|
|||||
பிரதமர் மோடிக்கு அமெரிக்கப் பாடகி மேரி மில்பென் பாராட்டு |
|||||
![]()
பிரதமர் நரேந்திர மோடிக்கு, அமெரிக்காவின் பிரபலப் பாடகியான மேரி மில்பென் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளையும் பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கத்தோலிக்கத் தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார்.
இதைத் தொடர்ந்து ஆப்பிரிக்க-அமெரிக்கப் பாடகியும், நடிகையுமான மேரி மில்பென் தனது வாழ்த்துகளைப் பிரதமர் மோடிக்குத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் "பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பின் மிகப்பெரிய பரிசாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாகவும் இயேசு கிறிஸ்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் எனது இரட்சகராகிய கிறிஸ்துவை கவுரவம் செய்ததற்காகப் பிரதமர் மோடிக்கு நன்றி. கிறிஸ்து தொடர்பாக நீங்கள் கூறிய வார்த்தைகள் எனது மனதை நெகிழ்வித்தன. இந்தியாவில் உள்ள என் சகோதரச் சகோதரிகளுக்குக் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்" என்று பாடகி மேரி மில்பென் கூறியுள்ளார்.
இதையடுத்து பாடகி மேரி மில்பென்னுக்கு எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். “கிறிஸ்துவின் போதனைகள் அன்பு, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றுகின்றன. இந்த உணர்வை வலுப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டியது அவசியம்" என்று அதில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார், .
|
|||||
by hemavathi on 24 Dec 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|