|
||||||||
மணிமேகலை அமுத சுரபி நாள் - அட்சயதிதி இரண்டுக்கும் ஏதும் தொடர்பு உண்டா? |
||||||||
![]() 'அமுத சுரபி நாள்' இன்று அட்சயதிதி என்று சொல்லி , நகைக்கடைகளில் நகை வாங்கக் கூட்டம் அலை மோதுகின்றது. உண்மையில் இந்த நாளுக்கும் நகைக்கும் எந்தத் தொடர்புமில்லை. 'குன்றிமணி அளவு தங்கம் வாங்கினாலும் அது குன்று போலப் பெருகும்' என ஒரு கும்பல் அடித்து விடுகின்றது. சென்ற ஆண்டுகளில் குன்றிமணி ( குன்றிமணி > குண்டுமணி) அளவு தங்கம் வாங்கிய எத்தனை பேருக்கு இப்போது குன்று ( மலை) அளவுக்குத் தங்கம் பெருகியுள்ளது என ஏதாவது தரவுகள் இருக்கின்றதா? கடந்த ஆண்டுகளில் வாங்கியவர்களாவது நினைத்துப் பாருங்கள்! 'அட்சயதிதி ', 'அட்சய பாத்திரம்' ஆகிய பிற மொழிச் சொற்களைத் தவிர்த்து, முறையே 'அமுதசுரபி நாள்' , 'அமுதசுரபி' போன்ற தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தும் போது; இந்த நாளினை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்ற தெளிவு மக்களுக்குக் கிடைக்கும். 🙏 'அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இது கேள்! மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் இலது கண்டதில்' 🙏
-------------------------தேமொழி , கலிபோர்னியா, பதில்------------------------------------- //// மணிமேகலை 'அமுதசுரபி' எனும் திருவோட்டினை ஈழத்தின் மணிபல்லவத்தில் பெற்றுக் கொண்ட நாளே இன்றைய நாளாகும். //// கருத்துப் பிழை: மணிபல்லவம் தீவில் மணிமேகலைக்கு (ஆபுத்திரன் பொய்கையில் எறிந்த) அமுதசுரபி கிடைத்த நாள் வைகாசி விசாகம் முழு நிலவு நாள். புத்தர் இவ்வுலகில் அவதரித்த திருநாளாகவும், அவர் ஞானம் பெற்ற நாளாகவும் இந்தப் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. மணிபல்லவத்தீவின் 'கோமுகி' என்னும் பொய்கையிலிருந்து 'அமுத சுரபி' என்னும் அட்சயபாத்திரம் ஒவ்வோர் ஆண்டும் வைகாசித் தூய நிறைமதி நாளில் தோன்றும்; அதில் இட்ட அமுதம் கொள்ளக் கொள்ளக் குறையாது வளர்ந்துகொண்டே இருக்கும் என அப்பகுதியைக் காத்து நிற்கும் தீவதிலகை மணிமேகலையிடம் கூறுகிறாள். இதுதான் மணிமேகலை காப்பியத்தில் உள்ள தகவல். |
||||||||
![]() |
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 01 May 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|