'ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் பங்கேற்பதில் நடிகர்கள் பொறுப்பை உணர வேண்டும்'~இயக்குனர் அமீர்
ஆன்லைன் விளையாட்டுகளால் தற்கொலைகள் மலிந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்விளையாட்டுகளின் விளம்பரங்கள் பிரபலமான நடிகர்களைக் கொண்டு வெளியிடப்படுகின்றன. இதன் விபரீதங்கள் அறியாமல் உயிரை இழக்கும் அபாயத்திற்கு இளைஞர்கள் செல்வது மிகப்பெரும் சோகமாகும். இந்நிலையில் திரை பிரபலமான இயக்குனர் அமீர் அவர்கள் பொறுப்பு மிக்க கருத்தினை தெரிவித்திருக்கிறார்.
"ஆன்லைன் விளையாட்டு விளம்பரங்களில் பங்கேற்பதில் நடிகர்கள் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.நடிகர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளக் கூடிய விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை". என்று இயக்குனர் அமீர் கூறியுள்ளார் .
மேலும் "இரசிகர்கள் நடிகர்களை திரையரங்குகளில் மட்டும் பார்த்து சந்தோஷப்பட வேண்டும் அவர்களை வீட்டிற்கு சுமந்து செல்வது நல்லதல்ல" எனவும் அமீர் கூறி உள்ளார்.
|