடும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.