|
|||||
ஒரு கேனில் 30 முறை மட்டுமே தண்ணீரை நிரப்ப வேண்டும் - குடிநீர் விற்பனைக்கான நெறிமுறைகள் அறிவிப்பு |
|||||
குடிநீர் கேன்களில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து தண்ணீரை நிரப்ப வேண்டும் என, குடிநீர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. .
தமிழக அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் இன்று நடைபெற்ற உணவு வணிகர்களுக்கான உணர்திறன் பயிற்சி முகாமில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ளனர்.
"குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்தது 6 மாதத்துக்கு ஒரு முறையாவது குடிநீர்த் தொட்டியைச் சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல் நிறுவனத்துக்கான உரிமம் பெற்றவர்கள் காலாவதி தேதியைச் சரியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும். உரிமம் காலாவதியாகி விட்டால் ஒவ்வொரு நாளும் ரூ.100 அபராதமாக வசூலிக்கப்படும். உதாரணமாக 2 மாதமாக உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்றால் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
அதேபோல் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதன் பிளாஸ்டிக் தன்மை மாறிவிடும். அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும்.
குறிப்பாகக் குடிநீர் கேன்களில் உள்ள மூடிகள் சீல் செய்யப்பட்டு, அதில் மட்டும் தான் அழியாத மையில் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அதேபோல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தி வீசப்படும் சிறிய வகைக் குடிநீர் பாட்டில்களில் குடித்துவிட்டுக் கசக்கிப் போட வேண்டும் என்ற வாசகமும் இடம்பெற்றிருக்க வேண்டும்" என்று உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
|||||
by hemavathi on 21 Mar 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|